ErodeWest

ErodeWest

Share

Dravidian Model State

03/06/2026



மாண்புமிகு. எதிர்கட்சிதலைவர்
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்த வீடீயோ...
முத்தமிழறிஞர் கலைஞர் 103-ஆவது பிறந்தநாள்.

03/06/2026

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் வாழியவே!

03/06/2026

தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்ற திராவிடச் சூரியன் உதித்தெழுந்த நாள் இன்று! 🌄

03/06/2026

“இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டின் எந்தப் பக்கம் புரட்டினாலும்
காணப்படும் பாடம், பகுத்திறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்!”

என பராசக்தியில் குணசேகரன் கர்ஜித்த வசனங்களைக் கொண்டே அதை எழுதிய முத்தமிழறிஞர் கலைஞரின் மன உறுதியை யூகிக்கலாம். அவர் நினைத்திருந்தால் வெறுமனே அரசியல் தத்துவம் என்று எழுதியிருக்க முடியும். ஆனால் ‘பயனுள்ள’ என்ற முன்னொட்டின் மூலமே இந்த மண்ணுக்கான அரசியலே தனக்கானதும் என்று மன உறுதியோடு தனது கருத்தை வெளியிடும் ஆற்றல் அவரிடமிருந்தது.

தேர்தலில் எத்தனையோ பெரும் வெற்றிகளைப் பார்த்தபோதும் படுதோல்விகளைச் சந்தித்தபோதும் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டதில்லை அவர். ஆட்சி என்பது தோளில் போடும் துண்டு, கட்சி என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கில் தான் மன உறுதியோடு இருந்ததோடு கழகக் கண்மணிகளாம் தனது உடன்பிறப்புகளுக்கும் அதைக் கடத்தி அவர்களையெல்லாம் கொள்கைக் குன்றுகளாய் வடித்தெடுத்தவர்.

நெருக்கடி நிலையின்போது பத்திரிகை தணிக்கையைக் கண்டித்து அண்ணா சிலை அருகில் எந்த அறிவிப்பும் இல்லாமல் தனியாளாக வந்து போராடியதும், நள்ளிரவு கைதின் போது சிறைவாசலிலேயே போராடியதுமென அவரின் மன உறுதியில் எதிரிகளின் ஆற்றல் அனைத்தும் விறலுக்கு இறைத்த நீர் என்பது வரலாறு!

தி.மு.கழகம் எனும் தனிப்பெரும் இயக்கம், அன்றும் - இன்றும் எதிரிகளை நடுங்க வைத்துக் கொண்டிருப்பதற்பகான அச்சாணி அந்த மன உறுதியே என நினைவுட்டியவாறு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் தமிழினத்தின் தனிப்பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை நெஞ்சில் வைப்போம்; கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் கலைஞரின் பணி முடிக்க சூளுரைப்போம்; சுடர்முகம் தூக்குவோம்; இடர் பல வரினும் எதிர்த்து நிற்போம்; களம் காண்போம்; வெற்றிக் குவிப்போம்!

03/06/2026

#தினம்_ஒரு_குறள் #கலைஞர்103
முத்தமிழறிஞர் கலைஞர் உரை.....

DMK ITWing

02/06/2026

🌻103-ஆவது பிறந்தநாள் 🌻
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.

02/06/2026

Dummy CM விஜய் பேசும் அருவருக்கத்தக்க மொழிகளை நம் வீட்டு குழந்தைகள் கற்றுக்கொள்ள கூடாது.



Instagram link https://www.instagram.com/reel/DZFAP5bTKXO/

02/06/2026

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நின்று பேசும் சாதனைகளை ஐந்தே ஆண்டுகளில் திராவிட நாயகர் செய்திருக்கிறார்.

Script paper பார்த்து வசனம் பேசிட்டு திரியும் Dummy CM விஜய் அவர்களே உங்ககிட்ட வாய் மட்டும்தான் வேலை செய்யுது என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள்.

02/06/2026

சிங்கப்பெண் படை திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் பட்ஜெட் ஒதுக்கீடு என்ன.?

வெறும் பேச்சிலும் விளம்பரத்திலும் அல்ல, திட்டங்கள் முறையான நிதி ஒதுக்கீட்டோடு செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

02/06/2026

தமிழ்நாட்டில் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளைப் பார்க்காமல் திமுகவையே குறை சொல்லி வருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கவனிக்காமல் இருப்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Erode
Erode
638011