Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம்

Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம்

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம், Political Party, Chennai.

07/06/2026

ஆசியக் கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்தது!

18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ஹாக்கி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இளம் வீரர்களின் அபார திறமை, கடின உழைப்பு மற்றும் நாட்டிற்காக போராடும் வெற்றித் தாகம் இந்த மகத்தான சாதனையை சாத்தியமாக்கியுள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
SDPI IT WING சார்பாக இந்திய ஹாக்கி அணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 🇮🇳🎉

🇮🇳🏆🏑

04/06/2026

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்வி - அரசு மருத்துவர்களுக்கான 50% உள் இடஒதுக்கீடு பறிபோகும் ஆபத்து!

தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் காக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வீரியமாகப் போராட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் வெறும் கட்டிடங்கள் அல்ல; அவை பல கோடி ஏழை, எளிய மக்களின் உயிரைக் காக்கும் உன்னத இடங்கள் ஆகும். இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகம், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை போன்ற மிக முக்கியமான, உயர்தர மருத்துவப் படிப்புகளில் (Super Speciality), தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கென 50% உள் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்திப் பெற்ற இந்த உரிமை, இன்று தமிழக அரசின் மெத்தனப்போக்கால் பறிபோகும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 215 இடங்களில், கடுமையான தகுதி மதிப்பெண் (Cut-off) நிபந்தனைகளால் தற்போது வரை 74 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலியிடங்களை ஒன்றிய அரசின் ‘அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு’ (All India Quota) தாரை வார்ப்பதற்கான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

வழக்கமாக இது போன்ற சூழல்களில் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து, முதலில் தமிழக மருத்துவர்களைக் கொண்டுதான் இந்த இடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், தமிழக அரசின் பலவீனமான வாதத்தாலும், தவறான அணுகுமுறையாலும் நமது மாநில இடங்கள் வெளிமாநிலத்தவருக்குச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

இந்தக் காலி இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்குத் தாரை வார்ப்பது ஏழை, எளிய பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும். இதன் விளைவாக, சிக்கலான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஏழை நோயாளிகள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து, தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது தமிழக பொது சுகாதாரத் துறையையே ஒட்டுமொத்தமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தகுதி மதிப்பெண்களைக் குறைக்கும் போதெல்லாம், அதே சலுகையைத் தமிழக அரசு மருத்துவர்களுக்கும் நீட்டித்து, காலி இடங்களை நமது மாநில மருத்துவர்களுக்கே வழங்க வேண்டும். கடந்த காலங்களைப் போல உச்ச நீதிமன்றத்தில் வலுவான, வீரியமிக்க சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் தமிழக அரசு உடனே பாதுகாக்க வேண்டும்.

ஆகவே, தமிழக மருத்துவர்களின் உரிமையையும், ஏழை எளிய மக்களின் இலவச உயர் சிகிச்சைக்கான உரிமையையும் நிலைநாட்ட, சட்டப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

04/06/2026

72% விசாரணைக் கைதிகள்:
இந்திய நீதித்துறையில் ஒரு நெருக்கடி!

இந்தியாவின் சமீபத்திய சிறை புள்ளிவிவர அறிக்கை (Prison Statistics India report), நம் நாட்டு சிறைத்துறையில் இருக்கும் கடுமையான நெருக்கடியை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைகள் தங்களின் கொள்ளளவை மீறி கைதிகளை அடைத்து வைத்திருப்பது பெரும் கவலையளிக்கிறது. அதைவிட முக்கியமாக, சிறையில் இருக்கும் பெரும்பாலான கைதிகள் நீதிமன்றத்தால் இன்னும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படாத வெறும் விசாரணைக்கைதிகள் (undertrials) ஆவர். 2024-ஆம் ஆண்டு கணக்கின்படி, இந்திய சிறைகளின் கொள்ளளவு 112.7% ஆக உயர்ந்துள்ளதுடன், சிறையில் இருக்கும் மொத்த கைதிகளில் 72.6% பேர் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர் என்பதை அந்த அறிக்கை காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலை வெறும் நிர்வாக குறைபாடு மட்டுமல்ல; இது மனித கண்ணியம், அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே விடுக்கப்பட்டுள்ள கடுமையான சவாலாகும். சிறைகளில் உள்ள அதிகப்படியான நெருக்கடி, விசாரணை என்ற பெயரில் கைதிகள் நீண்ட காலம் சிறையிலேயே முடக்கப்படுவது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் கடுமையான பணியாளர் பற்றாக்குறை ஆகிய அனைத்தும், நீதித்துறையிலும் சிறைத்துறையிலும் உடனடியாக விரிவான சீர்திருத்தங்கள் தேவை என்பதை உணர்த்துகின்றன. நீதி தாமதிக்கப்படுவது, அது மறுக்கப்படுவதற்குச் சமம் என்று 'யங் டெமாக்ரட்ஸ்' (Young Democrats) நம்புகிறது.

