20/07/2022
அப்பா அம்மா இருவரும் இல்லாத சூழ்நிலையில் தன் சித்தி அரவணைப்பில் நல்ல மார்க் எடுத்து கல்வி உதவி கேட்டு நம்மிடம் வந்தவர் இந்த மாணவி இன்று செங்கல்பட்டு கல்லூரியில் படிக்கும் செலவு முழுவதையும் அமெரிக்க நண்பர் பழனி பொருப்பேற்று உள்ளார் மிகவும் மகிழ்ச்சி நன்றி #சமூகமாற்றம்
12/07/2022
#சமூகமாற்றம்
சட்டப்படிப்புடன், பட்டப்படிப்பும் சேர்ந்து 5 ஆண்டுகள் டிகிரி படிப்புக்கான விண்ணப்பங்கள் தொடங்கின.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திக்ன் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும்
ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு 12.07.2022 முதல் 29.07.2022 வரை பல்கலைக்கழகத்தின்
அதிகாரபூர்வ இணையத்தளம் (online) http://www.tndalu.ac.in வாயிலாக
இன்று காலை 10.30 முதல் விண்ணப்பிக்கலாம்.
09/07/2022
#கலை_அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் 19 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பகிருங்கள் நன்றி #சமூகமாற்றம்
28/06/2022
இதுவரை அப்பா அம்மா இல்லாத மாணவர்கள் 4 பேர்
அம்மா இல்லாத மாணவர்1பேர்
அப்பா இல்லாத மாணவர்கள் 9 பேர் கல்வி உதவி கேட்டு வந்து இருக்கிறார்கள் இறைவன் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டுகிறேன் நேரடியாகவோ, கல்லூரியிலோ, பணமாகவோ உதவலாம் #சமூகமாற்றம் தொடர்புக்கு 9382820005, 9042784141 அதிகம் பகிருங்கள் நன்றி
27/06/2022
#செல்_போன்_பேச்சால் பரி போன உயிர் பெற்றோர்களே கவணம்
#தூத்துக்குடி மாவட்டம், #ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள #செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து #திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு தினம் தோறும் பள்ளி மாணவ மாணவிகளை ஆடட்டோ மூலம் அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள #முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, #வசவப்பபுரத்தைச் சேர்ந்த 8 மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு #மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார்.
அப்போது #அனவரதநல்லூர் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநர் போன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் திடிரென்று ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மாணவன் செல்வநவீன் கடந்த வாரம் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு இன்று தான் முதல் நாளாக பள்ளிக்கு சென்றான்.
மேலும் இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கி ராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். இதில் சில மாணவ மாணவிகள் இன்று தான் பள்ளிக்கு முதல் நாள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
21/06/2022
TN NGOs Scholarship - 2022
#தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே!
உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க:
NGO list in reverse alphabetical order
1. Team Everest - www.everestscholarship.com
2. Siruthuligal Foundation - https://bit.ly/SiFoApplicationForm
3. Shooting Stars Foundation - www.bit.ly/ssfscholars
4. SEEEDS - www.seeeds.org/scholarship
5. Maatram Foundation - www.maatramfoundation.com/admissions/
6. Hope3 Foundation - www.hope3.org/apply2022
7. Gold Heart Foundation - www.goldheartfoundation.org
8. Chief Makers - https://chiefmakers.com/scholarship/
9. Anandham Youth Foundation - www.anandham.org
10. Agaram Foundation - https://www.agaram.in/contact
முக்கியமான குறிப்பு :
மேற்கண்ட தொண்டு நிறுவனங்கள் தங்கள் உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவியர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிப்பதில்லை.
மேலே உள்ள இணைப்புகள் மூலம் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும் அதிகம் பகிருங்கள் நன்றி
9042784141, 9382820005
21/06/2022
அதிக மதிப்பெண் எடுப்பது சுலபம்.
