26/09/2025
https://youtu.be/T0pjR2oiftI?si=pwTxJ4mMLmQA9yKs
Tamil audio novels/எஸ்.ஜோவிதாவின் யாரின் மனம் யாருக்கென்று/Romantic Story/TamilnovelsAudiobooks
All,This video is the audio novel of S.Jovitha's Yaarin manam Yaarukkendru' uploaded with the author's consent.This is the official...
08/02/2025
Amazon.in
https://www.amazon.in/dp/B0DWFQG84H
Amazon.com
https://www.amazon.com/dp/B0DWFQG84H
தேயாத எனக்கான வெண்ணிலவே (Theyatha Enakaana Vennilave) (Tamil Edition)
எத்தனை சொத்துக்கள் இருந்தாலும், கோடி கோடியாக செல்வங்கள் சேர்த்தாலும், வாழ்க்கையை வளமாக வாழ்ந்தவர் எத்தனை பேர.....
02/01/2025
Premalatha Balasubramaniam யப்பா என்ன ஒரு விமர்சனம்!!! சத்தியமா காலையில எதிர்பார்க்கவேயில்லை. ரொம்ப, ரொம்ப அன்புகள் மா.. 🥰 பொறுமையாக அனுபவித்து, படித்து, கருத்து பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிகள் என்று ஒற்றை வார்த்தை ஈடாகாது தான். 🙏🏻🙏🏻
ஒரே மூச்சில் ஒரு காபி ஷாப்பில் ஆரம்பித்து அங்கேயே முற்றும் பெற்ற நாவல்.
//கடவுளே...உங்களுக்குள் இப்படி ஒரு ராட்சசி இருப்பது தெரியாமல் போச்சு.//
🤣வாய் விட்டே சிரித்து விட்டேன் கண்கள் கனிய..
பொற்கிரீடம் பெற்ற உணர்வு நன்றிகள் 🙏🏻
ராட்சசியை வெளியே இழுத்து போட்டது போடுவது ..போட வைப்பது எல்லாம் நமக்கு கிடைத்த நட்புகள் தாங்கள் தான்.🙏🏻
பூமித்ரா, பிரேமாவதி போன்ற பெண்கள் அதிகம்.
திருமணம் எனும்'பெயரால் வெளிநாடுகள் வரும் பெண்கள் மூன்று குழந்தை பெற்றும் பலர் நரக வாழ்க்கை ..சிலர் போராட்டம்.. இன்னும் சிலர் சிதைந்து போதல்.. என நடக்கிறது தான்..
ஆனால் ஒரு விஷயம் வெளிநாடுகளில் பிறந்த (அதிலும் பாரிஸ்) யதுரன் போன்ற எந்த பையனும் எந்த பெண்ணையும் துன்புறுத்துவது இல்லை.
பிடித்தால் வாழ்வோம், இல்லையேல் நண்பர்கள் போல் பிரிவோம் பாலிசி.
From Writer Premalatha Balasubramaniam 👇
#ஜோ.... #தேயாத எனக்கான வெண்ணிலவே! படிச்சாச்சு....கடவுளே...உங்களுக்குள் இப்படி ஒரு ராட்சசி இருப்பது தெரியாமல் போச்சு. பூமித்ராவுக்கு நேர்ந்த கொடுமையை என்னால் படிக்கவே முடியலை. நம்ம மனசு கொஞ்சம் வீக்...கடவுள் அருளால் அவள் பிரேமாவதியின் கையில் கிடைத்தாள்.
யதுரன் -வழக்கம் போல உங்கள் நாயகன் என் மனதை அள்ளி விட்டான். முதல் முறை பார்த்ததில் இருந்து அவளை பார்த்து தவிப்பதாகட்டும், அவளை தன்னம்பிக்கை நிறைந்த மனுஷியாக மாற்றியதாகட்டும்...காதலோடு மணந்தாலும் , அவள் மனம் மாற காத்திருப்பதிலும்...ஐ லவ் யது.
பூமியின் தடுமாற்றத்தையும் பயத்தையும் நன்றாக உணர முடிந்தது ஜோ... அவளுக்காக நம் மனசும் துடித்து தான் போகிறது. ஆனால், யது அவள் பயத்தை போக்குவது அழகு. அதன் பின்னான ரொமான்ஸ் மனதை வருடுகிறது.
ப்ரேமாவதி, யாரிஷா என்று பெண் பாத்திரங்களும் சிறப்பு. விஜயமலர் மேல் ஆரம்பத்தில் கோபமிருந்தாலும், மகளுக்கு நடந்த கொடுமைக்கு அழுது கொண்டேயிராமல், அவளுக்கு பக்கபலமாக நின்றதில் பிழைத்து போகிறார்.
வழக்கம் போல கவிதைகள், கவிதையான வசனங்கள், நடைமுறைக்கு ஒத்துப் போகும் வசனங்கள் என்று அனைத்தையும் ரசித்தேன்.
'நான் வெறும் பார்வையாளராக இருந்தால் தான், எந்தப் பிரச்சனையையும் சரியாக அணுகி, தீர்வு காண முடியும்' வெரி ட்ரூ.
உங்கள் கதைகளில் கலகலப்பும் அழுத்தமும் சேர்ந்தே இருக்குமென்றால் இதில் அழுத்தம் சற்று அதிகம் தான் ஜோ. கடைசி அத்தியாயங்களின் மகிழ்வில், ஆரம்ப அத்தியாயங்களின் அழுத்தம் குறைந்தாலும், உலகின் பல இடங்களில் பெண்களுக்கெதிராக நடக்கும் குற்றங்களை எண்ணி மனம் கனத்துதான் போகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் பூமித்ராவைப் போல் நல்வாழ்வு கிடைக்க வேண்டுமென்ற பிரார்த்தனை எழுகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல கதை. வாழ்த்துகள் ஜோ.
19/09/2024
#ஆஹா அன்புகள்மா🥰 சர்ப்ரைஸ்☺️ நன்றிகள் உங்க விமர்சனத்துக்கு 🙏🏻தலை தாழ்ந்த வணக்கங்கள் உங்கள் ஆதரவுக்கு 💪🙏🏻Vicappu Givi
—-////——
👌👌👌செம 👏👏👏👏👏ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சது 💞💞💞💞💞💞 கவிதைகளில் முழுகடிச்சிட்டிங்க ❤❤ ஒவ்வொண்ணும் 💞💞💞👌👌👌👌கலக்கல் 👏👏👏👏 கதாபாத்திரங்களி ன் பெயர் தேர்வு 👌👌👌 எடுத்து இருக்குற கதைகரு 👌👌👌👌👌
யது ❤❤❤❤ மனச கொள்ளையடிச்சிட்டான் 💞💞💞💞💞சான்ஸ் சே இல்ல 👏👏👏👏👏👏👏👏நிறைய விஷயம் ரொம்ப motivated ஆ இருந்தது உலகத்தை மித்ரா பார்க்க சொல்லி தரும் இடம் 👏👏👏👏👏👏 யது கிரேட் 💞💞💞💞 பூமி முதலில் அவளை ரொம்ப பாவம் னு நினைச்சேன் யது கிட்ட வந்து அவள் மாறின விதம் சிங்கப்பெண்ணே னு பாட தோணிச்சி ❤❤❤❤❤👏👏👏wow 👏👏👏பிரேமா மா யாரிஷா விஜயா 👌👌👌👌👌👌👌👌ஆனா ஜெகதீசன் இந்திரா ரெண்டு பேருக்கும் தகுந்த தண்டனை கிடைக்கல 🤬🤬🤬அதே மாதிரி அந்த drug gang தலைவன் அவனையும் ஒண்ணும் பண்ணல 😡😡😡😡😡🤬🤬
ஜோ ❤ரொமான்ஸ் pindringa 💞💞💞💞💞 குட்டி குட்டி கவிதை சொல்லி 💞💞💞செம அழகு
மித்து யது ட்வின்ஸ் ❤❤❤❤💞💞💞 cute மொமெண்ட் ❤❤❤ ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
💞💞💞💞💞💞💞💞💞💞 book now available in arunodhayam ❤ so link kidaiyathu ☝🏻
18/09/2024
#நன்றிகள் நன்றிகள் 🙏🏻சசிகலா எத்திராஜ்
இவ்ளோ விரைவாக ஒரு அழகு விமர்சனம் வரும் என எதிர்பார்க்கவில்லை.
