Jih Kovai

Jih Kovai

Share

Jamaat e Islami Hind- Coimbatore

Photos from Jih Kovai's post 21/04/2026

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்போம்.. 🌄✋🗳️

DMK ITWing DMK Coimbatore Jamaat-e-Islami Hind Tamil Nadu

Photos from Jih Kovai's post 13/04/2026

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாவட்ட அலுவலகத்திற்கு திமுக கோவை மண்டல பொறுப்பாளர்கள் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் வருகை!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை மண்டல திமுக பொறுப்பாளருமான மரியாதைக்குரிய திரு. செந்தில் பாலாஜி அவர்கள் வருகை தந்து ஆதரவு திரட்டினார்.

இந்த சந்திப்பின் போது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் சமூக, கல்வி மற்றும் மனிதநேய பணிகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், ஜமாஅத் முன்வைத்த கோரிக்கைகளை தேர்தலில் வெற்றி பெற்ற பின் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜமாஅத்தின் “மக்கள் தேர்தல் அறிக்கை”யை கோவை பெருநகர தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் மற்றும் செயலாளர் ஜனாப். M.S. சபீர் அலி ஆகியோர் இணைந்து வழங்கி, முக்கிய கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் ஜமாஅத் கோவை பெருநகரப் பொறுப்பாளர்களும், செயலாளர்களும் உடனிருந்தனர்.

Abdul Hakkim Sabeer Ali

சமுதாய முன்னேற்றத்தின் பாதையில்… ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாநகரின் மக்கள் சேவைப் பணி 05/03/2026

*சமுதாய முன்னேற்றத்தின் பாதையில்… ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாநகரின் மக்கள் சேவைப் பணிகளில் சில!*

சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாநகரம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த நற்பணியை தொடர்ந்து முன்னெடுக்க, உங்கள் ஜகாத் மற்றும் சதகா தொகைகளின் மூலம் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சமுதாய முன்னேற்றத்தின் பாதையில்… ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாநகரின் மக்கள் சேவைப் பணி On the Path of Social Empowerment…Some of the People-Centric Service Initiatives of Jamaat-e-Islami Hind – Coimbatore CityJamaat e Islami Hind Coimbatore | S...

Photos from Jih Kovai's post 10/12/2025

லிபாஸ் தையல் & எம்பிராய்டரி பயிற்சி மையம் – சான்றிதழ் வழங்கும் விழா

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - கோவை பெருநகரத்தின் கீழ் செயல்படும் லிபாஸ் தையல் & எம்பிராய்டரி பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற நூறுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா 10 டிசம்பர் 2025 அன்று நடைபெற்றது.

சமூகத்தில் நலிவடைந்த பெண்களுக்கு திறன் மேம்பாடு, வருவாய் வாய்ப்பு, சுயநம்பிக்கை ஆகியவற்றை உருவாக்கும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த மையம், கோவையில் நான்கு இடங்களில் சிறப்பாக செயல்பட்டு, பல நூறு பெண்களை வாழ்க்கை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தி வருகிறது.

இந்த ஆண்டும், நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கோவை மாவட்ட சிறுபான்மை நல அலுவலரும், துணை ஆட்சியருமான திருமதி. N.A. சங்கீதா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின் தொடக்கமாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை பெருநகர தலைவர் திரு. P.S. உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரையாற்றினார் . அவர் தனது உரையில், பெண்களின் முன்னேற்றம் சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை வலியுறுத்தினார். மேலும் லிபாஸ் பயிற்சி மையம் வழியாக திறன் பெற்ற பெண்கள், சமூகத்தில் முன்னேற விரும்பும் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என ஊக்கமளித்தார்.

தொடர்ந்து, கோவை மாவட்ட சிறுபான்மை நல அலுவலரும் துணை ஆட்சியருமான திருமதி N.A. சங்கீதா அவர்கள் சிறப்பு உரையாற்றினார். அவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் மக்கள் சேவை முயற்சிகளை பாராட்டியதோடு, பெண்கள் தொழில்முனைவு, திறன் மேம்பாடு, சந்தை வாய்ப்புகள் போன்ற துறைகளில் பல பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கினார்.

தொடர்ந்து பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கப்பட்டது. பெண்கள் பெரும் மகிழ்ச்சியோடு சான்றிதழ்களைப் பெற்றதோடு, அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள் மீது கொண்ட அன்பு மற்றும் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி தலைவர். திருமதி. ஜஹீனா அஹமது அவர்களும், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி துணைத் தலைவர் ஆலிமா. சலீனா பாரி அவர்களும், ஜமாஅத் மக்கள் தொடர்பு செயலாளர் திரு. அப்துல் ஹக்கீம் அவர்களும், கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் சுயதொழில் உதவிக் குழு செயலாளர் திரு.சாகுல் ஹமீத் அவர்களும், பல்வேறு முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அஸ்ஸபீலுல் ஹுதா - வழிகாட்டும் பாதை 17/10/2025

✨ வழிகாட்டும் பாதை ✨

📢 சிறப்பு ஆன்லைன் வகுப்பு

Youtube வழியே!