கீழ் கண்டவைகளை செயல்படுத்தினால்!
மாணிக்க மாணவர்களின் அனுபவங்கள்
1) ஆசிரியர் பாடம் நடத்தும் போது (முழுமையாக) 'கவனித்தாலே போதும்'
கணிசமாக மதிப்பெண் எடுக்கலாம்.
2) புரிந்து படித்தால்......
3)பிறர்க்கு சொல்லிக் கொடுத்தால்.....
4)அதிகாலையில் எழுந்து படித்து வந்தால்.....
5)போட்டி போட்டு படித்தால்...
6)தமது அம்மா அப்பாவிற்கு
நல்வாழ்வளிக்க என்ற லட்சியம் இருந்தால்....
7) படித்ததை எழுதிப் பார்த்தால்.
8) குழுவாக விவாதித்து படித்தால்....
9)அமைதியான சூழலில் படித்தால்.
10)விளையாட்டு, யோகா, உடற்பயிற்சிக்குப் பிறகு படித்தால்..,.
11)படித்ததை
எழுதிப்பார்த்தால்....
12) பெரிய ஒரு பாராவை ' பல சிறிய பகுதிகளாக பிரித்து'
வரிசைப்படுத்தி படித்தால்.
13) கவனத்தை ஒருமுகப்படுத்தி
' குறிக்கோலுடன் ' படித்தால்.
14) கையெழுத்து அழகாய் இருக்க பயிற்சி செய்தால்....
15) பொது அறிவு புத்தகங்களை படித்தால்.....
16)பள்ளிக்கு நேரத்திற்கு செல்வதும், விடுமுறை எடுக்காமல் செல்வதும்
வழக்கப்படுத்தினால்....
17) சந்தேகங்களை தயக்கமின்றி கேட்டுத் தெளிவடைவதை பழக்கமாக்கிக்கொண்டால்....
18)கால அட்டவணை போட்டு அதன்படி படித்துவந்தால்....
19) உதாரணங்கள், கதைகளுடன் ஒப்பிட்டு
நினைவு வைத்துக்கொண்டால்..
அதிகம் பகிருங்கள் நன்றி
20/06/2022
ஆலங்குளம் பகுதி மாணவிகள் ஆலங்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் - உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.
www.tngasa.in, www/tngasa.org
என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.
வரும் 27ம் தேதிக்கு பதில், 22ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Under Construction
17/06/2022
#விழித்து_கொள்வோமா!!!
அதிகம் பகீருங்கள்
, தான் நம்மில் பலருக்கும்
தெரிந்த உயர் பதவிகள்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
1. - Indian Administrative Service
2. - Indian Police Service
3. - Indian Foreign Service
4. - Indian Forest Service
5. - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS - Indian Ordinance Factory Service
22. IDSE - Indian defence engineering services
23. IES - Indian Economics Services
24. ISS - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES - indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை.
ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.
இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.
இனியாவது, தமிழ் இளைய சமுதாயமே உயர் பதவிகளுக்கு குறிப்பாக இந்திய அளவிளான தேர்வுகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான்.
முறையான பயிற்சி மட்டும் தான் இதில் மிகவும் முக்கியம்.
இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள்.
என்றும் அன்புடன்
#விமல் சமூகசேகவர் 9382820005
31/05/2022
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
புதுடெல்லி, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி நேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் அடங்கும். 'பி.எம்.கேர்ஸ் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை' என்ற இந்த திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்துகிறது. இந்த திட்டப்படி ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதில் மாத படி ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரமும், கல்வி உதவித்தொகை ரூ.8 ஆயிரமுமாக மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 3,945 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக மத்திய அரசுக்கு 2022-23-ம் கல்வியாண்டில் ரூ.7.89 கோடி செலவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
s-20000-for-students-who-have-lost-their-parents-to-corona-711550
24/05/2022
India 🇮🇳 finish on top at ISSF Junior World Cup in Suhl, Germany.