விமர்சனம் செய்திருக்கும் பாணியே
மெலோடியை மீட்டுதே . அன்புகள்மா🥰
நான் அனுபவித்து ரசித்து படைத்தது
#தேயாதஎனக்கானவெண்ணிலவே
#எழுத்தாளர் #எஸ்ஜோவிதா
#கதைவிமர்சனம்
தேயாத எனக்கான வெண்ணிலவே.... தலைப்பிலே கதை முழுவதும் சொல்லிவிடலாம். அழகான தலைப்பு ஜோமா.
யதுரன் பூமித்ரா கதையின் நாயகன் நாயகி. கதையின் நாயகியின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் படிக்கும்போதே வன்முறையின் உச்சம் எவ்விதம் என்பதை விழிகளில் நீர் வடிகிறது. நாம் தினமும் செய்தியில் எங்கோ நடக்கும் பாலியல் வன்முறைகளைப் படித்து அந்நேரத்தில் கொந்தளிப்பதுண்டு. அடுத்தநாள் அது சாதாரணமாகக் கடந்து விடுவதும் உண்டு.
பூமித்ராவின் தாய் விஜயமலர் வசதி வாய்ப்பு நிறைந்த இடத்தில் திருமண ஆக அவளின் அண்ணன் குடும்பமும் அவளுடன் வந்து இருந்து தங்கையின் குடும்பத்தைச் சீர்யழித்து விடத் தன் மகனுக்காக ஒன்றிமறியாத பொண்ணாக பூமித்ராவை வளர்த்துத் திருமண செய்து வெளிநாட்டுக்கு அனுப்ப அங்கே பூமித்ரா படும் வலிகள் கண்ணீர் கறைகளை எவ்விதம் மறந்து மீண்டாள் என்பதே கதை.
கதை நாயகனின் யதுரன் வெளிநாட்டில் பூமித்ராவை பார்த்ததும் பனிபொழிவில் அவள் இருந்த கோலத்தை அதிர்ந்து அவளைக் காபாற்றி அதன்பின் அவளின் வாழ்க்கையே மாறுவதை அழகாக எழத்துகளால் வெண்ணிலவேக்குகே மலர்மாலையை சூடிருக்கிறார் எழுத்தாளர். எழுத்துகளுக்கிடையே வரும் கவிதை வரிகள் சூப்பர் டூப்பர் தான். அழகான வரிகள். இயல்பான எழுத்து நடை.
முழுகதையும் நானே சொல்வதை விடப் படித்துப் பாருங்கள் அதிலிருக்கும் பயம் அச்சம் அதன்பின் மகிழ்ச்சி சந்தோஷம் எல்லாம் நிறைந்தே இருக்கும்
வன்முறைக்குப் பின் பெண்ணின் மனநிலை அதிலிருந்து மீண்டு வேறு வாழ்க்கைக்குத் திரும்பவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அப்படி மீண்டால் எவ்விதம் இருக்கும்… நல்லாவே இருக்கும் என்பதை அவரின் பாணியில் எழுதிருக்கும் முருகேஸ் ஆத்தாவிற்கு வாழ்த்துகள்.
சிலநேரம் வாழ்க்கையில் திடீரென்று ஏற்படும் நிகழ்வுகளை கடக்க இயலாமல் தேங்கி அங்கே நின்று மீண்டு வருவதுப் போல தான் வாழ்வியலின் சூட்சமம்ங்கள் புரியும் போல பலருக்கு...
இவரின் எழுத்துகளில் சில இடங்களில் கிண்டலும் நய்யாண்டியுமான எழுத்துகள் எப்பவும் ரசிக்க வைக்கும். எழுத்துத்துறையில் உங்கள் எழுத்துகள் மேன்மேலும் வளரட்டும்மா…
வாழ்த்துகள் ஜோ...
சசிகலா_எத்திராஜ்
01/07/2024
Premalatha Balasubramaniam தங்கள் அன்புக்கும், ஊக்கத்திற்க்கும், ஆதரவுக்கும் எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது.
