திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கூட்டமைப்பு

திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கூட்டமைப்பு

Share

அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்க்க?

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் அதே நேரத்தில் அரசியலில் மாற்றமும் விரும்பும் இளைஞர்கள் இதில் பங்கு கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். http://YouthPolitics.in

இளைஞர் கூட்டமைப்பில் முன்வைக்கப்படும் கொள்கைகள்:-

1. தனிப்பட்ட ஒருவரை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல், கூட்டுத் தலைமையை உருவாக்கி இளைஞர்களை முன்னிறுத்தி அரசியல் களம் காணுதல்.

2. ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என எந்த பாகுபாடும் இல்லாமல் வேற்றுமைக

16/04/2024
Photos from புதிய தலைமுறை மக்கள் கட்சி's post 26/03/2024
Mobile uploads 01/05/2022
26/04/2022

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் பல மாதங்களாக ஆளுநரின் கையொப்பத்துக்காக காத்து கிடக்கிறது. தற்போது அந்த பட்டியலில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு என்ற சட்ட மசோதாவும் அந்த பட்டியலில் போய் சேரும்.

ஆளுநர் தன் கடமையை சரிவர செய்யத் தவறிவிட்டார் என தமிழ்நாடு முதல்வர் உடனடியாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் அல்லது போராடுபவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

காமராஜர் காலத்தில் நீதிமன்றங்களால் இடஒதுக்கீடு ரத்து செய்தபோது, பெரியார் உள்ளிட்டவர்கள் தீவிர போராட்டம் நடத்தி இடஒதுக்கீட்டு உரிமையை பெற்று தந்தனர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய அரிசியை ஒதுக்காததற்கு அண்ணா சமாதி அருகே போராட்டம் நடத்தி அரிசியை பெற்று தந்தார்.

ஜெயலலிதா அவர்களும் காவிரி உரிமைக்காக அதே அண்ணா சமாதி அருகே போராட்டம் நடத்தி மத்திய அரசை பணிய வைத்தார்.

அதேபோல், நீட் மசோதாவை நிறைவேற்ற தற்போதைய முதலமைச்சர் அண்ணா சமாதி அருகே அமைதி வழியில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் அனைவரும் பக்கபலமாக முதலமைச்சரின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பர். அடுத்த மெரினா புரட்சியாக உருவாகி நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு தீர்வு கிடைக்கும்.

இதனை முன்னெடுக்க முதலமைச்சர் தயாரா?

நன்றி,
இளையதலைமுறை

17/08/2021

Skill India Scheme

Free Welding Course
1.Arc
2.Gas
3.Tic Welding Course

Benefits:
Additional training of Safety / Computer Basics/Spoken English

Training Period :
3 Month Course / During Training Allowance Given

Location: chennai

On Job Training:
After 3 month, 1 year Real Time Exposure training in industry/ Salary- 8k to 10k

After completing training Central Government certificate will be Provided

Degree- 8th,10th,12th / Any Degree

Timing- 8.30am to 1.00pm

Age below -33

Contact:
Manoj
9600962101
****************************************************
*இலவச WELDING பயிற்சி*

*எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!! மத்திய & மாநில அரசின்நிதி உதவியுடன் திட்டத்தின் கீழ் TEAM WORK வழங்கும்* பிரபல நிறுவனங்களில் 100 சதவீத நிரந்தர வேலை வாய்ப்புடன் கூடிய *இலவச WELDING பயிற்சி*.

*பயிற்சிக்கான தகுதி*:

*எட்டாம் வகுப்பு&பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த இளைஞர்கள்.

*பயிற்சி காலம்*:

3 மாதங்கள் மற்றும் ஒரு வருடம் முழு ஊக்க தொகையுடன் கூடிய தொழிற்சாலை சார்ந்த பயிற்சி .

*பயிற்சியின் வகைகள்*:
1.Welding பயிற்சி,

Types

a.) Arc welding
b.) Gas Welding
c.) Tic Welding

*பயிற்சியின் பயன்கள்*:
*1.* பயிற்சியின் போது மாணவர்களுக்கு தங்குமிடம், மூன்று வேளை உணவு , நோட்டு புத்தகங்கள், காலணி சீருடை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
*2* பயிற்சிக்குப் பின் நல்ல ஊதியத்துடன் கூடிய 100 சதவீத நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும் .
*3* கணினி, ஆங்கிலம் மற்றும் Soft skill பயிற்சி வழங்கப்படும்.
*4* தகுதி உடையவருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
*5* பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ்வழங்கப்படும்
*6* பயனாளிகள் அனைவருக்கும் காப்பீட்டுத் திட்டம் இலவசமாக வழங்கப்படும்.