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான எளிய மக்கள், தங்களின் விசாரணை எப்போது முடியும் என்று தெரியாமல் சிறைகளில் தொடர்ந்து வாடுகின்றனர். இந்த நிலையை மாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஏழை மக்களுக்கான இலவச சட்ட உதவி திட்டங்களை வலுப்படுத்தவும், நீதிமன்ற தாமதங்களைக் குறைக்கவும், சிறைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், சிறை வசதிகள் மற்றும் கைதிகளுக்கான மறுவாழ்வு மையங்களை மேம்படுத்தவும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு ஜனநாயக சமூகம், அது அதிகாரமிக்கவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை வைத்து மட்டுமல்ல, அதன் காவலில் உள்ளவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை வைத்தும் மதிப்பிடப்பட வேண்டும். இந்தியாவின் சிறைகள் தொடர்ந்து அதிக நெருக்கடியுடன் இருக்கும்போதும், ஆயிரக்கணக்கான மக்கள் சரியான நேரத்தில் சட்ட நடைமுறைகளை அணுக முடியாமல் தவித்து வரும்போதும், இந்தியா நீதியை நிலைநிறுத்துவதாகக் கோர முடியாது.

-வழக்கறிஞர் ஹஸ்ஸான் ஃபைஸி
தேசிய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் - யங் டெமாக்ரட்ஸ்

Photos from SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு's post 04/06/2026
28/05/2026

உலக மக்கள் அனைவருக்கும் SDPI கட்சி வட சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

23/05/2026

| பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது - எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் அறிக்கை

| |

23/05/2026

சென்னையில் தொடரும் மின்வெட்டால் மக்கள் அவதி! தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - SDPI கட்சி வலியுறுத்தல்*

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தலைநகர் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, பல மணி நேரம் நீடித்து வரும் கடுமையான மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது பெரும் கவலையளிக்கிறது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியின்போது, கோடைக் காலத்திலும் கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்த சூழலில், புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே, அதுவும் தலைநகர் சென்னையிலேயே மக்கள் மின்வெட்டைக் கண்டித்து வீதிக்கு வந்து போராடும் அவல நிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் அரசும், மின்வாரியமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், போதிய திட்டமிடலையும் செய்யத் தவறியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக் கால மின்சுமையைத் தாங்கக் கூடிய வகையில் மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களை உடனடியாகப் பராமரிப்புச் செய்ய வேண்டும்.

புதிய அரசு என்பது மக்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தர வேண்டும்.அவர்களின் தூக்கம் கெடுக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடாது. மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் அரசாகச் செயல்பட்டு, இந்த மின்வெட்டுப் பிரச்னைக்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

22/05/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் Chief Minister of Tamil Nadu உயர்திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில், அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ஷாஜகான் (Aduthurai Shahjahan) அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் வன்னி அரசு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் பணிகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

21/05/2026

| பெண் தொழிலாளர்களுக்கான கழிவறை வசதி உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேற்ற வேண்டும்! -எஸ்டிபிஐ

| |

20/05/2026
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Chennai
600021