DMK-Madurantakam

  • Home
  • DMK-Madurantakam

DMK-Madurantakam A page that expresses my love on DMK..

07/10/2026

நிகழ்கால தமிழ்நாடு அமைச்சர்.. 😀😀.

(அதுசரி. இவங்களுக்கு தவெக ல இருக்க ஒரே குவாலிஃபிகேஷன் இதுதானோ..!!!)
DMK ITWing Kanchi Zone DMK Youth Wing DMK ITWing

04/10/2026

DMK ITWing M. K. Stalin Udhayanidhi Stalin

02/10/2026

சேர்க்கை சரி இல்லாதபோது..

இப்படிதான்..

🤣🤣🤣🤣..

கொள்கைவாதி🚫

DMK ITWing DMK ITWing Kanchi Zone

02/10/2026

சிறுத்தைகள்..
மற்ற தலித்துகள்..
அறிய வேண்டிய அரசியல்...

👇👇👇👇👇👇

DMK ITWing Udhayanidhi Stalin Venmani Venmani Mani Vck DMK ITWing Kanchi Zone இரா. கி.கார்த்திக் மதுராந்தகம் விசிக நா. க. அசுரன் விசிக

#தனித்தொகுதி #இடைத்தேர்தல் #விஜய் #

29/09/2026

அதெப்படி திமிங்கலம்.

ஒரே சேரி.

எலாலாரும் மேக் அப் செஞ்சி அவ்வளோ டீசண்ட்.
அப்பறம் லேடி வார்டு உள்ள இவ்வளோ ஜென்ஸ்..

(அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் என்று கூறி).

இப்படி ஒரு ஷூட்டிங்



DMK ITWing DMK Youth Wing DMK ITWing Kanchi Zone M. K. Stalin Udhayanidhi Stalin

மொத ராத்திரிலப்பர் பந்துக்குப் பிறகு ரசித்துப் பார்த்த திரைப்படம். பிடிக்காத திருமணத்தில் இணையும் இருவர், மொத ராத்திரி அ...
23/09/2026

மொத ராத்திரி

லப்பர் பந்துக்குப் பிறகு ரசித்துப் பார்த்த திரைப்படம்.

பிடிக்காத திருமணத்தில் இணையும் இருவர், மொத ராத்திரி அறைக்குள் இருக்கும் போதே, மணப்பெண் காதலனோடு ஓடிப்போக திட்டம் போடுகிறாள். அது தெரிந்து கணவனே அவளை காதலனோடு அனுப்ப உதவி செய்கிறான். ஆனால் , அந்த ஒரே இரவில் நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளில் இந்த இருவரும் மனொமொத்து ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்கிற கவிதையான ஒரு க்ளைமாக்ஸ்.

முதலில் படத்தின் பிளஸ்களைப் பார்த்து விடுவோம். இயக்குநர் ராஜா கருப்பசாமிக்கு நிச்சயமாக பெரிய எதிர்காலம் உண்டு. திரைக்கதை , வசனம் , இயக்கம் மூன்றிலுமே அத்தனை நேர்த்தி. இத்தனை பெரிய கூட்டத்தை ஓர் அறிமுக இயக்குநர் இத்தனை சிறப்பாக கையாள முடிந்திருப்பது ஆச்சரியம்தான் , அதில் பாதி கேமராவிற்கு புதியவர்களாக இருந்தும் நேர்த்தியாக வேலை வாங்கியிருக்கிறார். சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ்கூட கவனம் கொடுத்து , யதார்த்தத்திற்கு நெருக்கமான வகையில் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த திரைக்கதைக்கு அவர் சில லேயர்களை கோர்த்திருந்த விதம், ரொம்ப பிடித்திருந்தது. உதாரணமாக, முதலிரவுக்கான கட்டில் செய்யும் கார்பெண்டர் போர்ஷன் படத்தின் தொடக்கத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை பயணிப்பது, சகலையின் ஃபோட்டோவை வைத்திருக்கும் பக்ஸ் கதாபாத்திரம் சொல்லிக் கொண்டே இருக்கும் நித்திஷ் என்கிற பெயர், கோயில் பூசாரியாக கதைக்கும் சம்மந்தமில்லாமல் வருவது போல வரும் சேத்தன் கதாபாத்திரத்தை சரியான இடத்தில் கதைக்குள் இணைக்கிற லாவகம் இவையெல்லாமும் திரைக்கதை செய்கிறவர்களுக்கு பாடம் எடுக்கிற மாதிரி ஓர் அனுபவத்தைக் கொடுத்தன.

