SDPI Verkilambi

SDPI Verkilambi 𝗦𝗢𝗖𝗜𝗔𝗟 𝗗𝗘𝗠𝗢𝗖𝗥𝗔𝗧𝗜𝗖 𝗣𝗔𝗥𝗧𝗬 𝗢𝗙 𝗜𝗡𝗗𝗜𝗔 - 𝗩𝗘𝗥𝗞𝗜𝗟𝗔𝗠𝗕𝗜 -
𝗞𝗮𝗻𝘆𝗮𝗸𝘂𝗺𝗮𝗿𝗶 𝗗𝗶𝘀𝘁𝗿𝗶𝗰𝘁,𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂.

14/07/2026

வரலாற்றை வாசிப்பதற்காக பிறக்கவில்லை... வரலாற்றை எழுதுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்!

இது ஒரு கூட்டமல்ல...
இது இளைஞர்களின் புரட்சி! 🔥

இது ஒரு அறிமுகமல்ல...
இது புதிய தலைமுறையின்
அரசியல் பிரகடனம்! 🔥 🔥

"Young Democrats "
THE BEGINNING

19 July 2026
Itz Time To Lead 🔥

14/07/2026
14/07/2026

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை மட்டுமன்றி, மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பொது இடங்களில் எருது, காளை உள்ளிட்ட மாடுகள் மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்கினங்களைப் பலியிடக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் சட்ட ரீதியான நகர்வு மூலம் பெறப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எஸ்டிபிஐ (SDPI) கட்சி மனதார வரவேற்கிறது.

இந்த விவகாரத்தில் தற்போது கிடைத்துள்ளது இடைக்கால உத்தரவு மட்டுமே என்பதால், வழக்கில் முழுமையான வெற்றி பெறவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தடைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு சில முக்கியமான சட்டத்திருத்த நடவடிக்கைகளில் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் இவ்விவகாரத்தில் அரசு எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களையும், மக்களின் பாரம்பரிய மத மற்றும் உணவு உரிமைகளில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளையும் நிரந்தரமாகக் களைய முடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமை மற்றும் மக்களின் பாரம்பரிய உணவு உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு மக்கள் அரசின் முதன்மைக் கடமையாகும். உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு போன்ற நடவடிக்கைகள், மக்களின் நீண்டகால வழிபாட்டு நடைமுறைகளில் தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, தமிழ்நாடு அரசு பின்வரும் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்:

- தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1958 (Tamil Nadu Animals Preservation Act, 1958)

- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் விதிகள், 2023 (Tamil Nadu Urban Local Bodies Act, 1998 and Rules, 2023)

- தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 (Tamil Nadu Public Health Act, 1939)

இச்சட்டங்களில் மதச் சடங்குகள், பண்டிகைகள் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளுக்கான விலங்குப் பலிக்கு முறையான சட்டப்பூர்வ விலக்கை (Exemption) உறுதி செய்யும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும், ஒன்றிய அரசின் 'விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்' (Prevention of Cruelty to Animals Act) விதிகளை மீறாத வகையிலும், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மத வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும். இது இஸ்லாமியர்களின் புனித குர்பானி திருநாள் மற்றும் இந்து உள்ளிட்ட மற்ற சமூக மக்களின் பாரம்பரிய கிராமப்புறக் கோவில் கொடை விழாக்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சமத்துவ நடவடிக்கையாக அமையும்.

எனவே, மக்களின் உணர்வுகளோடும், வழிபாட்டு முறைகளோடும் கலந்த இந்த உணர்வுப்பூர்வமான விவகாரத்தில், தமிழ்நாடு அரசு எதிர்கால நலன் கருதி, தேவையான சட்டத்திருத்தங்களையும், புதிய வழிகாட்டுதல்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களின் மத மற்றும் உணவு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு.

14/07/2026

ECI Must Withdraw Mandatory Parents' SIR Requirement for New Voters

The Social Democratic Party of India strongly condemns the Election Commission's decision to make parents' SIR details mandatory in the online Form 6 for new voter registration. This requirement has no basis in the Constitution or the Representation of the People Act, 1950. It has been introduced without the necessary legal amendments. The right to vote is a constitutional right based on citizenship, age, and ordinary residence. It is not contingent upon the electoral history of one's parents. At a time when the Special Intensive Revision (SIR) exercise has led to widespread deletion of names and serious concerns over the exclusion of eligible voters, this new requirement will further burden first time voters, migrant workers, and marginalized communities.

