S Ananthakrishnan TamilNadu

Call Website

S Ananthakrishnan  TamilNadu 🇮🇳

Public Service | Youth Empowerment | Digital India | Rural Development | Entrepreneur
“எண்ணிய முடிதல் வேண்டும் – மக்களுடன், நாட்டிற்காக!”

17/09/2026

*💥 17 ஆண்டுகள் கழித்து இன்று குடமுழுக்கு; ஒளி வெள்ளத்தில் மீனாட்சி அம்மன் கோயில்.*

17 ஆண்டுகளுக்குப் பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறுவதால் அதனை காண ஆவலுடன் காத்திருக்கும் பக்தா்கள்.

மீனாட்சி அம்மன் கோயிலில் 2009 ஏப்ரல் 8-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் 17 ஆண்டுகள் கழித்து இன்று குடமுழுக்கு.

🌹 ஒரு தலைவர் உயர்வது பதவியால் அல்ல… பண்பால்!21.08.2026 — என் மனதில் என்றும் நிற்கும் ஒரு சிறப்பான நாள்.மக்களின் முதலமைச்...
23/08/2026

🌹 ஒரு தலைவர் உயர்வது பதவியால் அல்ல… பண்பால்!

21.08.2026 — என் மனதில் என்றும் நிற்கும் ஒரு சிறப்பான நாள்.

மக்களின் முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படும் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ள மாண்புமிகு அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய மகிழ்ச்சியான தருணம்.

அன்றைய நாள், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முதன்முறையாக சட்டப்பேரவையில் தமது துறையின் மானியக் கோரிக்கையை வாசிக்க இருந்த முக்கியமான நாள். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்கு முன்பாக, திருப்பதி ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாளின் பிரசாதத்தை நண்பர்களுடன் அன்புடன் வழங்கி, இறையருளுடன் அவரது பணி சிறக்க மனமார வாழ்த்தினேன். 🙏

ஒருவரின் பதவி உயர்வைப் பார்த்து வியப்பது எளிது…
ஆனால் பதவி உயர்ந்த பின்னரும் அவர் மாறாமல் இருப்பதைப் பார்ப்பது அரிது!

அன்றும் மாநிலத் தலைவராக இருந்தபோது,
இன்றும் மாண்புமிகு அமைச்சராக உயர்ந்திருக்கும் போதும்…

என்னைப் பார்த்தவுடன் அதே அன்புடன்,
“வாங்க ஆனந்த்…” 😊

என்ற புன்னகையோடு அழைக்கும் அந்த ஒரு வார்த்தை போதும் — அவருடைய உயரத்தை புரிந்துகொள்ள.

அதிகாரம் வந்தால் சிலர் தூரமாகிவிடுவார்கள்;
ஆனால் உண்மையான தலைவர்கள் அதிகாரம் வந்த பிறகும் மக்களோடு இன்னும் நெருக்கமாக இருப்பார்கள்.

அந்த வகையில், பதவி உயர்ந்தாலும் தலைக்கனம் இல்லாமல், பொறுப்பு பெருகினாலும் எளிமையை இழக்காமல், அனைவரையும் மதித்து அரவணைக்கும் நிர்மல் குமார் அவர்கள் ஒரு நல்ல தலைவராக மட்டுமல்ல… நல்ல மனிதராகவும் என் மனதில் உயர்ந்து நிற்கிறார். ❤️

மேலும், எரிசக்தித் துறை மற்றும் சட்டத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்வையிட எனக்கு அனுமதிச் சீட்டு வழங்கி அந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏

அது ஒரு அனுமதிச் சீட்டு மட்டுமல்ல…
என் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் அடையாளம்.
நம்பிக்கையின் வெளிப்பாடு.
உறவின் நினைவுச் சின்னம்.

மக்களின் முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பான நிர்வாகத்தை வழங்கும் இந்தப் பயணத்தில், அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் மக்கள் பணி மேலும் சிறக்கட்டும்.

திருப்பதி ஏழுமலையான் அருளும்,
மக்களின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலும்,
மக்களின் அன்பும் ஆதரவும்
அமைச்சர் திரு.நிர்மல் குமார் அவர்களுக்கு என்றும் துணை நிற்கட்டும். 🙏🌹

**“பதவி அவரை உயர்த்தவில்லை…

அவருடைய பண்புதான் பதவிக்கும் பெருமை சேர்க்கிறது!”**

அத்தகைய எளிமையான தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்தியதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

மாண்புமிகு அமைச்சர் திரு. CTR.Nirmalkumar அவர்களுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துகளும்…
நெஞ்சார்ந்த நன்றிகளும்! ❤️🙏
என்றும் உண்மையுடன்
S AnandaKrishnan
தமிழக வெற்றி கழகம்
திண்டுக்கல் தெற்கு மாவட்டம்

🎉🎂 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎂🎉தமிழக வெற்றி கழகத்தின் அன்பிற்குரிய திரு. வி. ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல...
15/08/2026

🎉🎂 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎂🎉

தமிழக வெற்றி கழகத்தின் அன்பிற்குரிய திரு. வி. ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐❤️

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.”

அன்பை யாராலும் அடைத்து வைக்க முடியாது என்பதை உணர்த்தும் இந்த திருக்குறளுக்கு ஏற்ப, அனைவரிடமும் அன்பும் நட்பும் பாராட்டி, எளிமையுடனும் மனிதநேயத்துடனும் பழகி வரும் இளைஞர்களின் நாயகன், நத்தம் – ரெட்டியபட்டி திரு. வி. ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌟

🙏 தங்களின் அன்பு, நட்பு மற்றும் சமூகப் பணிகள் மேலும் சிறந்து விளங்கட்டும்.

💐 நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, மனநிறைவு, வெற்றி மற்றும் அனைத்து வளங்களும் பெற்று பல்லாண்டு சிறப்புடன் வாழ மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐

#தமிழகவெற்றிக்கழகம் #இளைஞர்களின்நாயகன் #நத்தம்

திண்டுக்கல் தெற்கு மாவட்டம் நத்தம் தொகுதி தமிழக வெற்றி கழகம்

பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் மாநிலத் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்ப...
22/06/2026

பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் மாநிலத் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் இன்று விலகுகிறேன்.

இந்தப் பயணத்தில் என்னுடன் இணைந்து செயல்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், சமூக ஊடகப் பிரிவு நண்பர்கள் மற்றும் எண்ணற்ற கட்சித் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்சி எனக்கு பல அனுபவங்களையும், நல்ல உறவுகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் அளித்துள்ளது.

அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
– எஸ். ஆனந்த கிருஷ்ணன்
Balaji M S Nainar Nagenthran BJP Tamilnadu BJP INDIA S Ananthakrishnan TamilNadu Narendra Modi Amit Shah

01/06/2026
01/06/2026

எளிய வியாபாரிகளின் வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும் பிரதமரின் ஸ்வநிதி திட்டம்!

12 ஆண்டுகள் மக்கள் சேவை, நல்லாட்சி மற்றும் அர்ப்பணிப்பு 🇮🇳மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு தலை...
26/05/2026

12 ஆண்டுகள் மக்கள் சேவை, நல்லாட்சி மற்றும் அர்ப்பணிப்பு 🇮🇳
மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமையில், வளர்ச்சி, வலிமை, டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு இந்தியாவின் புதிய பயணம்! 🚩
#மோடி_அரசு_12ஆண்டுகள்

#நல்லாட்சி
#விக்சித்_பாரத்

Address

Dindigul

Alerts

Be the first to know and let us send you an email when S Ananthakrishnan TamilNadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share