கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம்

கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம்

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம், Public & Government Service, Coimbatore.

🏛️ கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம்.

📍 கோவை மாவட்டம், கூடலூர் நகராட்சி.

📢 மக்கள் குரல் • மக்கள் உரிமை • மக்கள் நலன்.

🤝 பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படும் தளம்.

👇 Follow செய்யுங்கள் உறவுகளே!

09/07/2026
08/07/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Raghu Sekar, Gowri Shankar, Pradeep Pk, Ks Mani, Maya Kannan Navarasa Nayakan, Veera Mani, Vijayan Vijayan, Vijayakumar Easwaran, Mskr Mskr Mskrni, Msankar Msankar, M Perumal M Perumal, Everest Oliyullah Raja, Elango, Sadaiyandi Sadaiyandi, Dheepan, Mohamed Ansari, Samuel Gnanadasan, Rajan Rajan, Naga Nagarani, A Sasikumar Kumar, Ragupathy VM, Dharmaraj N, செந்தில்வேல் கோகிலா , Ravi Kumar, R. Velusamy, Muthu P, Karthi Kumar, Raja Raja

Photos from தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்'s post 07/07/2026

🌿 கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம் 🌿

"விவசாயி பாதுகாப்பே – உணவுப் பாதுகாப்பு!"

விவசாயம் என்பது விவசாயிகளின் பிரச்சினை மட்டும் அல்ல; அது ஒவ்வொரு குடும்பத்தின் உணவுப் பாதுகாப்புடனும், நம் சமூகத்தின் எதிர்காலத்துடனும் தொடர்புடையது.

நமக்கு தினமும் உணவு உற்பத்தி செய்து தரும் விவசாயிகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.

எனவே, விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம். விவசாய நிலங்கள், நீர்நிலைகள், இயற்கை வளங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பைக் காக்க பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.

விவசாயி வாழ்ந்தால்தான் மக்கள் வாழ்வார்கள்.
விவசாயம் செழித்தால்தான் நாடு செழிக்கும்.

ஒன்றிணைவோம்! விவசாயத்தைக் காப்போம்! நம் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!

#கூடலூர்_நகராட்சி_மக்கள்_மன்றம்
#விவசாயியை_காப்போம்
#உணவுபாதுகாப்பு
#விவசாயம்
#நீர்வள_பாதுகாப்பு
#விளைநிலங்களை_காப்போம்
#மக்கள்_ஒற்றுமை
#தமிழகம்
#ஒன்றிணைவோம்
#இயற்கையை_காப்போம்

06/07/2026

📢 கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம்

அரசு இடத்தில் நடைபெற்று வரும் கோயில் திருப்பணி, ஊர் பொதுமக்களில் ஒரு பகுதியினரை ஒதுக்கி வைத்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல்வேறு புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளுக்குப் பிறகு, 01.07.2026 அன்று அனைவரும் இணைந்து ஆலோசித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனை நம்பி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும் முன்பே, அரசு இடத்தில் நடைபெறும் கோயில் திருப்பணியை தொடர்ந்து மேற்கொள்வது பொதுமக்கள் மத்தியில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தி, மறுபுறம் பணிகளைத் தொடர்வது யாரை ஏமாற்றும் முயற்சி என்பது தெரியவில்லை. அரசியல் பலம், சாதிய பலம், பணபலம் ஆகியவற்றை நம்பி, சாமானிய மக்களின் நம்பிக்கையுடன் அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் உகந்ததல்ல.

உண்மை, நீதி மற்றும் மக்களின் உரிமை எப்போதும் நிலைத்திருக்கும்.

– கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம்

05/07/2026
05/07/2026

📢 கூடலூர் நகராட்சி 3 மற்றும் 5வது வார்டு பொதுமக்கள் கவனத்திற்கு

கூடலூர் நகராட்சி நகர்மன்றத் தலைவர் திரு. அ. அறிவரசு அவர்கள், அனைத்து ஊர் பொதுமக்களையும் இணைத்து, எந்தவித பாகுபாடும் இன்றி, சமத்துவம், சமூக நீதி மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கோயில் திருப்பணியை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கொள்கைகளை பின்பற்றாமல், பொதுமக்களை புறக்கணித்து திருப்பணி மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட்டால், கோயில் அமைந்துள்ள இடத்தின் சட்ட நிலை காரணமாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், "குடமுழுக்கு நடைபெறும் வரை பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டே இருங்கள் குடமுழுக்கு தொடங்கிய பிறகு யாராலும் எதுவும் செய்ய முடியாது எந்த மனுவும் வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நகர்மன்றத் தலைவர் திரு. அ. அறிவரசு அவர்கள் கூறியதாகவும் சில தகவல்கள் மற்றும் புரளிகள் பொதுமக்கள் மத்தியில் பரவி வருகின்றன.

