25/09/2025
கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே என்னுடைய தீவிர ஆர்வத்தையும் உறுதியான அரசியல் பங்குபற்றலையும் கவனித்து, எனக்கு ஊடகப் பிரிவின் மாவட்ட தலைவராக பொறுப்பளித்து என் அரசியல் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிக் கொடுத்தவர் முன்னாள் மாவட்ட தலைவர் சென்னை சிவா அவர்கள்.
அவர் எனக்கு ஒரு மாவட்டத் தலைவர் மட்டுமல்ல, அரசியலை கற்றுக்கொடுத்த ஆசானும், என் சிறந்த நண்பரும் ஆவார். தலைமைப் பொறுப்பு என்ற பெயரில் எந்தச் சின்ன பந்தாவும் இல்லாமல், நல்லது என்றால் உடனே ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை கொண்டவர். அவரின் அந்த நடைமுறையிலிருந்தே நான் அரசியலின் பல பாடங்களை கற்றேன்.
இன்று நான் ஓபிசி மாநில செயலாளர் பொறுப்பேற்ற பின், என் சிறந்த நண்பரும் ஆசானுமான அவரை சந்தித்து வாழ்த்து பெற்றது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியும் மறக்க முடியாத பெருமையும் ஆகும்.
