27/05/2026
SDPI கட்சி மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்!
அன்பும் தியாகமும் இறைநம்பிக்கையும் ஒன்றிணையும் புனித ஹஜ்ஜுப் பெருநாளில்,இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வரலாற்றை நினைவூட்டும் இந்த புனித நாளில், மனிதகுலம் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்புகளை பேணிக் காக்க வேண்டும்.
இன்று இந்தியாவில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுவதும்,மத சடங்குகளில் தலையீடு செய்வதும், வெறுப்பு அரசியலால் சிறுபான்மையின மக்களின் அடிப்படை உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் ஜனநாயகத்திற்கே ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த புனித நாளில்,நீதியும் சகோதரத்துவமும் நிலைபெறும் இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்!
ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்!
___________
SDPI கட்சி
தகவல் தொழில்நுட்ப அணி (IT WING)
மயிலாடுதுறை மாவட்டம்.
12/05/2026
மயிலாடுதுறையில் தொடரும் உணவக தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! SDTU தொழிற்சங்கம் கடும் கண்டனம்!
_இது குறித்து SDTU தொழிற்சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் முஹம்மது பைசல் அவர்கள் கூறியுள்ளதாவது...!
மயிலாடுதுறையில் உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்குள் மட்டும் இரண்டு உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது கடும் கண்டனத்திற்குரியது. உணவு சரியில்லை என்ற பெயரில், சில இளைஞர்கள் சப்பை காரணங்களை முன்வைத்து தொழிலாளர்களை தாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது சட்ட ஒழுங்கை பாதிக்கின்ற செயல் மட்டுமல்ல, உழைப்பை நம்பி வாழும் ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் கொடூரமான செயலாகும்.
உணவக தொழிலாளர்கள் தினமும் கடுமையாக உழைத்து பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களை இவ்வாறு தாக்குவது மனிதநேயத்திற்கு எதிரான செயல் ஆகும். இதனை SDTU தொழிற்சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட தாக்குதல் நடத்திய குண்டர்களை காவல்துறை கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்க வேண்டும். மேலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உணவக ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறையும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத வரை இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் தொடரும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதை மிகுந்த தீவிரத்துடன் கையாள வேண்டும் என்று SDTU தொழிற்சங்கம் சார்பாக வலியுறுத்துகின்றோம்.
_ என்று இவ்வாறாக குறிப்பிட்டுள்ளார்.
வெளியீடு :-
SDTU தொழிற்சங்கம்
தகவல் தொழில்நுட்ப அணி
மயிலாடுதுறை மாவட்டம்.
10/05/2026
SDPI கட்சி மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
தன் பிள்ளையின் வெற்றிக்காக அனைத்தையும் தியாகம் ஓர் ஆன்மா நம் அன்னை! அதே போல் சிரிக்கவும், நாம் உயர வளரவும், நாம் விழும் போது தாங்கி பிடிக்கும் கரம் நம் அன்னையே! அந்த அன்னை வயதாகி விட்டாள் என்ற காரணத்தினால் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் செயல் மிகக் கொடூரமான, இத்தகைய செயலை நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம்! என்ற உறுதிமொழியுடன் இந்த அன்னையர் தினத்தை போற்றுவோம்!
அன்னையர் தின வாழ்த்துக்களுடன்..!
SDPI கட்சி மயிலாடுதுறை மாவட்டம்.
#மே10_அன்னையர்தினம்
#அம்மா
்சி
#மயிலாடுதுறை_மாவட்டம்.
09/05/2026
மயிலாடுதுறை ஆசாத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹிசாரா அவர்களுக்கு SDPI கட்சி கல்வியாளர் அணியின் வாழ்த்துக்கள்!
இது குறித்து கல்வியாளர் அணி மாவட்டத் தலைவர் பஷீர் முஹம்மது அவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்..!
மயிலாடுதுறை மாவட்ட அளவில் நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த ஆசாத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி
H. ஹிசாரா அவர்களுக்கு, SDPI கட்சி மயிலாடுதுறை மாவட்டம் கல்வியாளர் அணி சார்பாக,
எங்கள் இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தங்களின் இந்த மகத்தான வெற்றி,
மாணவர் சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையட்டும்.
மேலும் உயர்ந்த கல்வி இலக்குகளை அடைந்து,சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்!
வெளியீடு :-
SDPI கட்சி – கல்வியாளர் அணி
தகவல் தொழில் நுட்ப அணி,
மயிலாடுதுறை மாவட்டம்.
04/05/2026
சீர்காழி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் இரா. செந்தில் செல்வன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
04/05/2026
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் நிவேதா M.முருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
04/05/2026
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் M.Y. ஜமால் முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
04/05/2026
்சி_வர்த்தகர்_அணி மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக
#மே_5_வணிகர்_தின_வாழ்த்துக்கள்!
இது குறித்து SDPI கட்சி வர்த்தகர் அணியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் புருஹானுதீன் அவர்கள் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்..!
இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நிற்கும் அனைத்து வணிகர்களுக்கும் மனமார்ந்த வணிகர் தின நல்வாழ்த்துக்கள்! குறிப்பாக,
தினசரி வாழ்வாதாரத்திற்காக போராடும் சிறு & குறு வியாபாரிகள் வாடகை உயர்வு அதிகரிக்கும் வரி மற்றும் கடன் சுமையினாலும், அவர்களின் நிதி பற்றாக்குறை, ஆன்லைன் வணிகத்தின் கடும் போட்டி இவற்றால் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனுடன், பெரும் முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு&குறு வியாபாரங்களின் வாழ்வாதாரத்தை மெதுவாக பறித்து, சந்தையை முழுமையாக கைப்பற்றும் நிலை உருவாகி வருகிறது. சிறு வியாபாரம் வளர்ந்தால் தான் சமூகமும், உள்ளூர் பொருளாதாரமும் வளரும்! அதனால், சிறு வணிகர்களை பாதுகாப்பதும், அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதும் நமது பொறுப்பு! ஆகவே வணிகத்தை வளமாக்கி, வணிகர்களை பலமாக்குவோம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
#உழைப்பே_உயர்வு!
#வணிகர்களே_வளர்ச்சி!
வாழ்த்துக்களுடன்...!
ப.புருஹானுதீன் B.com
மாவட்டத் தலைவர்,
வர்த்தகர் அணி, SDPI கட்சி,
மயிலாடுதுறை மாவட்டம்.
01/05/2026
மே1 உழைப்பாளர் தினமான இன்று (01.05.26) மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கிளை சார்பாக கடைவீதியில் காலை 10 மணி அளவில் நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக SDTU தொழிற்சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் முஹம்மது பைசல் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர் ஹாஜாமைதீன், தேரிழந்தூர்
கிளைச் செயலாளர் தாஜ்தீன்,அர்ஷத் அஹமது, முஹ்சீன்,பாயிஸ், மற்றும் கட்சி செயல்வீரர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஜமாஅத்தார்கள் ஆட்டோ சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள், மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.இதில் சுமார் 500_க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
வெளியீடு :-
SDPI கட்சி
தகவல் தொழில்நுட்ப அணி (IT WING)
மயிலாடுதுறை மாவட்டம்
30/04/2026
#மே_1
உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ்சி மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக #மே_தின_நல்வாழ்த்துக்கள்