*தொடர்புக்கு*

Manoj
9600962101

*இந்த தகவல் தங்களுக்கு பயன் பெறவிட்டாலும் தேவை படுப்பவர்களுக்கு உதவும் எனவே அனைவருக்கும் பகிரவும் நன்றி 🙏🙏🙏*

07/05/2021

⛽Urgent Emergency 🐙

Urgent Needed CHENNAI TAMBARAM.Date 06/05/2021 Immediatly.
Patient name:Jenifer
B postive
Need 3units
Attender Name:
GODWIN
MOBILE no
7338904004

15/12/2020

திராவிட கட்சிகளுக்கு மாற்று என தேர்தல் அரசியல் காணும் ரஜினி, கமல் ஆகியோரிடம் கீழ்க்கண்ட கேள்விகளை மறக்காமல் கேளுங்கள்

1. லஞ்சம், ஊழலை ஒழிக்க என்ன செயல்திட்டம் வைத்துள்ளீர்கள்?

2. பூரண மது ஒழிப்பிற்கு ஆதரவு உண்டா? தனியாரிடம் மது விற்பனை அளித்தால் மது ஒழிந்து விடுமா?

3. ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணுஉலை, 8 வழிச்சாலை போன்ற திட்டங்களை ஆதரிக்கிறீர்களா?

4. நீட், தேசிய கல்விக்கொள்கை, EIA, வேளாண் மசோதா, CAA, OBC இட ஒதுக்கீடு, 10% உயர்சாதி இட ஒதுக்கீடு போன்றவற்றின் நிலைப்பாடு?

5. ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவு உண்டா? ஜாதி ஆணவக்கொலைகளை தடுக்க என்ன வழி?

6. ஜாதிவாரி இட ஒதுக்கீடு அல்லாமல், பொருளாதார வாரியான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு உண்டா?

7. தாய்மொழி கல்வி ஆதரவு உண்டா? பள்ளியில் இந்தியை மூன்றாவது மொழியாக படிக்க ஆதரவு உண்டா?

8. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க என்ன வழி? என்ன வகையான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவீர்கள்?

9. தனியார் துறையில் ஜாதிவாரி இட ஒதுக்கீடு கொண்டு வருவீர்களா?

10. கனிம வளங்கள் கொள்ளை, பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன வகையான நடவடிக்கைகள் எடுப்பீர்கள்?

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு, தாங்கள் இதுவரை ஏன் எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை?

நன்றி,
இளையதலைமுறை

17/11/2020

நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்...

மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்...

The Greatest Emperor of India - Rajendra chozan.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்.. 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்..

அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன..

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்.. ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் ,வெண்ணை, நெய் போன்றவற்றால் லாபம் ஈட்ட முடியும்...

ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 5 லட்சம் குதிரைகளையும் , ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக ???

போர் புரிவதற்காக மட்டும்தான் !!!

யானைப்படை மற்றும் குதிரைப்படையே இலட்சக்கணக்கில் வைத்திருந்தவனின் , காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்??

தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000...
1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர்...
தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்..

அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக வைத்திருந்துருப்பான் என்பதை கற்பனை செய்யுங்கள்.. மாதக்கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா?. தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழனே முதன் முதற் காரணம்...

எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை ராஜராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து ஜெயங்கொண்ட சோழபுரத்திற்கு தனது தலைமை இடத்தை மாற்றினான் ராஜேந்திரசோழன்...

உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை !!!

ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள " படைநிலை காடுவெட்டி" என்ற ஊரே சாட்சியம்...

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை , பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை...இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்ச் அரசுகள் அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை...
ஒரு நாட்டைப் பிடிக்க 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள் ,குதிரைகள் , காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றான் என்றால் அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும் ???

உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக்கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில் தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்?? அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. அப்படியானால், கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை அறிந்தவனா அவன்??

போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவனுடன் சென்று இருக்க வேண்டும்?? மருத்துவத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற குழுவை அவன் பெற்றிருக்கவில்லை என்றால் 60 ஆண்டுகளாக தொடர் வெற்றி பெற்றிருக்க முடியுமா???

தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன் அவன்... அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்.. நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்??
அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன் ராஜேந்திரசோழன்..

தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்...

நமது அறிவுசார் காப்பியங்களான, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள், மன்னரின் நூல்கள் உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவன் அவன்..

உங்களுக்கு கோயில்கள் எதற்கு? அதற்கு பதில் பள்ளிக் கூடங்களையும் மருத்துவமனைகளையும் கட்டுங்கள் என்று எந்த தற்குறியும் கேள்வி கேட்க வாய்ப்பு வழங்காதவன் அவன்...

முக்கியமாக,
பல்வேறு பொழுதுபோக்குகள் இருக்கும் இந்த நவயுக காலத்திலேயே நமக்குள் தேவை இல்லாத ஜாதி சண்டைகள் வருகிறது. ஆனால் அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான போர் வீரர்கள் இடையே எந்தவித ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை...

ஆம்,
சமூக நீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த சக்கரவர்த்தி அவன்...

தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அவன் ஒருவனே!