தொடரட்டும் தங்களின் சேவை 👏வாழட்டும் எழுத்துலகம் 🙏🏻
நிலாவே வா/எஸ்.ஜோவிதா/முழு நாவல்/Jovitha Novels/TamilNovels Audiobooks/Love story/Romance story
ிலாவே வா - எழுத்தாளர் எஸ்.ஜோவிதா அவர்களின் அனுமதியுடன் பதிவேற்றப்பட்டுள்ளது. This story is published on my channel with the consent of...
19/05/2024
சசிகலா எத்திராஜ் என்ன ஒரு சர்ப்ரைஸ் பரிசு பாரிஸ் டீமுக்கு…எதிர்பாராத போது கிடைத்து இருக்கும் அழகு விமர்சனமும் பாராட்டுகளும்.
நன்றிகள் ..நன்றிகள்.. 🙏🏻எனக்கு புன்னகை பூக்க வைக்குறீங்க.. ஆழ்ந்து ரசித்து படித்திருப்பீங்க போல ..
உங்கள் புகழாரத்துக்கு பணிவார்ந்த நன்றிகளும் அன்புகளும்.
தங்களைப் போன்ற நட்புகள் வாய்க்கப்பெற்றதால் pleasant feelings வருதோ
#விமர்சனம்
#என்னைசாய்க்கும்ஓர்மழைச்சாரல்நீ..
பாரீஸ் காதலின் அன்பின் நகரம். அங்கே பிறந்து வளர்ந்து வரும் கதாநாயகன். தனக்கான பெண் இந்தியாவில் வளர்கிறாள் எனத் தெரிந்து அவளைத் தனக்கானவளாக மாற்றி காதலில் ஜெயித்த ஆர்வின்.
ஆர்வின் செம கேரக்டர் ..முதல் முறையாக பிறந்த குழந்தையை கையில் வாங்கியவனிடம் இது தான் உன் பொண்டாட்டி சொல்லி 22 வருசமா காத்திருந்து அப்பெண் நந்தனாவை காதலித்து கரம் பிடிக்க அவனின் ஒவ்வொரு அணுகுமுறையும் சூப்பர்.
பாரின் பாதாளத்தில் இப்படி ஒரு ஹீரோ.. அவனை அழகாக செதுக்கி இருக்கீங்க.. அவன் பேசும் தமிழ் மொழி மற்றவர்களோடு அவன் ஈஸியா மிங்கிளாகிற நேச்சர்.. ஹீ இஸ் ஜெம்..
நந்தனா எல்லாவற்றிலும் முதன்மையானவள் எங்கும் தவறு நேர்ந்திட கூடாது , அவளுடைய பிரண்ட்சிப் அவனாலே ஆர்வினுக்கு வரும் ஆபத்து.. என்னதான் படித்திருந்தாலும் பாரீன் இருப்பதால் அவர்கள் இப்படி முத்திரை குத்தி நடப்பது, அதை ஆர்வின் தன் காந்த கண்களால் அவளை ஆக்மரிப்பது சும்மா கதை தூள்....
பாரீன்ஸர் இப்படி தான் எல்லாரும் மைன்ட் செட் இருக்கிறது. அது அப்படி இல்லை என்று சொல்ல ஆர்வின் கேர்க்டர் ..
நந்தனாவின் தோழன் விமல் மாதிரி ஆட்கள் கூட இருந்தே குழி பறிக்கும் ஆட்கள் மனதில் ஒன்றை நினைச்சு வெளியே நண்பனாக நடிக்க அவர்களோடு கூட இருக்கும் இருவர் ஜால்ரா..
இறுதியில் காதல் என்றால் என்ன என்பதை அழகாக நந்தனா சொல்வது சூப்பர். அழகான கதை உங்கள் கதையில் வரும் ரொமான்ஸ் சிரிக்க வைக்கது மேன்மேலும் இது போல நல்ல கதைகள் எழுத வாழ்த்துகள் டா 😍 😍 😍
கதையாசிரியர் தன் துள்ளலான எழுத்துகளால் வசம் படுத்தும் மேஜிக் அறிந்தவர்.
