08/11/2024
எங்கள் கொள்கைத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#கொள்கைத்தலைவன்_சீமான் !!
செந்தமிழன் சீமான் ! நாம் தமிழர் கட்சி !
தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்! 🚩தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!
08/11/2024
எங்கள் கொள்கைத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#கொள்கைத்தலைவன்_சீமான் !!
செந்தமிழன் சீமான் ! நாம் தமிழர் கட்சி !
🔥🔥
22/08/2024
தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு,
தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நாளை (22-08-2024) அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும்,
என் அன்புத்தம்பி
தளபதி விஜய் Actor Vijay அவர்கள்
இலட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!
அண்ணன் செந்தமிழன் சீமான் !!
TVK - VIJAY ! நாம் தமிழர் கட்சி
கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி என்று கூறி அதே பாடலை பாடிக் காட்டிய செந்தமிழன் சீமான்🔥
16/07/2024
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை, அதுவும் அமைச்சர் PTR அவர்களின் வீட்டு அருகாமையில்.! திமுக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மரண ஓலங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.!
இதுக்கு செருப்பாலயே அடிச்சு இருக்கலாம்...🤭
அண்ணன் செந்தமிழன் சீமான் in full form !😂
தூய தமிழர் தேசம் படைப்போம்🫡❤️💛
மக்கள்தான் சிந்திக்கணும்..🚶
20/06/2024
கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?
கள்ளக்குறிச்சி மாவட்டம் ‘கருணா’புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐயும் தாண்டி தொடர்ந்து அதிகரித்துவருவது ஆற்றமுடியாத மனத்துயரத்தையும், கவலையையும் அளிக்கிறது. தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், கணவரை இழந்து தவிக்கும் மனைவிகள் என வாசலில் இறந்த உடல்களை வைத்து அடுத்தடுத்த வீடுகளில் கேட்கும் மரண ஓலங்கள் நெஞ்சைப் பிளக்கின்றது.
கள்ளச்சாராய விற்பனையின் முக்கியக் குற்றவாளியான சின்னதுரை மீது இதுவரை 70க்கும் மேல் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்க அவர் அனுமதிக்கப்பட்டது எப்படி? அப்பகுதியில் காவல்துறையால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1000 லிட்டர் அளவிற்கு கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்ட நிலையில், இத்தனை நாட்கள் தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது? தொழிற்போட்டி காரணமாக கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போட்டி போட்டு விற்கப்படும் அளவிற்கு கள்ளச்சாராயப் புழக்கம் அதிகரித்தது எப்படி? அதனை அனுமதித்தது யார்? காவல்துறையின் அனுமதியுடன்தான் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகப் பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டிற்கு திமுக அரசின் பதில் என்ன?
கள்ளச்சாராய விற்பனையில் திமுகவினரின் ஆதிக்கம் காரணமாகவே காவல்துறையினரால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதும், பொதுமக்கள் அதுகுறித்து புகார் தெரிவிக்கவே அச்சப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தண்டித்துள்ள திமுக அரசு, அவர்களை நிர்வகிக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை அளிக்க உள்ளது? கள்ளச்சாராயத்தால் நடைபெற்றுள்ளது விபத்தோ, தற்செயலான உயிரிழப்புகளோ அல்ல; அரசின் அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள பச்சைப் படுகொலைகள்! அதற்கு அதிகாரிகளை மட்டும் பலியாடாக்கி ஆட்சியாளர்கள் தப்பிக்க முயல்வது பெருங்கொடுமையாகும்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி