05/06/2026
பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்று, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை.
தமிழக வெற்றிக்கழக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரு. பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் தனது வலைதள பதிவில் “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் சார்பில்” தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது போல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இது தவறானது.
இத்தகைய கூட்டணி அமைப்பது குறித்தோ, குறிப்பிட்ட இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நாடவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் இது குறித்து கலந்து கொள்ளவும் இல்லை, கருத்துக் கேட்கவும் இல்லை.
அத்தகைய, “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி” பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதுவும் தெரியாது.
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவான தவெக ஆட்சி அமைக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங்கியது. ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமான பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது, ஒன்றிய அரசின் சதி திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது.
திரு. பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்ற ஓர் கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்பதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது.
தங்களன்புள்ள,
(மு.வீரபாண்டியன்)
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு
05/06/2026
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்றும் பிரச்சினை.
தமிழ்நாடு அரசு உறுதியாக செயல்பட வேண்டும்.
சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைபாட்டை வரும் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நேற்றைய தினம் (04.06.2026) உத்தரவிட்டுள்ளது. இது கவலை அளிக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடப்பட்ட சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென வலது சாரி அமைப்பை சேர்ந்த சிலர் வற்புறுத்தி மோதல் நிலையை உருவாக்கி வருகின்றனர்
நீதிமன்றத்திலும் வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.
அந்த சர்வே தூண் நடுவதற்கு முன்பிருந்தே அப்பகுதியில் சிக்கந்தர் தர்கா இருந்து வந்துள்ளது.
அந்த சர்வே தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளின் மூலம் அந்த தர்காவை எதிர்காலத்தில் அகற்றிட வேண்டும் என்று அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு, மத நல்லிணக்கத்தை சீர்க்குலைத்து, மக்களை மத ரீதியாக அணிதிரட்டி, பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதே வலதுசாரி சக்திகளின் நோக்கமாகும். வலதுசாரி சார்புள்ள சில நீதி அரசர்களும் இந்நோக்கத்திற்கு துணை நிற்பது நீதி பரிபலான முறையில் ஏற்பட்டுள்ள பேராபத்தாகும் என்பதை, மதச்சார்பற்ற கொள்கை வழி அரசு கருத்தில் கொள்ள வேண்டும்
நீதிமன்றத்தை பயன்படுத்தி, அரசியல் சட்டத்திற்கு முரணான தங்களது தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளின் மூலம் சர்வே தூணில் தீபம் ஏற்றலாம் என்ற கருத்தை அடிப்படையிலேயே நிராகரிக்க வேண்டும்.
இத்தகைய முயற்சி நமது அரசியல் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற விழுமியங்களுக்கும், மத நல்லிணக்கத்திற்கும், மக்களின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும்.
அது மட்டுமல்ல, 1991 வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 (The Places Of Worship (Special Provisions) Act, 1991 க்கும் எதிரானதாகும்.
இச்சட்டப்படி, 1947 ஆகஸ்டு 15-க்கு முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். 1947 ஆகஸ்டு 15-க்கு முன்னர் வழிப்பாட்டு தலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பிரச்சினையில், தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை இப்போதும், வரும் காலத்திலும் உறுதியோடு முன்னெடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.
வலதுசாரிகள் மற்றும் வலது சாரி சார்புடைய நீதியரசர்களின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் சட்ட ஒழுங்கையும், மதச்சார்பற்ற கொள்கை நிலையில் நின்று, சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும்.
இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றத்தில், சிக்கத்தர் தர்கா அருகில் உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தங்களன்புள்ள,
(மு.வீரபாண்டியன்)
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு
05/06/2026
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தோழர் .மு.நகர பொருளாளர். B.K.N.ராஜாராம் சில தினங்களுக்கு முன் இயற்கை எய்தினார்கள். இன்று திருச்சி வருகை தந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர். இரா.முத்தரசன், மாநில செயற்குழு உறுப்பினர். ம. செல்வராஜ் உள்ளிட்டோர் அவரது படத்திற்கு மாலை அணிவித்து,மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அருகில் AITUC மாவட்ட பொது செயலாளர்க. சுரேஷ் M.C, மாவட்ட செயலாளர் S. சிவா மற்றும் குடும்பத்தினர்கள்.
05/06/2026
எண்ணெய் விலையை ஒன்றிய அரசே தீர்மானிக்க வேண்டும்.
அனைத்து வகை எரிவாயு பொருட்களையும் வெளிநாடுகளிடமிருந்து ரூபாயில் வாங்க வேண்டும்.
#சிபிஐ
05/06/2026
நாங்கள் கம்யூனிஸ்டுகள்
#சிபிஐ
05/06/2026
முதலமைச்சரும்,தவெகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும்!
இந்தியாவிற்கும், குறிப்பாகத்தமிழ்நாட்டிற்கும் பெரும் தீங்கு செய்வதையே தனது கொள்கையாகக் கொண்ட RSS-பாஜக ஆட்சியை தவெக ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா?
இதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்த வேண்டும்!
கே.சுப்பராயன் MP
05/06/2026
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், உணவகம் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே - 4 ஆம் தேதி கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் பாடைகட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஏ.ஜி.பாலன், ஒன்றிய செயலாளர் ப.சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் உரையாற்றினார். அப்போது, ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ஏற்பட்டுள்ள விலை உயர்வுக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.