கிண்டலும் கேலியும் நய்யாண்டியும் நிறைந்து எப்பவும் பரபரப்பாக பாரீஸ் ஓடிக் கொண்டிருக்கும் முருகேஷ் ஆத்தா ஜோவிற்கு வாழ்த்துகள்.
கதைகளில் காதலை அழகிய சொற்களுக்கு வடிவம் கொடுத்து எழுதுபவர்.
இவரிடம் பேசும் போது நாமும் ஒரு pleasant feeling பண்ணுமளவுக்குப் பேச்சு திறமை உண்டு.
ரொம்ப நாட்களாக கதைக்கு விமர்சனம் எழுதனும் நினைத்தது தான் இன்று தான் போடுகிறேன்..
வாழ்த்துகள் ஜோ..
#சசிகலா எத்திராஜ்
29/04/2023
#நன்றிகள் நன்றிகள் இவ்ளோ சீக்கிரத்தில் ஒரு அழகு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை.
நன்றிகள் பல🙏🏻🙏🏻
#என்னை சாய்க்கும் ஓர் மழைச்சாரல் நீ.
Premalatha Balasubramaniam
வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே கொஞ்சம் பயம் இருப்பது உண்மைதான் ஜோ. ஆனால், நல்ல/கெட்ட மனிதர்கள் எல்லா இடத்திலும் தான் இருக்கிறார்கள் என்று அழகா சொல்லி இருக்கீங்க. அதே போல, பிள்ளைகள் மனம் தெரியாமல், ஆசையை வளர்க்கும் பெற்றோர்கள் செய்யும் தவறையும் சொன்னது நைஸ்.
உங்க ஹீரோஸ் எல்லாம் பொறுமையில் PhD செஞ்சிருக்காங்க போல. ஆர்வின் ரொம்ம்ம்ம்ம்ப பொறுமை. ஆர்ஷன் என் தான் என்னுடைய ஃபேவரிட். அவனையும் பொறுமையில் மிஞ்சுகிறான் ஆர்வின். நந்தனா மேல் எனக்கு வந்த கோபத்தில் துளி கூட அவனுக்கு வர மாட்டேங்குது. லக்கி நனு! நிறைய விஷயங்களில் ரசிக்க வைத்தவன், நந்து நிச்சயத்தன்று மாதாவிடம் கதறும் இடத்தில் மனம் கலங்க வைக்கிறான்.
எல்லா விஷயத்திலும் அறிவா இருக்கும் நந்து, ஆர்வினை ரொம்பத்தான் படுத்தறா. சீதா பாட்டி மேல் ஆரம்பத்தில் எனக்கும் கோபம் தான், ஆனாலும் ஆர்வினுக்கு பரிந்து பேத்தியிடம் சண்டை போடும்போது எனக்கும் அவரை பிடித்து விட்டது.
நிறைய உரையாடல்களை ரசித்தேன் என்றாலும், "நான் மனைவியா இருப்பேன்னு சொல்வதை விட சிறந்த தோழியா இருப்பேன்னு பெண்ணும், கணவனா இருப்பேன்னு சொல்வதை விட புரிதல் கொண்ட நல்ல தோழனா இருப்பேன்னு ஆணும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு கடைபிடித்தால், கோர்ட், கேஸ் எல்லாம் ஏன் வரப் போகுது". - இது எனக்கு ரொம்ப பிடிச்சுது.
என்னடா கவிதையே காணோம்னு நினைச்சேன், கடைசியில் ஹா,...ஹா... செம. ஜோ, அது சிவா ப்ரோ-க்கு எழுதின கவிதை தானே?
One more feel good story from you Jo. Enjoyed reading it.
மேலும் பல நல்ல கதைகள் எழுத மனமார்ந்த வாழ்த்துகள்.
———-
29/12/2022
#மிக விரைவாக படித்ததுக்கும், சுட சுட விமர்சனம் வழங்கியதுக்கும் முதலில் நன்றிகள். நாவலின் முடிச்சுகளை அவிழ்த்து விடாது நாசூக்காக விமர்சனம் சொன்ன விதம் 👏👏👏 12 வருஷங்கள் கடந்தும் இன்றும் விரும்பி தேடப்படும் ஒரு நாவலின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நாவல்.
