KARUR Paramathi UNION

KARUR Paramathi UNION

Share

“Covering ground-level problems, public requests, and civic concerns across Karur region. Bringing attention to issues that matter to the people.”

This page is dedicated to highlighting basic civic issues, public grievances, and community demands faced by the people in and around Karur District. Our aim is to provide a transparent and responsible platform where citizens can voice concerns related to public infrastructure, sanitation, roads, water supply, electricity, agriculture, transportation, safety, and other essential services.

15/04/2026

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

24/01/2026

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஈசன் தமிழன் #விவசாயம்

21/01/2026

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஈசன் தமிழன் #விவசாயம்

19/01/2026

*திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் மீது காவல்துறை மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து கண்டனக் கடிதம்*

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி அவர்களும், சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் உடனடியாக விடுவிக்க கோரி, சட்டப்பூர்வமான ஜனநாயக உரிமையாகிய அமைதியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், 2026 ஜனவரி 18 ஆம் தேதி காலை 7.00 மணியளவில், காவல்துறை 26 போராட்டக்காரர்களை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தது. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் (Article 19 – சுதந்திரமான கருத்து வெளிப்பாடு, Article 21 – வாழ்வுரிமை) ஆகியவற்றை நேரடியாக மிரபட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்கத் தொடங்கியதால், காவல்துறை CrPC 144 தடை உத்தரவை பிறப்பித்து, பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதித்துள்ளது. இது அமைதியான ஜனநாயக போராட்ட உரிமையை முற்றிலும் பறிக்கும் நடவடிக்கையாகும்.

- CrPC 144 உத்தரவு, பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பு ஆபத்தில் உள்ள சூழ்நிலைகளில் மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு, அமைதியான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற நிலையில், 144 உத்தரவு அதிகார துஷ்பிரயோகம் என கருதப்படுகிறது.

- சட்டவிரோத கைது போராட்டக்காரர்கள் எந்தவித வன்முறையிலும் ஈடுபடாமல் இருந்தபோதும், அவர்களை கைது செய்தது Indian Penal Code (IPC) Section 341 – Wrongful restraint மற்றும் Section 342 – Wrongful confinement ஆகியவற்றின் கீழ் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்யக்கூடிய குற்றமாகும்.

- மனித உரிமை மீறல்: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட ஆண், பெண் விவசாயிகளை கைது செய்தது Universal Declaration of Human Rights (UDHR – Article 20) மற்றும் Indian Human Rights Act, 1993 ஆகியவற்றை மீறுகிறது.

📌 கோரிக்கைகள்

1. கைது செய்யப்பட்ட 26 விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

2. சட்டவிரோதமாக கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

3. CrPC 144 உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

4. விவசாயிகளின் அமைதியான போராட்ட உரிமையை மதித்து, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கரூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக, இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயக அடிப்படைகளை மீறும் காவல்துறை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

14/01/2026

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும்,*

*தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து – உடனடி விடுதலை, பொய் வழக்குகள் வாபஸ் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தக் கோருதல் – தொடர்பாக.*

மிகுந்த மரியாதையுடன் தெரிவித்து கொள்வது என்னவெனில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் திரு. ஈசன் முருகசாமி அவர்களையும், மாநில தலைவர் திரு. சண்முகசுந்தரம் அவர்களையும், காவல் துறை பொய் வழக்குகள் புனைந்து கைது செய்து சிறையில் அடைத்திருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக மரபுகளுக்கும், விவசாயிகள் உரிமைகளுக்கும் முற்றிலும் முரணான செயலாகும்.

இந்த கைது நடவடிக்கைகள், குறிப்பிட்ட கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் அழுத்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக விவசாயிகள் மத்தியில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளை அச்சுறுத்தி, கைது செய்து, மிரட்டி பணிய வைக்க முடியாது என்பது தமிழக அரசு நன்கு அறிந்த உண்மை. இத்தகைய நடவடிக்கைகள் அரசுக்கு சமூக மற்றும் அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதையும் பணிவுடன் சுட்டிக்காட்டுகிறோம்.