🎥 தலைப்பு: "ரசித்து வாழ வேண்டும்"

அஸ்ஸபீலுல் ஹுதா - வழிகாட்டும் பாதை Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

17/10/2025

🌙 அஸ்ஸபீலுல் ஹுதா (السبيل الهدى)
✨ வழிகாட்டும் பாதை ✨

📢 சிறப்பு ஆன்லைன் வகுப்பு

🎥 தலைப்பு: "ரசித்து வாழ வேண்டும்"

🗣 உரையாற்றுபவர்:
மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை

📅 தேதி: வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025
🕘 நேரம்: இரவு 9:00 – 9:45 மணி வரை

🌐 வழி: Zoom App

🔗 Zoom லிங்க்:
https://zoom.us/j/98878147111?pwd=YPWR5rnp0nVeo7ABjx65SQA1R3KssL.1

📍 ஏற்பாடு: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை பெருநகரம்
📞 தொடர்பு: 90033 69278

📲 தொடர்ந்து வகுப்புகளுக்கான WhatsApp குழு:
https://chat.whatsapp.com/FBZIh36CXiL6mJaGRjbFAF

📤 இந்த செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பகிருங்கள்!
✨ உங்கள் உள்ளத்திற்கும், உயிர்த்திறத்திற்குமான ஒரு அழைப்பு இது!

Join our Cloud HD Video Meeting 10/10/2025

இன்னும் சில நிமிடங்களில்..

அனைவரும் இணைந்திடுங்கள்

🌙 அஸ்ஸபீலுல் ஹுதா (السبيل الهدى)
✨ வழிகாட்டும் பாதை ✨

🎥 சிறப்பு ஆன்லைன் வகுப்பு

📖 தலைப்பு: “நான்கு வகை வாழ்க்கை!”

🗣 உரையாற்றுபவர்:
மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை

📅 தேதி: வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025
🕘 நேரம்: இரவு 9:00 – 9:45

🌐 வழி: Zoom App
🔗 Zoom லிங்க்:

Join our Cloud HD Video Meeting Zoom is the leader in modern enterprise cloud communications.

10/10/2025

இன்று...

🌙 அஸ்ஸபீலுல் ஹுதா (السبيل الهدى)
✨ வழிகாட்டும் பாதை ✨

🎥 சிறப்பு ஆன்லைன் வகுப்பு

📖 தலைப்பு: “நான்கு வகை வாழ்க்கை!”

🗣 உரையாற்றுபவர்:
மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை

📅 தேதி: வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025
🕘 நேரம்: இரவு 9:00 – 9:45

🌐 வழி: Zoom App
🔗 Zoom லிங்க்:
https://zoom.us/j/98878147111?pwd=YPWR5rnp0nVeo7ABjx65SQA1R3KssL.1

📍 ஏற்பாடு:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை பெருநகரம்

📞 தொடர்பு: 90033 69278

📲 தொடர்ந்து வகுப்புகளுக்கான WhatsApp குழு:
https://chat.whatsapp.com/FBZIh36CXiL6mJaGRjbFAF

📤 இந்த செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பகிருங்கள்!

Photos from Jih Kovai's post 03/10/2025

கோவை இஸ்லாமியக் கூட்டமைப்பின் சார்பாக இஸ்ரேலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

--------------------------------

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பின் சார்பாக பாலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கொள்ளும் இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - 03 அக்டோபர் 2025 அன்று கோவையில் நடைபெற்றது.

பாலஸ்தீனர்கள் கொடுமைக்குள்ளாவதையும், பச்சிளம் குழந்தைகளும் கொல்லப்படுவதையும் கண்முன்னே நிறுத்தும் விதமாக கோவை இளைஞர்கள் மாடல்கள் செய்து வந்திருந்தது காண்போரை கண்களங்கச் செய்தது..

ஆண்களும், பெண்களும் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

பாலஸ்தீனம் வெல்லட்டும்...
அல்லாஹு அக்பர்!

01/10/2025

📢 கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில்...

🇵🇸 பாலஸ்தீன் மீது இஸ்ரேல் அரசு மேற்கொள்ளும் இனப்படுகொலையை கண்டித்து

✊ பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

🗓 நாள் : 03-10-2025 (வெள்ளிக்கிழமை)
⏰ நேரம் : மாலை 3 மணி
📍 பேரணி துவங்கும் இடம் : ஆத்துப்பாலம்

➡️ அனைவரும் நீதிக்காக குரல் கொடுக்க ஒன்றிணைந்து பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அஸ்ஸபீலுல் ஹுதா - வழிகாட்டும் பாதை 26/09/2025

Youtube Live - அஸ்ஸபீலுல் ஹுதா சிறப்பு ஆன்லைன் வகுப்பு

🎥 தலைப்பு: “ஐந்து கேள்விகள்!”

🗣 உரையாற்றுபவர்:
மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை

அஸ்ஸபீலுல் ஹுதா - வழிகாட்டும் பாதை Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Karumbukkdai
Coimbatore
641008