நாயகன் ரிஷிகாந்த், என்ன மாதிரி ஒரு நடிகன். தன்னுடைய முன்னாள் காதலியைப் பற்றி பேசுகிற அந்த ஒற்றைக் காட்சி போதும். அழுத்தமான உணர்வுகளை அநாயசமாக காட்ட இனி ரிஷிகாந்த் முன்னணி இயக்குநர்களின் தேர்வில் நிச்சயம் இடம் பிடிப்பார். ரஜினி மாதிரி நடிக்கிறார் என சில பதிவுகளில் பார்த்தேன்.. ரிஷிகாந்த் ரஜினியை இமிட்டேட் செய்யவில்லை.. மாறாக இயல்பாகவே ரஜினியின் உடல்மொழி ரிஷிகாந்திற்கும் இருக்கிறது. அது அவருக்கு கூடுதல் வசீகரத்தை தோற்றத்திலும் கொடுக்கிறது.

நாயகி, துறுதுறுவென இருக்கிறார்.. கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்கள் இருவர் மட்டுமல்லாமல் நாயகனின் தங்கச்சியாக நடித்திருப்பவர், மச்சானாக வரும் அப்துல், மைக் செட் கட்ட வந்த இளைஞர்கள், இருவீட்டு பக்கமும் சொந்தங்களாக வரும் அத்தனை பெண் கதாபாத்திரங்கள் , பூசாரியாக வரும் சேத்தன் தொடங்கி ஒன்றிரண்டு வசனம் பேசும் கதாபாத்திரங்கள் வரை மனதில் பதிகிற அளவு நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, நிதிஷாக நடித்திருக்கும் இயக்குநர் ராஜா , ஒரு நடிகராகவும் டிஸ்டிங்ஷன் அடித்திருக்கிறார். அவர் உருவாக்கிய அந்த சோப்ளாங்கி கேரக்டரில் .. இதே அளவு நியாயத்தை இன்னொருவர் செய்திருக்க முடியுமா என்கிற அளவிவில் சிறப்பான நடிப்பு.

போலவே, சாதி பார்க்க மாட்டேன் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்டாலும், அந்த அழுக்கு எப்படி உள்ளே ஒட்டிக் கிடக்கிறது என்பதனை ஏ.வெங்கடேஷ் ஏற்றிருந்த காதாபாத்திரன் வழி சொல்லியிருப்பது, நாயகியின் சித்தியின் போலீஸ் கனவு எப்படி நீர்த்துப் போனது என சமையலறையில் பால் காய்ச்சுகிற ஒரு காட்சி வழியாக பெண்ணடிமைத்தனம் எப்படி தொடர்கிறது என்பதனை ஒரு மௌனத்தை இட்டு நிரப்பி நம்ம சமூகத்தில் இருக்கும் அவலங்களை நம் மனசாட்சி உலுக்கும் விதத்தில் பதிவு செய்திருந்ததும் சிறப்பாக இருந்தது. அந்தக் காட்சியில் லாங்க் ஜம்ப்பில் 6.1 மீட்டர் தாண்டணும்னு எய்ம் பண்ணேன்.. ஆனா மொத நாளு தலைக்கு குளிக்கிற மாதிரி ஆகிடுச்சு என்று வந்த வசனத்தை அந்த சித்தி கதாபாத்திரம் யதார்த்தமாக சொல்லி கடந்து போகிற போது, அவர்களின் கனவுகளை சிதைப்பதில் ஆணாதிக்கத்திற்கு நிகராக இயற்கையும் அவர்களுக்கு சதி செய்கிற கோணம் குறித்து யோசிக்க வைத்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் சமூகத்துக்கான ஷார்ப்பான மெசேஜ்களைக் கொண்ட அழகிய காட்சிகள் என்றாலும் இந்தக் கதைக்குள் அவை என்ன பங்களிப்பைச் செய்கின்றன என்றால் அரை மணி நேரத்தில் முடிந்து போன கதையை இழுத்து ஓட்ட ஃபுட்டேஜ் கணக்கு என்பது போல இருப்பது திரைக்கதையின் மைனஸாகப் பார்க்க வாசலைத் திறக்கிறது. ஒரு கதைக்குள் கிளைக்கதைகள் வைப்பது நல்ல விஷயம்தான் எனினும் சொல்லப்படும் கதைக்குள் அவை ஐக்கியமாக வேண்டிய இயல்பில் இருந்தால்தான் ரசிகன் ஒன்றி ரசிப்பான். இல்லாவிட்டால், எத்தனை சுவாரஸ்யமான காட்சியாக இருந்தாலும் , மையக் கதையை விட்டு விலகுகிறபோது நெளிய ஆரம்பித்துவிடுவான்.