கரூர் மாவட்டத்தில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆண்டி செட்டிபாளையம் முதல் கூனம்பட்டி வரை அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர பாதை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களின் உரிமைகளை பாதுகாக்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பல போராட்டங்களை நடத்தி, பல வழக்குகளையும் கைதுகளையும் சந்தித்துள்ளது. அந்தப் போராட்டங்கள் அனைத்தும் அமைதியான, ஜனநாயக ரீதியான போராட்டங்களாகவே நடைபெற்றன.

அதேபோல், தற்பொழுது கறிக்கோழி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவர்களுக்கான நியாயமான விலையையும், பாதுகாப்பையும் கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது திட்டமிட்ட கலகம் அல்ல; வாழ்வாதார உரிமைக்கான போராட்டம் ஆகும்.

இந்திய அரசியலமைப்பின் கட்டுரை 19(1)(a) & 19(1)(b) – கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் அமைதியான முறையில் கூடும் உரிமை,

கட்டுரை 21 – உயிர் மற்றும் வாழ்வாதார உரிமை,

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) – தேவையற்ற, பழிவாங்கும் கைது நடவடிக்கைகளைத் தவிர்க்கும் விதிகள்,

தமிழ்நாடு காவல் சட்டம் – காவல் துறையின் நடுநிலை மற்றும் பொது மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை,

ஆகிய சட்டங்களின் அடிப்படையில், இக்கைது நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை அல்ல என்பதும், நீதிமன்றங்களில் நிலைக்க முடியாதவை என்பதும் தெளிவாகிறது.

மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உரிமைகளுக்காக கருப்புக் கொடி போராட்டங்கள், தொடர் மறியல், கைது, மிரட்டல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு தான் இன்று ஆட்சிப் பொறுப்பை பொதுமக்களின் ஆதரவுடன் பெற்றுள்ளது என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். அக்கால போராட்டங்களே இன்றைய ஜனநாயக ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தன.

*எனவே,*

*தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர், மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து கைது செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுவிக்கவும்,*

*அவர்கள் மீது போடப்பட்ட பொய் மற்றும் பழிவாங்கும் வழக்குகளை வாபஸ் பெறவும்,*

*கறிக்கோழி விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் அரசு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவும்,*

*விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நீடித்த, சட்டப்பூர்வ தீர்வுகளை உடனடியாக வழங்கவும்,*

*என பணிவுடன், ஆனால் உறுதியுடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*அமைதியும், சுமூகமும் நிலவும் சூழ்நிலையை உருவாக்குவது அரசின் கடமை என்றும், விவசாயிகள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காக்க வேண்டிய தருணம் இதுவென்றும் தெரிவித்துக் கொண்டு, தங்களின் உடனடி நேர்மையான நடவடிக்கையை எதிர்நோக்குகிறோம்.*

*நன்றி.*

14/01/2026

*கறிக்கோழி உற்பத்தி விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்து – உடனடி விடுதலை கோருதல்.*

தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகள், உற்பத்தி செலவுகள் உயர்வு, நியாயமான விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, ஜனநாயக ரீதியாக போராடி வந்த *தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் திரு. ஈசன் முருகசாமி அவர்களையும், மாநில தலைவர் திரு. சண்முகசுந்தரம் அவர்களையும் காவல் துறை கைது செய்திருப்பது, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.*

ஒரு குடிமகன் தனது வாழ்வாதார தேவைகளுக்காக, அமைதியான முறையில் போராடுவது அவரவரின் அரசியலமைப்புச் சட்ட உரிமை ஆகும். அந்த கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய தீர்வுகளை வழங்க வேண்டியது அரசின் ஜனநாயக கடமை ஆகும். இதற்கு மாறாக, விவசாயிகளின் குரலை ஒடுக்குவதற்காக கைது மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களையே குலைக்கும் செயலாகும்.

குறிப்பாக, விவசாயிகள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடாமல், அமைதியான முறையில் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், காவல் துறையின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இது விவசாய சமுதாயத்தில் பெரும் அச்சத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே,

*கைது செய்யப்பட்ட அனைத்து விவசாய சங்க நிர்வாகிகளையும் உடனடியாக, நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.*

*விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நேரடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.*

*எதிர்காலத்தில் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கக் கூடிய எந்தவிதமான அடக்குமுறைகளும் கைவிடப்பட வேண்டும்.*

*இவ்வாறு செய்யத் தவறினால், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து, அமைதியான ஆனால் வலுவான ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*

*விவசாயிகளின் நலனையும், ஜனநாயகத்தின் மாண்பையும் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.*

நன்றி.

