31/05/2020
தமிழர்களே.. விழித்துக் கொள்ளுங்கள்!
பொதுவாக வெளியூர்களில் விருப்பமின்றி சிக்கிக் கொண்ட பலருக்கும், உள்ளூர ஒரு ஏக்கம் இருப்பது உண்டு. ஊர் திரும்புதல் குறித்து அவர்கள் அடிக்கடி மனதில் அசை போடுவதும் உண்டு. இதில் இன வேறுபாடுகள் கூட இருந்தது இல்லை. யாராக இருப்பினும் அவரவர்க்குரிய சொந்த ஊர் திரும்பி, நிம்மதியாக வாழ வேண்டுமென ஆசைப்படுவதை நாம் அறிவோம். அதன்படியே, கொரானா எல்லோரையும் அவரவர் ஊருக்கு துரத்தியடித்து இருக்கிறது. இந்த இடத்தில்தான் நாம் நின்று நிதானமாக சில திட்டமிடல்களை உருவாக்க வேண்டும்.
இயற்கை நமக்காக ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருப்பதாகவே இந்த சூழலை நாம் ஏற்க வேண்டும். வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு திரும்புகின்றனர். அதேபோல, வெளி மாநிலங்களில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும் நம் மாநிலம் நோக்கிப் படையெடுக்கின்றனர்.
வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட தமிழர்கள் பலரும் உணவின்றிக் கதறி அழும் காணொளிகள் பரவிக் கொண்டு இருக்கின்றன. அதேபோல எல்லா மாநிலத்திலும் வெவ்வேறு மொழி பேசுகின்ற பலரும் கண்ணீர் சிந்துவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. சாரை சாரையாக குடும்பம் குடும்பமாக நடந்தே சொந்த நிலம் நோக்கி, பெருந்திரள் மக்கள் கூட்டம் இடம்பெயர்கின்ற கொடூரமான காட்சிகளை நம்மால் பார்க்க முடிகிறது. இதுபோன்ற பேரிடர் காலங்களில்தான் தாய் நிலத்தின் அருமையையும் எல்லோரும் உணர முடிகிறது. அதனால் நாம் இப்பொழுதேனும் பாடம் கற்க வேண்டும். அடுத்த திட்டமிடலுக்கு தயாராக வேண்டும்.
கொரானா இடர்பாடுகள் இந்த ஆண்டு முழுவதும் நீளும் என்பதை எல்லோரும் அறிவோம். 'கொரானாவோடு வாழ பழகிக் கொள்ளுங்கள்' என்று அரசுகளும் அறிவிக்கத் தொடங்கிவிட்டன. எனவே நம் நிலத்தைவிட்டு வெளியேறிய எந்த கூலித் தொழிலாளியும் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு திரும்ப வரப்போவதில்லை. அதேபோல, தமிழர்களும் இனி தாய் நிலத்தைவிட்டு வெளியேற வேண்டாம்.
'சொந்த நிலத்தில் தேனீர் கடை வைத்து பிழைப்பதா? அது அவமானம்' என்று நினைத்துதானே வெளி மாநிலங்களில் மாடு போல உழைக்க கிளம்பினீர்கள். அந்த இடத்தில்தான் 'இஞ்சி டீ கடை' போட்டு வளர்ந்து நின்றனர் வட மாநிலக் கூலிகள். சொந்த நிலத்தில் சீ.. சீ.. என்று எதை எல்லாம் நீங்கள் ஒதுக்கினீர்களோ, அதையெல்லாம் செய்துதான் இந்த நிலத்தில் மற்ற மாநிலக் கூலிகள் முதலாளிகளாக வளர்ந்து நின்றனர். இதுதான் நம் கடந்த கால வரலாறு. அந்த வரலாற்றுப் பாடத்தில் இருந்து நாம் கற்க வேண்டாமா?
நீங்கள் பெரிய பெரிய நகைக் கடைகளை நிறுவி முதலாளிகளாக மாறுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு பானிபூரிக் கடை கூடவா உங்களால் திறக்க முடியாது?. பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல்களை கட்டுங்கள் என்று சொல்லவில்லை, ஒரு மாலை நேர தள்ளுவண்டி கடையைக் கூடவா உங்களால் நடத்த முடியாது?
லாக்டவுன் முடிவுறும் போது, ஏராளமான பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும். ஏனெனில், ஊர் சென்ற கூலிகள் உடனடியாக திரும்பி பணிகளுக்கு வர முடியாது. அத்தகைய சிக்கலான பொருளாதார சூழல்தான் நிலவும். இந்த சூழலைப் பயன்படுத்தியேனும் அவரவர் படிப்பு தகுதிகளுக்கு ஏற்ப எல்லாப் பணிகளிலும் சென்று அமருங்கள். வாய்ப்புள்ளவர்கள் சிறு முதலீட்டில் தொழில் தொடங்குங்கள். கடுமையாக உழைக்கத் தயாராகுங்கள். மிக மிக முக்கியமாக, குடிப்பழக்கத்தை முழுமையாக விட்டொழியுங்கள்.
தமிழகக் கூலிகளின் மீது வைக்கப்படும் முதன்மையான குற்றச்சாட்டே அவர்களின் குடிப்பழக்கமும், சோம்பேறித்தனமும்தான். குடிப்பழக்கமும், சோம்பேறித்தனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்று மற்றொன்றைச் சார்ந்தே நிற்கும்.
முதலில் சிறு முதலீட்டில் முதலாளிகளாக மாறுவதும், பிறகு அத்தொழிலை வளர்த்து எடுக்க கடுமையாக உழைப்பதும் எவ்வளவு அவசியமோ, அதற்கு நிகரான அவசியம் குடிப் பழக்கத்தை ஒழிப்பது. குடிப்பழக்கத்தை வைத்துக் கொண்டு கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கினாலும், தொழில் விருத்தி அடைய வாய்ப்பில்லை. குடி குடியைக் கெடுத்தே தீரும்.
கொரானா தடை காலம் முடிந்து, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட வருமானம் குறைவாகவே வந்துகொண்டு இருக்கிறது. காரணம், ஒரு பக்கம் வருமானம் இன்றி தவிக்கும் மக்கள், மறுபக்கம் மறந்த குடியை இத்தோடு தலை முழுகிவிடுவோம் என்று நினைக்கும் சிலரது எண்ணம்.
20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்டிப் படைத்த குடி எனும் அரக்கன் கொஞ்சம் தடுமாறத் தொடங்கி இருக்கிறான். அவனைக் கொன்று புதைக்கும் வேலையையும் தமிழர்கள்தான் செய்ய வேண்டும். அரசாங்கம் இதை செய்யும் என எதிர்பார்ப்பது வீண். அவர்களுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காகவே இதை திறந்துவிட்டு இருக்கின்றனர். நாம் எத்தகையை எதிர்ப்பை பதிவு செய்தாலும் அவர்கள் கடையை மூடப்போவதில்லை என்பதே நம் அனுபவம். அதனால், குடியை குடிமக்கள்தான் ஒழிக்க வேண்டும்.
குடியை ஒழித்து, சொந்த தொழில்களை தொடங்கி, கடுமையான உழைப்பால் நம் நிலத்தில் ஆழமாக கால் ஊன்றி நிற்பதற்கு கொரானா பெரு வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. 'கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு...' என்று நம் மூத்தோர்கள் சொல்வார்களே, அதுதான் இப்பொழுது நடந்தவை. இந்த உண்மைகளை உணர்ந்து, தமிழர்கள் விழிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது.
ஒரு இனத்தின் மீட்சி என்பது அதன் அடிக்கட்டுமானமான தனிநபர் மீட்சியில் இருந்துதான் தொடங்கும். ஒவ்வொரு தமிழரும் தன்னளவில் மாற்றத்தை முன் வைக்காது, இனம் மீள்வதென்பது சாத்தியப்படாது. ஒரு தனிநபர் ஒழுக்கத்தோடும் நேர்மையோடும் வாழாது, அந்த நபருக்கான பொருளாதார மீட்சி நிகழாது. நிகழ்ந்தாலும் அது நீடித்த பயனைத் தராது. தனி நபர் பொருளாதார மீட்சியை நுண்பொருளாதார வளர்ச்சியென வரையறுக்கலாம். நுண்பொருளாதார கட்டமைப்பை வலுவாக உருவாக்கினால்தான், நிலமும், நிலத்தின் மீதான உரிமையும் பறிபோகாமல் தடுக்க முடியும்.
முதலில் நம் நிலத்தில் நில்லுங்கள்...
பிறகு இனத்தின் உரிமைகளை வெல்லுங்கள்...
- ஆ. அருள்ராம்
21/05/2018
Agriculture is backbone of union I still remember studied this in civic papers at schools....
I am not sure about other roads but Chennai Salem 8 lane highway is useless project where as we already have 6 lane which is just 47 minutes more than what they planned
We don't need this since the 47 minutes of few people's is not worth the nature that had 7 mountains (servarayan range of mountains)will be destroyed whole or part for this project... There are a 1000's of acres which is farm land will get snached....
Are we going to hell so fast ?....
Five New Highways Are Coming Up, So You Can Drive Across The Country In Very Less Time
The highways ministry has decided to build more greenfield highways.
02/05/2018
தமிழிய மொழிக்குடும்பம்
1856 இல் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்கு திராவிடம் என்று பெயர்வைத்து நூல் வெளியிட்டார்.