Against the backdrop of the controversies surrounding SIR, the Citizenship Amendment Act (CAA), and the proposed National Register of Citizens (NRC), this move raises grave concerns about creating new barriers to universal adult franchise. The Election Commission must immediately withdraw this unlawful and discriminatory requirement and uphold its constitutional responsibility to ensure free, fair, and inclusive elections.

M. K. Faizy
National President
Social Democratic Party of India

22/06/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் Chief Minister of Tamil Nadu உயர்திரு ஜோசப் விஜய் TVK Vijay அவர்களுக்கு, SDPI கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். நல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் மக்கள் சேவையைத் தொடர வாழ்த்துகிறேன்!

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

Congratulations TELENGANA.. 💐💐💐
22/06/2026

Congratulations TELENGANA.. 💐💐💐

22/06/2026
22/06/2026
22/06/2026

திருவள்ளூர் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா நச்சு வாயு கசிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு தனியார் ஆலை மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம்! - SDPI கட்சி கடும் கண்டனம்!

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சகரணையில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா நச்சு வாயு கசிவு காரணமாக, அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டுவரப்பட்ட 7 தொழிலாளர்களில் 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உயர்தர சிகிச்சையையும் உரிய நிவாரணத்தையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

​இந்த கோர விபத்திற்கும், அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்பிற்கும் தனியார் நிறுவனத்தின் அப்பட்டமான அலட்சியப் போக்கே முக்கியக் காரணமாகும். தொழிற்சாலைகளில் மிக முக்கியமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விதிகள் எதுவும் இங்கு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தொழிலாளர்களின் உயிருடன் விளையாடிய இந்த தனியார் தொழிற்சாலை மீது அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

​அப்பாவிகளின் உயிர்கள் பறிபோகக் காரணமான இந்த விபத்திற்கு தொழிற்சாலை நிர்வாகம் மட்டுமன்றி, தொழிலாளர் நலன் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் முக்கியக் காரணமாவார்கள். இத்தகைய தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டிய அதிகாரிகள் தங்களின் கடமையில் இருந்து தவறியுள்ளனர். எனவே, இந்த தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் பாய வேண்டும்.

​தமிழக அரசு இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் உடனடியாக இழப்பீடு வழங்கிட வேண்டும். மேலும், இதுபோன்ற விபத்துகள் இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் நிகழாமல் தடுக்க, தமிழகம் முழுவதும் உள்ள பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலும், நச்சு வாயுக்களைப் பயன்படுத்தும் இதர தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் நலத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக அவசர காலப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

22/06/2026

பத்திரிகைச் செய்தி

18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி:

சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும், சமூக அமைதி - சமூகநீதி - �சம வாய்ப்பு - சமத்துவம், எளிய மக்களுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) 18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள்!

எஸ்டிபிஐ கட்சி, அரசியல் ரீதியாகப் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வளர்ந்து வந்திருக்கிறது. இதன் வளர்ச்சிக்கும், ஆக்கரீதியான அரசியல் பங்களிப்புக்கும் பாடுபட்டு வரும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் �திரு. எம்.கே. ஃபைஜி அவர்கள், மாநிலத் தலைவர் திரு. Mohamed Mubarak அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுதலையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த போதிலும், நீண்டகாலம் தோழமையுடன் இருப்பதைப் போன்ற உணர்வுடன் SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு கட்சியின் நிர்வாகிகளும், தோழர்களும் முழு மூச்சுடன் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைத்தனர். பரப்புரைக்காக நான் சென்ற இடங்களில் எல்லாம், எஸ்டிபிஐ கட்சியின் தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ஆதரவையும், நல்லுணர்வையும் வெளிப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

எஸ்டிபிஐ கட்சி எளிய மக்களின் மேம்பாட்டுக்காக என்றென்றும் ஊக்கத்துடன் தொடர்ந்து பாடுபட்டு வரவும், அரசியல்ரீதியாக அதன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, சிறுபான்மை மக்கள் நலன் மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அக்கறையும், ஆதரவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தோழமையுணர்வோடு இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்

Address

VERKILAMBI
Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Verkilambi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share