*இப்படிக்கு*

*தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்*

*கரூர் மாவட்டம்*

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi V.Senthilbalaji Jothimani Sennimalai KARUR Paramathi UNION

12/01/2026

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும்*

*மூலம்*

மாண்புமிகு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP),
தமிழ்நாடு காவல்துறை, சென்னை.

*கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், தென்னிலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திலக் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மிரட்டல், பணம் பறிப்பு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள கோருதல் – தொடர்பாக.*

கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், தென்னிலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைரமடை வாகன சோதனை நிலையத்தில் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் நிகழ்ந்த மிகக் கடுமையான சட்டவிரோத சம்பவத்தை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

திருப்பூர் மாவட்டம், படியூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (ஓய்வு பெற்றவர்) அவர்கள் பரமத்தியில் இருந்து தமது சொந்த ஊரான படியூருக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, வைரமடை வாகன சோதனை நிலையத்தில் தென்னிலை காவல் ஆய்வாளர் திலக் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில், சண்முகம் அவர்களின் வாகனம் சாலை டிவைடரில் மோதி, அருகில் இருந்த மற்றொரு காரின் மீது மோதியது.

இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் பரஸ்பரம் பேசி சமரசமாக தீர்வு செய்து கொண்டனர். இருப்பினும், காவல் ஆய்வாளர் திலக் அவர்கள் சமரசத்தை ஏற்க மறுத்து, “வழக்குப் பதிவு செய்வேன்” என மிரட்டி, சண்முகம் அவர்களையும் அவருடைய வாகன ஓட்டுனரையும் தென்னிலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, சாலை டிவைடர் சேதமடைந்ததாகக் கூறி, அதை சரி செய்வதற்கு ரூ.14,000/- செலவாகும் என கூறி, அந்த தொகையை உடனடியாக செலுத்தினால் மட்டுமே விடுவிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். வேறு வழியின்றி, சண்முகம் அவர்கள் அந்த தொகையை செலுத்தி மனவேதனையுடன் ஊர் திரும்பியுள்ளனர்.

* **IPC பிரிவு 166** (அதிகார துஷ்பிரயோகம்),

* **IPC பிரிவு 384** (மிரட்டி பணம் பறித்தல்),

* **IPC பிரிவு 506** (குற்றமிரட்டல்),

* **ஊழல் தடுப்பு சட்டம் 1988 – பிரிவு 7 மற்றும் 13** (லஞ்சம் கேட்பு மற்றும் தவறான அதிகார பயன்பாடு),

* **Police Standing Orders**-ஐ வெளிப்படையாக மீறிய செயல் ஆகும்.

மேலும், தென்னிலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் கனரக வாகன ஓட்டிகளிடமும் பொதுமக்களிடமும் ரூ.50, ரூ.100 போன்ற சிறு தொகைகளாக தொடர்ந்து சட்டவிரோத வசூல் நடைபெறுவதாகவும், பொய் வழக்குகள் (குறிப்பாக PCR வழக்குகள்) பதிவு செய்வதாக மிரட்டி பணம் பறிப்பதும் தொடர்கதையாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் காவல்துறை இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது, காவல் துறையின் நற்பெயருக்கும், மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் பெரும் களங்கமாக உள்ளது.

*எனவே, மாண்புமிகு அவர்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்வது என்னவெனில்.*

1. *தென்னிலை காவல் ஆய்வாளர் திலக் அவர்கள் மீது உடனடியாக துறை ரீதியான விசாரணை நடத்தி,*

2. *குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை மற்றும் பணியிடை நீக்கம் உட்பட நடவடிக்கை எடுக்கவும்,*

3. *இச்சம்பவம் தொடர்பாக Vigilance & Anti-Corruption துறையின் மூலம் சுயாதீன விசாரணை நடத்தவும்,*

4. *தென்னிலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் சட்டவிரோத வசூல் நடவடிக்கைகளை முற்றிலும் தடுக்கவும்,*

5. *பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய பாதுகாப்பும் நீதி கிடைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் பணிவுடன் கோருகிறோம்.*

*நம்பிக்கையுடன் அரசின் கவனத்திற்கு நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்படுகிறது.*