இந்நிலையில், சமத்துவம், சமூக நீதி மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மதிக்காமல், ஊரில் பிரிவினையை உருவாக்கி, ஆணவப் போக்குடன் குடமுழுக்கு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

மேலும், இத்தகைய சூழ்நிலை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் தகவல்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் புரளிகள் குறித்து, குடமுழுக்கு நடத்த அழைக்கப்படவுள்ள ஆன்மீக குருமார்களுக்கும் தெரியப்படுத்தப்படலாம் என்ற புரளியும் பொதுமக்கள் மத்தியில் பரவி வருகிறது.

உண்மை எது? புரளி எது? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

– கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம்

#கூடலூர்_நகராட்சி_மக்கள்_மன்றம்
#திருமலைநாயக்கன்பாளையம்
#கோயில்திருப்பணி
#குடமுழுக்கு
#சமூகநீதி
#சமத்துவம்
#தீண்டாமைஒழிப்பு
#சாதிஒழிப்பு
#பொதுமக்கள்உரிமை
#கோயில்பாதுகாப்பு
#பொதுக்கோயில்
#மக்கள்குரல்
#உண்மை_வெளிவரட்டும்
#நீதிவேண்டும்
#அனைவருக்குமானகோயில்
#தமிழ்நாடு












Photos from கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம்'s post 03/07/2026

📢 கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம்

அரசு இடத்தில் நடைபெற்று வரும் கோயில் திருப்பணி, ஊர் பொதுமக்களில் ஒரு பகுதியினரை ஒதுக்கி வைத்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல்வேறு புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளுக்குப் பிறகு, 01.07.2026 அன்று அனைவரும் இணைந்து ஆலோசித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனை நம்பி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும் முன்பே, அரசு இடத்தில் நடைபெறும் கோயில் திருப்பணியை தொடர்ந்து மேற்கொள்வது பொதுமக்கள் மத்தியில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தி, மறுபுறம் பணிகளைத் தொடர்வது யாரை ஏமாற்றும் முயற்சி என்பது தெரியவில்லை. அரசியல் பலம், சாதிய பலம், பணபலம் ஆகியவற்றை நம்பி, சாமானிய மக்களின் நம்பிக்கையுடன் அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் உகந்ததல்ல.

உண்மை, நீதி மற்றும் மக்களின் உரிமை எப்போதும் நிலைத்திருக்கும்.

– கூடலூர் நகராட்சி மக்கள் மன்றம்

#கோயில் #சமூகநீதி #சமத்துவம் #சாதியபாகுபாடு #திமுக #வீதிலீடர்ஸ் #பாஜக #அஇஅதிமுக

03/07/2026

கூடலூர் நகராட்சி சாமானிய மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் அடிப்படை உரிமைகள் சமமாக கிடைக்க செய்ய வேண்டிய கோரிக்கை மனு மற்றும் புகார் மனு வழங்கும் படிநிலைகள் உதாரணமாக வழங்கப்பட்டுள்ளது உறவுகளே!

#கூடலுர்_நகராட்சி

03/07/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Arivu Alagan, Prabhu Maruthamuthu, Manamae Gunam, Mannattil Hari Narayanan, Manikandan Auditor, Rajkumar M L, Sridhar Murugesan, Chandramouli Padmanabhan, Suresh Soulbuddy, Suresh Kumar, Smart Selva, Nallasivam Rajkumar, Boopathi Vinoth, Vijayakumar Ramakrishnan, Anees Moulavi, Vasudevan India, Mahendran Raju, Senthil Kumar, Divakaran Murugesan, Robin Kanisias, கவிதைப்பித்தன். பாவலர் க.கவிபிரபா கரன், Santhosh Pk, T Senthil Raj, Paul Raj Pitchai, Antony Rayen, Lakshmaraj Vidhya, Pachaiyappan Pachai, Manikandan Mca, Chinnappan Kumararaju, Mani Duraisamy, E Suresh Kumar, மருத்துவர் ஜெயகாந்தன், Udaya Kumar S, Prabakaran U, M Dilli Balaji, Kongu Easwaramoorthy, Viswanathan Shaberi, Sampath Kumar Ssm, Kalai Selvan, Venkatessan Vengi, Sheik Sheik, Thiyagarajg Thiyagu, Kother Mydeen Kother Kothermydeen, Arunachalam Leelavathy, Alagesan Alagu, P Elaya Kumar, Suresh Samandhan, Vivek Sundar, Mahe Mahe, Karthik Mlk

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Coimbatore