ஆனால் அதற்கு இரண்டாண்டுகள் முன்பே 1854 இல் ஜெர்மானிய மொழியியல் ஆய்வாளர் பிரடெரிக் மாக்சு முல்லர் (Friedrich Max Müller ) என்பவர் தமது "The classification of the Turanian languages" எனும் நூலில் தென்னிந்திய மொழிக்குடும்பத்திற்கு இட்டப் பெயர் தமுலிக (Tamulic) மொழிக் குடும்பம் என்பதாகும்.
இவருக்கும் முன்பு 1847 -லேயே ஆங்கிலேயே இனவியல் ஆய்வாளர் பிரையன் ஓட்குசன் (Brian Houghton Hodgson) இந்தியாவின் பூர்வீக இனமாக தென்னிந்தியரை தமுலியர் (Tamulian) என்றும்
அவர்களின் மொழிக்குடும்பத்தைத் தமுலிய (Tamulian) மொழிக் குடும்பம் என்றும் தம் "Essay the first on the Kocch, Bodo and Dhimal Tribes" எனும் நூலில் பெயரிட்டு குறித்துள்ளார்.
தமிழும் அதன் வழி வந்த மொழிகளும் தமிழிக, தமிழிய என்னும் பெயரால் அழைக்கப்படுவதே சரியாகும்.
கால்டுவெல்லோ தமிழும், அதன் பிற உறவுமொழிகளும் மூலத் திரவிடம் (Proto- dravidian) என்றொரு பொது மொழியினின்று வந்ததாக பிறழ உரைத்துள்ளார்.
இது தமிழின் பழமையைக் குறைத்து பிற தென்னிந்திய மொழிகளுக்கு ஈடாகத் தமிழையும் ஒரு சேய்மொழியாக வைக்கும் முயற்சியாகும்.
தமிழுக்கு மூலமாக எம்மொழியும் இல்லை.
அப்படி இருந்ததாக கால்டுவெல் நிறுவவும் இல்லை.
கால்டுவெல்லின் தடுமாற்றம் அவரது நூலில் தலைப்பிலேயே தெரிகிறது.
"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" எனுமாறு (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages) குழப்பமான ஒரு பெயரையே வைத்துள்ளார்.
தமிழர் வரண (Race- மரபின) அடிப்படையிலும் தமிழர்தான்.
தேசிய இன(Ethnicity) அடிப்படையிலும் தமிழர்தான்.
திராவிடர் என்ற இல்லாத இனமாகத் தமிழர் உட்பட எவரையும் திரித்தல் கூடாது.
தமிழ் மொழியைத் தமிழென்றும்,
தமிழினத்தாரைத் தமிழரென்றும்,
தமிழ் வழிவந்த மொழிகளை தமிழிக(Tamilic) மொழிகள் என்று வழங்குவதே சரியானதாகும்.
(பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி: அழகன் தமிழன் )
13/04/2018
தமிழ் புத்தாண்டு
சிறப்பு பார்வை
சுறவம்
தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயர்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)
மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.
வைகறை
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
யாமம்
என்று அவற்றை அழைத்தார்கள்.
அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, _தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.
(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.
ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன்
அப்படி இந்த நாளை கொண்டாடிதான் ஆகவேண்டுமெனில் சித்திரை திருநாளாக கொண்டாடுங்கள்
🌹நன்றி:
திரு. கண்ணுசாமி
தமிழ்நாடு கலை இலக்கிய கணசங்கம்
மற்றும்
தகடூர் தமிழ்வாணன்
தகடூர் தமிழ்க் குழு
31/01/2018
Caring the Abandoned Needy is the service to GOD. ஆதரவற்றருக்கு அடைக்கலம் அளிப்பது இறைத்தொண்டு.
Reflect the kindness and Support :
ThaaiMadi Trust
Regn no.: 1/2014
Magudanchavadi, Sankari, Salem - 637 103
Tamilnadu, India
தாய்மடி அறக்கட்டளை
ப.எண் .1/2014
க.எண் .2/238
அரண்மனைக்காடு
காளிகவுண்டம்பாளையம் அஞ்சல்
மகுடஞ்சாவடி வழி
சங்ககிரி, சேலம் - 637 103, தமிழ்நாடு.
Lend a hand / கை கொடுங்கள்.
Founder / நிறுவனர் :
G.DEVI
INDIAN BANK
AC.6426887711
IFSC. IDIB000S090
SANKARI BRANCH
Salem, Tamilnadu, India
Trustee / அறக்கட்டளை :
Thaaimadi Trust
Pallavan Grama Bank
AC. 10002445025
IFSC : IDIBOPLB001
Magudanchavadi Branch
Salem, Tamilnadu, India
31/08/2017
அறிய வகை கத்தி பாம்பு தலையுடன்!!