15/09/2026
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அமோக வெற்றி - 19 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி!*
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனது வலுவான இருப்பை பதிவு செய்துள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி BSP -19 வார்டு கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 10 க்கு மேற்பட்ட இடங்களில் முன்னணியில் உள்ள முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதால் வெற்றி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
*மாவட்ட வாரியாக வெற்றி விவரம்:*
*அல்வார் மாவட்டம். மாநகராட்சி - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*ஜெய்ப்பூர் மாவட்டம். சாம்பர்லேக் - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*கரௌலி மாவட்டம். நகர பரிசத் - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*பரத்பூர் மாவட்டம். மாநகராட்சி 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*தௌசா மாவட்டம் - மஹ்வா. லவாண் - 3 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி*.
*தோல்பூர் மாவட்டம் - பாடிசைபௌ - 6 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி*.
*பாரான் மாவட்டம் - சப்ரா - 2 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி*,
*டீக் மாவட்டம் - நகர் - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*கைர்தல் மாவட்டம் - பிவாடி 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*.
*தோல்பூர் நகர பரிஷத் - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*
*தோல்பூர் - பசேரி நகராட்சி - 1 வார்டு கவுன்சிலர் வெற்றி*.
*மொத்தம் - 19 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி.*
ராஜஸ்தானில் BSP -யின் இந்த வெற்றி கட்சியின் கட்டமைப்பு அமைப்பு ரீதியான பலத்தையும், அடிமட்ட அளவில் தொண்டர்களின் தீவிர செயல்பாட்டையும் காட்டுகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறு நகர உள்ளாட்சிகளில் BSP வேட்பாளர்களின் வெற்றி, BAHUJAN SAMAJ PARTY யின் செல்வாக்கையும், உள்ளூர் அளவிலான அரசியல் பிடியையும் எடுத்துக்காட்டுகிறது.
பல இடங்களில் இன்னும் முடிவுகள் வர வேண்டியுள்ள நிலையில், பி.எஸ்.பி-யின் வெற்றி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், பகுஜன் சமாஜ் கட்சி அடிமட்ட அளவில் தொடர்ந்து தனது அரசியல் இருப்பை வலுப்படுத்தி வருகிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
*ஜெய் பீம்! ஜெய் பாரத்!* *ஜெய் கான்சிரம்*