22/06/2025
DYFI சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி ரிச்சி தெரு - B கிளை மாநாடு தோழர் வினோத் கமல் தலைமையில் நடைபெற்ற. இதில் மாவட்ட தலைவர் தோழர் பார்த்திபன், பகுதி செயலாளர் தோழர் பாபு, தலைவர் தோழர் அருண் குமார் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் தலைவராக தோழர் பிரதாப், செயலாளராக தோழர் வினோத் கமல், துணைத் தலைவராக தோழர் சஞ்சய், இணை செயலாளராக தோழர் விசால் மற்றும் கிளை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
16/06/2025
DYFI சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி களிமண்புரம் கிளை மாநாடு பகுதிக்குழு உறுப்பினர் தோழர் பாரதி தலைமையில் நடைபெற்ற. இதில் மாவட்ட பொருளாளர் தோழர் விக்னேஷ், பகுதி செயலாளர் தோழர் பாபு, தலைவர் தோழர் அருண் குமார் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் தலைவராக தோழர் பாரதி, செயலாளராக தோழர் திவாகர், துணைத் தலைவர்களாக தோழர் பார்கவி, தோழர் விஷ்ணு, இணை செயலாளர்களாக தோழர் பிரபா, தீபக் மற்றும் கிளை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
24/04/2025
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிர் இறந்தவர்களுக்கு இன்று (24.04.2025) மே தின பூங்கா அருகில் DYFI சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிக்குழு சார்பாக
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. பகுதி தலைவர் தோழர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட செயலாளர் தோழர் மணிகண்டன் மற்றும் மாநில செயலாளர் தோழர் சிங்காரவேலர் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினார். இறுதியாக பகுதி செயலாளர் தோழர் பாபு நன்றியுரை கூறினார்.
DYFI சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி குழு*
மத்திய சென்னை