11/02/2024
DMDK இளைஞர் அணி
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMDK இளைஞர் அணி, Political organisation, Karur.
11/02/2024
24/08/2023
10/08/2023
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ₹1000 தேர்தல் வாக்குறுதியை நிரைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும்
விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வஞ்சிக்கின்ற NLC நிர்வாகத்தையும் கண்டித்தும்,
இன்று (10/08/2023) காலை 10 மணியளவில், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
24/05/2023
12/02/2023
கொடி நாளை முன்னிட்டு ஒட்டுமொத்த தேமுதிக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
தொண்டர்கள் விருப்பத்திற்கிணங்க புரட்சிகலைஞர் விஜயகாந்த் ரசிகர் மன்றம் அமைத்து, அதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, நமது ரசிகர் மன்றம் எல்லா தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில், நற்பணி இயக்கமாக செயல்பட்டு வந்தது. தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க 2000 ஆம் ஆண்டு புரட்சிதீபம் தாங்கிய மூவர்ண கொடியை, ரசிகர் நற்பணி மன்றத்திற்காக பிப்ரவரி 12 ஆம் நாள் அறிமுகபடுத்தப்பட்டது.
இந்த கொடியை தமிழகம் முழுவதும், பட்டி தொட்டி எங்கும் பறக்கவிட்டு இமாலய சாதனை நிகழ்த்தியது ரசிகர் நற்பணி மன்றங்களும், அதன்பிறகு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் என்பதில் பெருமை கொள்கிறேன். கட்சி கொடிக்கு என்று ஒரு நாளை அறிவித்து அதனை கொண்டாடும் ஒரே கட்சி தேமுதிக மட்டும்தான். எனவே இந்த கொடி நாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தேமுதிக உதயமானபோது, நற்பணி மன்ற கொடி, கழக கொடியாக மாற்றப்பட்டது. கழக கொடியில் இடம்பெற்றுள்ள வர்ணங்களுக்கு, கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
சிவப்பு நிறம் சாதி, மதம், இனம், மொழி என்று எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் இரத்தத்தால் ஒன்று பட்டவர்கள், ஒரே இனம் ஒரே குலம் என்பதை வலியுறுத்தும்.
வளமான தமிழகத்தை உருவாக்கி அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை நிரூபித்து, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று வளமான தமிழகத்தை மங்களகரமாக உருவாக்குவதே மஞ்சள் நிறம் ஆகும்.
கருமை நிறம் வறுமை, லஞ்சம், ஊழல் என்ற இருள் தமிழகத்தை சூழ்ந்துள்ளதை குறிக்கும். மூவர்ண கொடியின் மையத்தில் அமைந்துள்ள புரட்சி தீபம் தமிழகத்தில் உள்ள இருளை அகற்றி, மாற்றத்தை உருவாக்கி நல்லதொரு மக்களாட்சியை கொண்டு வந்து, புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை ஒளி மயமாக்குவோம் என்பதை குறிப்பதாகும்.
மேலும் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்து, நீல புரட்சி ஏற்படுத்தி விவசாயத்தையும், தொழில்களையும் மேம்படுத்துவோம் என்பதை குறிக்கிறது.
தமிழக மக்களுக்காக உயர்ந்த எண்ணத்தோடு, இலட்சியத்தோடு உருவாக்கப்பட்டது கழக கொடி என்றும், அந்த இலட்சியத்தை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். அதேபோல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் அனைவரும் கழகத்தின் வெற்றிக்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து, நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற கட்சியின் கொள்கைப்படி இந்த இனிய கொடி நாளை கழகத் தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும்.
லட்சக்கணக்கான உண்மை தொண்டர்கள் தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி, அரும்பாடு பட்டு, அயராது உழைத்து வளர்ந்தது இந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம். அவர்களுக்கு இந்த கொடி நாளில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
31/12/2022
Happy New year 2023
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
13/09/2022
பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவடைந்து 14.09.2022 அன்று 18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட தேமுதிக தொடர்ந்து மக்களுக்காக மக்கள் பணி ஆற்றி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு என்றுமே ஒரு தனி வரலாறு உண்டு. தேமுதிக ஜாதி, மதம், ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு துவங்கப்பட்ட இயக்கமாகும். எந்த கட்சியில் இருந்தும் பிரிந்து வராமல் ஜாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட நமது கட்சி , இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தமிழகம் முழுவதும் கிளைகள் மற்றும் பூத்துகளை அமைத்து வெற்றிநடை போடுகிறது.
லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக.
லட்சகணக்கான தொண்டர்களின் உண்மையான உழைப்பால் உருவான நமது கழகம், முதலில் ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்டு, 2000மாவது ஆண்டு ரசிகர் மன்றத்திற்கு என கொடி அறிமுகப்படுத்தி பின்னாளில் அரசியல் கட்சியாக மாறி மக்களின் ஆதரவோடு தமிழக சட்டமன்ற எதிர்கட்சியாக உயர்ந்தது. இதற்கு உண்மையான தொண்டர்களும், நிர்வாகிகளும் தமிழக மக்களும் தான் காரணம். என் தொண்டர்கள் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை கொண்டுதான் கட்சியை வளர்த்து வருகிறோம். இதற்கு நமக்கு கிடைத்த கழகத்தின் நரம்புகளாகவும், இரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள் தான் காரணம்.
எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், சூழ்ச்சிகள், வந்த போதும் பல சவால்களை சந்தித்து தற்போதும் வீறுநடை போடுகிறது நமது கழகம்.
தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீண்டும் எழுச்சி பெறும். நாம் எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நமது இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். தற்போது நடந்து கொண்டிருக்கும் உட்கட்சி தேர்தலை சீறும் சிறப்புமாக முடித்து தொடர்ந்து நமது கட்சியின் வளர்ச்சிக்காக அனைத்து வியூகங்களை அமைப்போம்.
தேமுதிக 18ஆம் ஆண்டு துவக்க நாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – பகுதி – வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உங்கள் பகுதியிலேயே கழக கொடியை ஏற்றி, இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே’ என்கிற கொள்கையின் அடிப்படையில், ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கழக துவக்க நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் முப்பெரும் விழாக்கள், பொது கூட்டங்களுக்கு பேராதரவு அளித்து நமது கழகம் வீறுநடை போட்டு வெற்றியடைய அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்று உறுதியோடு நாம் அனைவரும் பயணிப்போம்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
639005