மாமன்னன் ராஜேந்திர சோழன் -The Greatest

ஆசிரியர் மற்றும் நூல் ஆய்வாளர்
வேல்சாமி ராமசாமி

கொள்கைகள் | இளைஞர் கூட்டமைப்பு - YouthPolitics.in 02/11/2020

புதிய தலைமுறை மக்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா?
தமிழக அரசியலில் இளையசமுதாயம் மூலம் சமூக & அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியாக இளையதலைமுறை அமைப்பு 2014, நவம்பர் 22 அன்று துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை, பல சமூக நலன் சார்ந்த களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இளையதலைமுறை போன்று பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து 2015, டிசம்பர் 27ஆம் தேதி கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டு "இளைஞர் கூட்டமைப்பு" உருவாகியது.. பொதுவான கொள்கைகள், வேட்பாளர் தேர்வு முறைகள், தேர்தல் பிரசார விதிமுறைகள் மற்றும் வாக்குறுதிகள் போன்றவைகளும் இளைஞர் கூட்டமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது..

கொள்கைகள்:
http://youthpolitics.in/policies/

வேட்பாளருக்கான தகுதிகள்:
http://youthpolitics.in/candidate-qualifications/

தேர்தல் பிரசார விதிமுறைகள்:
http://youthpolitics.in/election-campaign-rules/

2016 தேர்தலில் அனைவரும் சுயேட்சையாக போட்டியிட்டோம். அனைவருக்கும் ஒரே சின்னம் கிடைப்பது சிக்கலாக இருந்ததால், தேர்தல் ஆணையத்தில் புதிய தலைமுறை மக்கள் கட்சி என கட்சியாகவும் பதிவு செய்துள்ளோம்.

மேற்கூறிய கொள்கைகளையும், வேட்பாளர் தகுதிகளையும் முழுமையாக ஏற்று கொண்டவர்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களின் தகவல்களை பூர்த்தி செய்யவும்.. தங்களின் தகவல்கள் மிக ரகசியமாக வைக்கப்படும்..

வேட்பாளராக போட்டியிட பதிவு செய்ய வேண்டிய link:

https://goo.gl/zVwnAR

தன்னார்வலராக இணைய மற்றும் ஆதரவு தெரிவிக்க:

https://goo.gl/ZKa9Nn

பூர்த்தி செய்தவர்களை வைத்து இணையவழி நேர்முக தேர்வு நடைபெறும்.. ஏதாவது சந்தேகங்கள் மற்றும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்... சங்கர் - 9962265231, கோகுல் - 8754814005

இளைஞர் கூட்டமைப்பின் முக்கிய நிகழ்வுகள்:

2016, ஜனவரி 31: இளைஞர் கூட்டமைப்பு மூலம் வேட்பாளர்களை நேர்முக தேர்வு செய்ததை பற்றி தி இந்து நாளிதழில்...
https://goo.gl/nEcSmJ

2016, பிப்ரவரி 24: இளைஞர் அரசியலுக்கு வருவது பற்றியும் / இளைஞர் கூட்டமைப்பு பற்றியும் திரு. தேவ சகாயம் (IAS, ஓய்வு) அவர்களின் பேட்டி...
https://www.youtube.com/watch?v=EgqylidDmms

2016, மார்ச் 6: திரு. சகாயம் IAS அவர்கள் முன்னிலையில் இளைஞர் கூட்டமைப்பு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்...
https://goo.gl/BjkCFE

2016, மே 6: இளைஞர் கூட்டமைப்பு வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்...
http://youthpolitics.in/ilaignar-koottamaippu-candidate-deatails

2016, மே 6: இளைஞர் கூட்டமைப்பு பிரச்சாரம் பற்றி மாலை மலர் நாளிதழில்...
https://goo.gl/QRdjAs

2016, மே 23: இளைஞர் கூட்டமைப்பு பெற்ற ஓட்டுகள் பற்றி தி இந்து நாளிதழில்...
https://goo.gl/VMTVuG

2016, மே 30: போட்டியிட்ட 93 கட்சிகளில், இளைஞர் கூட்டமைப்பு 27 ஆம் இடத்தை பெற்றது...
https://goo.gl/74voIr

நன்றி,
புதிய தலைமுறை மக்கள் கட்சி
(இளையதலைமுறை / இளைஞர் கூட்டமைப்பு)

கொள்கைகள் | இளைஞர் கூட்டமைப்பு - YouthPolitics.in இளைஞர் கூட்டமைப்பில் முன்வைக்கப்படும் கொள்கைகள்:- 1. தனிப்பட்ட ஒருவரை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல், கூட்டுத்...

14/09/2020

நீட் தேர்வை எதிர்த்து மக்கள் பாதை பேரியக்கம் இன்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து நீக்கி மாநிலங்களுக்கு அந்த உரிமையை குடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம். இதில் அனைவரும் பங்கேற்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் மக்கள் பாதை தலைமை அலுவலகம் ( எண் 72, ஸ்ரீ ஐயப்பா நகர் , முதல் பிரதான சாலை, விருகம்பாக்கம் (சின்மயா நகர்) ,சென்னை -92 )

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

இளைஞர் கூட்டமைப்பு, தி பொலிகன், எண்: 142
Chennai
600015