29/05/2026
ஆலங்குளம்: தேவர் சாதி வெறித் தாக்குதல்!
நேற்று நாங்குநேரி பெரும்பத்து!
இன்று ஆலங்குளம் நெட்டூர்!
நேற்று இரவு பேனர் வைக்கக் கூடாது என மிரட்டிய தேவர் சாதி வெறியர்கள்!
இன்று திருமண நிகழ்ச்சியில் நெட்டூரில் 8 பேர் மீது அரிவாள் வெட்டு!
நெட்டூரை சேர்ந்த 6 தேவர் சாதி வெறியர்களால் முகமூடி அணிந்து கொண்டு 8 தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் மீது அரிவாள் வெட்டு!
2 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாம் என்ன செய்ய போகிறோம்?
கழக வழக்கறிஞர் அணி,
மக்கள் அதிகாரக் கழகம்.@
08/05/2026
புதுக்கோட்டை மாவட்டம், கொளத்தூர் வட்டம், திருமலைராயபுரம் நடுப்பட்டி கிராமம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (20) என்பவரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தேவிஸ்ரீ என்பவரும் சாதி மறுப்பு காதல் செய்த நிலையில் ஹரிஹரன் மர்மமான முறையில் உயிர் இழந்துள்ளார்.
ஹரிஹரன் இல்லத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நீதி கிடைத்திட துணைநிற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மாநில செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவருமான கே.சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன், ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் அன்புமணவாளன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
#ததீஒமு
01/05/2026
சாதிய பாசிச மனநிலையில் நீதிபதிகள் உள்ளனர், சுத்தப்படுத்த வேண்டியது காவல் நிலையத்தை அல்ல, காவல் துறையையும் நீதித்துறையையும் சுத்தப்படுத்த முயன்றுடுவோம்.
15/04/2026
்யூப்பிரிவின்_கொடியசதியை_முறியடித்து
#தோழர்_மகாலிங்கத்தின்_உயிரைக்_காப்போம்
____________________________________________________
70 வயதாகி உள்ள மூத்த தோழரான மகாலிங்கம் அவர்கள் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை பட்டுள்ளார். அவருக்கு தீவிரமான நீரிழிவு நோயும் உள்ளது. சிறையில் தொடர்ந்து பல முறை நெஞ்சுவலி பற்றி புகார் செய்த போதும், சிறை நிர்வாகம் அவரை பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து உரிய பரிசோதனைகளைச் செய்யவில்லை.
இதய நோய் முற்றிய நிலையில், கடந்த மாதத்தில் சிறைச்சாலையில் டிஐஜி பார்வையிட்ட போது, தோழர் மகாலிங்கம் மயங்கி விழுந்ததால், வேறு வழியின்றி அவரை மதுரை பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
மதுரை மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு, மருத்துவர்கள் அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை (open heart surgery) செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தனர். இப்போது செய்யவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக மாறும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அப்போதிருந்தே தமிழக உளவு பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து அவரது மருத்துவ சிகிச்சையை தடை செய்யும் வேலைகளை செய்து வருகின்றனர்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவரால் நடமாடவே முடியாது என்ற நிலையில், அவருக்கு உதவியாளர் தேவை என்று வழக்குரைஞர்கள் கோரிய போது, சிறை துறையும் காவல்துறையும் அதற்கு முற்றாக மறுத்தது.
திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யும் நபருக்கு ஒரு உதவியாளர் வைத்துக்கொள்ள கூட அனுமதி மறுப்பது என்பது, சிகிச்சையே தடுப்பது என்று தான் பொருள்.
பிறகு மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் ஆணையின்படி அவரது இணையர் உதவியாளராக அனுமதிக்கப்பட்டார்.
நீதிமன்ற ஆணை இருந்தும் கூட, வழக்குரைஞர்கள் ஒரு நாள் முழுக்க சிறைச்சாலையில் காத்திருந்தே அதற்கான அனுமதி கடிதத்தை பெற வேண்டி இருந்தது. தமிழக உளவுத்துறை போலீசார் இத்தகைய மனிதாபிமானமற்ற, சட்டவிரோத கொடுஞ்செயலை எவ்வித வெட்க உணர்வின்றி செய்து வருகின்றனர்.
உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், அடுத்த நீதிமன்ற ஆணை வரும் வரை அவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை தர வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மனிதாபிமானமோ, சட்டத்தை மதிக்கும் உணர்வோ சிறிதும் இல்லாத தமிழக உளவுத்துறையினர் அறுவை சிகிச்சை முடிந்து ஆறு நாட்களே ஆகியுள்ள நிலையில், அவரை எப்படியாவது மருத்துவமனையில் இருந்து சிறைக்கு அனுப்ப சாம-பேத-தான தண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதுவும் நெஞ்சில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், நிமிர்ந்து கூட உட்கார முடியாத ஒரு நபரை, தனது உணவை கூட தானே பிசைந்து சாப்பிட முடியாத ஒரு நபரை, கழிவறை செல்லக் கூட மற்றவர்களின் உதவியை நாடி நிற்கும் ஒரு நபரை, சிறைக்கு மாற்றுவது எத்தகைய கொடூர செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் பற்றி தமிழக உளவு பிரிவினருக்கு எந்தவித கூச்சநாச்சமும் இல்லை.
சிறையில் அவசரத் தேவைகளுக்கோ, அல்லது பரிசோதனைகளுக்கோ எந்த வசதியும் இல்லை. மேலும் அவருக்கு உதவியாளர் நாள் முழுக்க கூட இருக்க முடியாது.
இத்தகைய கொடூர செயல்பாட்டை செய்வதன் மூலம் தோழர் மகாலிங்கத்தின் உயிரைப் பறிக்க எண்ணுகிறார்களோ என்று அஞ்சத் தோன்றுகிறது.
ஏற்கனவே அருட்தந்தை ஸ்டான் சுவாமி, தோழர் சாய் பாபா, சமீபத்தில் தோழர் கிஷன் தா உள்ளிட்ட பல மாவோயிஸ்ட்டு சிறைவாசிகள் சிகிச்சை தரப்படாமல், சிறையில் அரசால் கொலை செய்யப்பட்ட வரலாறை நாம் அறிந்து உள்ளோம்.
இத்தகைய சூழ்நிலையில் 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்ட வரும், 70 வயது முதியவரும், திறந்த நெஞ்சக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வரும் ஆன தோழர் மகாலிங்கத்தை அரசியல் காரணங்களுக்காக சட்டவிரோதமாக துன்புறுத்தி அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் உளவு பிரிவினரின் சட்டவிரோத நடவடிக்கைகளை சிறைப்பட்டோர் உரிமை பாதுகாப்பு மையம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தின் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் இத்தகைய அப்பட்டமான சட்டவிரோத கொடுஞ்செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.
#சிறைபட்டோர்_உரிமை_பாதுகாப்பு_மையம்