👇👇👇👇👇
#ஜோதிரிவ்யூ
எழுத்தாளர் : எஸ். ஜோவிதா
படைப்பு : நிலாவே வா
வெளியீடு : அருணோதயம் பதிப்பகம்
நிலா :
மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக பல வழிகளில் முயற்சி எடுக்கும் பெற்றோர், அவளது சம்மதம் கிடைக்கப் பெறாதது மட்டுமின்றி முந்தைய நாளில் ஏற்பட்ட ஒருசில சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, ஆண்கள் மற்றும் திருமணம் என்றாலே வெறுப்புடன் காணப்படுபவளை, விசத்தை குடித்து உயிரை துறந்து விடுவதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவளோ வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறாள்.
அப்பாவின் நண்பரின் மகன் திருமணம் எனும் ஆசையில்லாமல் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நாயகன், பெற்றோரின் ஆசையின் பேரில் அவளை மணந்து தன்னுடனே அழைத்துச் செல்கிறான்.
சதா புன்னகையும், நட்புடன் பழகும் கணவனுமாக இருப்பவனை விட்டு எதிர்பாராத விதமாக பிரிந்து சென்று விடுகிறாள் நாயகி.
கணவனை விட்டுப் பிரிந்து செல்பவள் எங்கு போகிறாள்? இருவருக்கும் இடையில் நடந்ததென்ன? எதனால் திருமணம் மற்றும் ஆண்களை கண்டாலே அவள் வெறுக்கிறாள்? பிரிந்த தம்பதியர் மறுபடியும் ஒன்று சேர்கிறார்களா? என்பதை அழகான நகர்வுடன் அருமையாக சொல்லி இருக்கிறாங்க.
ஆரம்பத்தில் நிலாவின் மீது சில நேரங்களில் கடுப்பாக இருந்தது. பிறகோ, பாவமாகிவிட்டது. ஆனால் அவளது கணவராக வருபவர் சூப்பர். சரியான வாயாடி. அமைதியான மனைவிக்கு நேர் எதிர்பதமாக சதா பேசிக் கொண்டே இருக்கிறார். அவளைக் காணாமல் தேடி அலையும் இடமும், அவனது வசன உச்சரிப்புகளும் ரொம்ப பாவமாக இருந்தது. இறுதி அத்தியாயம் வாசிக்கும் போது கண்ணீராக வந்து விட்டது. முடிவு மாஸ் ... வேகமாக முடிச்சிட்டீங்க ஜோவி.
கீர்த்தி, நீரஜா சூப்பர்👌👌👌 நல்ல நட்புகள். பூஜா அத்தானுடன் கைப்பேசியில் மற்றும் நேரில் உரையாடும் இடங்கள் கலாட்டா🤣🤣
விருது வழங்கும் இடத்தில் வைத்து அநாகரீகமாக பேசிய பெண்களின் பேச்சுக்களை கேட்டதும் அப்படியே ஒண்ணு கொடுக்கலாம் போல இருந்தது. (நான் நினைச்சேன் ஜோவி, நிலா அங்க வருவாளோன்னு... ஏமாத்திட்டா ... நானும் ஏமாந்துட்டேன்😏😏🤪🤪🤣🤣) அதே நேரம் அது சக்திதாசனின் ஏற்பாடாக இருக்குமோ என்று சந்தேகமாகவும் இருந்தது. அவர்களுக்கான அக்ஷய்யின் பதில்கள் அட்டகாசம். இப்படிப்பட்ட கணவனை விட்டுப் போயிட்டியே நிலா பேபி...
அக்ஷய்யை சந்தித்த அவளது பெற்றோரின் பேச்சும், அறையும், அவனது பதிலும்👏👏👏
இயல்பான எதார்த்தமான கதையோட்டம். அழகான எழுத்து நடையில் அருமையான நகர்வுகளுடன் நாவல் வாசிக்க ரொம்ப நன்றாக இருந்தது.
எழுத்துலகில் மேலும் நிறைய சாதிக்கவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