போலவேதான்.. இறுதி காட்சி வரை அத்தனை காட்சியுமே நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தாலும், படத்தின் முடிவு இதுதான் என தெரிந்த பின்னும் முக்கால் மணி நேரத்துக்கு நீள்வதும் அயற்சியைத் தருகிறது. அதை சரி செய்திருந்தால் இன்னும் சிறப்பான அனுபவத்தைத் இந்த 'மொத ராத்திரி' கொடுத்திருக்கும்.

குறைகள் இருந்தாலும், அதைத்தாண்டி மிகைகள் படத்தில் ஏராளம். என்னளவில் 'மொத ராத்திரி' தமிழ் சினிமாவின் நம்பிக்கை என்பேன்!..

#பகிர்வு

எதே 10தேதி சர்ஜரி, அதே 10 தேதி Huundai நிறுவனம் சந்திப்பா... எல்லாத்தையும் சந்தேகமாவே பாக்குறது..அக்கா காலைல நாட்டுக்காக...
23/09/2026

எதே 10தேதி சர்ஜரி, அதே 10 தேதி Huundai நிறுவனம் சந்திப்பா...

எல்லாத்தையும் சந்தேகமாவே பாக்குறது..

அக்கா காலைல நாட்டுக்காக உழைத்துவிட்டு. அப்புறம் அட்மிட் ஆயிருப்பாங்க சார்ஜரி நடந்துருக்கும்.

என்ன தவம் செய்ததோ தமிழ்நாடு. இப்டி ஒரு அமைச்சர் கிடைக்க. 10 தேதி உடல் நிலை சரியில்லாமல் போகுது. அன்றய தினமே hyundai நிறுவனதோடு சந்திப்பு. அப்புறம் அதே நாளில் முதல்வரின் லண்டன் பயணம் இங்கே சார்ஜரி நடந்து கொண்டிருக்கும் போதே அங்கே ஒருங்கிணைக்கிறார்.20 நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லி டாக்டர் அறிவுரை சொல்கிறார் ஆனால் நாட்டுமக்களுக்காக 4 நாட்களில் மீண்டும் பணிக்கு வருகிறார்.

அந்த இடத்துல ஒரு சாங்.. என்ன தவம் செய்தனை யசோதா... என்ன தவம் செய்தனை.

படம் 100 நாள் ஹிட்டு.. நன்றி நமக்கம்....



DMK ITWing DMK Chennai DMK Youth Wing DMK Thiruvannamalai DMK திருச்சி மேற்கு Ilavarasi Reena Dmk Vandavasi Uttiramerur Dmk Prasanth Dmk Dmk Epm Sadham Benazir Shanavas Dmk

Address


603313

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK-Madurantakam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share