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi V.Senthilbalaji Jothimani Sennimalai

11/01/2026

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும்*

*கரூர் மாவட்டம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் “மேனகா” ( Bharat Gas )எனும் தனியார் நிறுவனத்தின் சட்டவிரோத செயல்கள் – பொதுமக்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூல், வீட்டு விநியோகத்தை மறுத்தல் மற்றும் விதிமீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை மேற்கொள்ளக் கோருதல் – தொடர்பாக.*

கரூர் மாவட்டம் க.பரமத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக உரிமம் பெற்ற மேனகா என்ற தனியார் நிறுவனம், பொதுமக்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

*குற்றச்சாட்டுகளின் விவரம்*

அரசின் விதிகளின்படி வீட்டு வாசல் விநியோகம் (Door Delivery) கட்டாயமாக இருக்க வேண்டிய நிலையில், இன்று சிலிண்டர் பதிவு செய்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல்,
“அலுவலகத்திற்கு நேரில் வந்து சிலிண்டரை எடுத்துச் செல்ல வேண்டும்” என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது

ஒவ்வொரு சிலிண்டருக்கும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தவிர, பில் தொகைக்கு மேலாக ரூ.50/- சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொதுமக்களுக்கு,
“அலுவலக பணியாளர்கள் அனைவரும் சுத்தம் செய்யும் பணியில் இருப்பதால் விநியோகம் செய்ய இயலாது” என காரணம் கூறி,
பொதுமக்களை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளனர்.
இதேபோன்ற புகார்கள் முன்பும் பலமுறை அளிக்கப்பட்டும்,
பத்திரிக்கை செய்திகளில் வெளியானும்,
இதுவரை எந்தவிதமான துறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

*சட்ட விதிமுறைகள் (Applicable Laws & Violations)*

*மேற்கண்ட செயல்கள் பின்வரும் சட்டங்களை நேரடியாக மீறுகின்றன, Liquefied Petroleum Gas (Regulation of Supply and Distribution) Order, 2000 Clause 7 & 8*

உரிமம் பெற்ற விநியோகஸ்தர், அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது.

நுகர்வோருக்கு வீட்டு வாசல் விநியோகம் வழங்கப்பட வேண்டும்.

Essential Commodities Act, 1955 – Section 7
அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயுவை விதிமீறி விநியோகம் செய்தால்,
கடுமையான தண்டனை மற்றும் உரிமம் ரத்து செய்ய வழிவகை உள்ளது.

Consumer Protection Act, 2019
Section 2(11) – Deficiency in Service Section 2(47) – Unfair Trade Practice சேவை குறைபாடு மற்றும் அநியாய வர்த்தக நடைமுறையாகும்.
Indian Penal Code (IPC)
Section 406 / 420 (தேவையானால்)

நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் குற்றமாகும்.

*நிர்வாக அலட்சியம்*

மேற்கண்ட நிறுவனம் மீது தொடர்ச்சியாக புகார்கள் அளிக்கப்பட்டும்,
இதுவரை எந்தவித விசாரணையோ நடவடிக்கையோ மேற்கொள்ளாத அதிகாரிகளின் அலட்சியமும்
பொதுமக்கள் நலனுக்கு எதிரானதாகும்.

*பொதுமக்கள் சார்பாக எங்களது கோரிக்கைகள்.*

மேனகா சமையல் எரிவாயு நிறுவனத்தின் மீது உடனடி துறை விசாரணை நடத்த வேண்டும்.

சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட ரூ.50/- தொகையை நுகர்வோருக்கு திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்.

விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், உரிமம் ரத்து / அபராதம் / குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

*நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*

எதிர்காலத்தில் இதுபோன்ற அநீதிகள் நடைபெறாதவாறு கண்காணிப்பு அமைப்பு உருவாக்க வேண்டும்.

*ஜனநாயக நாட்டில் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான சமையல் எரிவாயு விநியோகத்தில் நடைபெறும் இந்த அநீதிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கக்கூடியது.*

*எனவே இம்முறை தாமதமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனபொதுமக்கள் சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.*

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi V.Senthilbalaji Jothimani Sennimalai

Want your business to be the top-listed Government Service in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Thennilai
Karur
639206