MPK Pudukottai

Website

MPK Pudukottai District Page of pudukottai MPK - Mukkulathor Pulipadai Katchi

தஞ்சை மண்ணுக்கே உரிய அந்தப் பசுமைச் செழிப்பின் நடுவே அமைந்திருந்தது குருவிக்கரம்பை என்னும் சிற்றூர். வயல்வெளிகளும், தென்...
28/09/2026

தஞ்சை மண்ணுக்கே உரிய அந்தப் பசுமைச் செழிப்பின் நடுவே அமைந்திருந்தது குருவிக்கரம்பை என்னும் சிற்றூர். வயல்வெளிகளும், தென்னைத் தோப்புகளும், வைக்கோல் போர்களும், மண்ணின் மணமும் நிறைந்த அந்தக் கிராமத்தில், ஒரு சிறிய சாலையோர தேநீர்க்கடை இருந்தது.

அது வெறும் தேநீர்க் கடையன்று.

அந்தக் காலத்து கிராம மக்களின் கூடுகை மையம்.

அரசியல் பேசும் இடம்.

ஊர்ச் செய்திகள் பரிமாறும் இடம்.

அன்பைப் பரிமாறும் இடம்.

அதன் உரிமையாளர் சேது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் தாஞ்சூர்- அரிமளம் பகுதியிலிருந்து வந்து, குருவிக்கரம்பையில் உணவுவிடுதி நடத்தி வந்தவர். பலவகை உணவுகளையும், பலகாரங்களையும் சுவையாகச் செய்வதில் அவருக்கென்று தனிப்பெயர் இருந்தது. ஆகையால், அவரது கடையில் கிடைத்த தேநீருக்கும் பலகாரங்களுக்கும் தனிச்சுவை இருந்தது.

ஆனால், அந்தக் கடையின் இன்னொரு தனிச்சிறப்பு அதன் சுவர்களில்தான் இருந்தது.

அங்கே அறிஞர் அண்ணாவின் படங்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்களும் நிறைந்திருந்தன. திராவிடக் கொள்கையில் ஆழ்ந்த பற்றுடையவர் சேது. அவருடைய தாயார் செல்லம்மாள், அவருடைய மனைவி மங்கை, அவருடைய தம்பி வெள்ளைச்சாமி—அனைவரும் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, சேது அரசியல் பணிகளில் ஈடுபடுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.

சைக்கிளில் கட்சிக் கொடியைக் கட்டிக்கொண்டு சேது வெளியே சென்ற காட்சிகள் அக்காலக் குருவிக்கரம்பையின் இயல்பான காட்சிகளுள் ஒன்றாக இருந்தன.

அவர் எளியவர்.

வெள்ளந்தியானவர்.

கிராமத்து மண்ணின் மணம் மாறாத பேச்சு அவருடையது.

“வாங்க தம்பி!” என்று அழைக்கும் அந்தக் குரலில் அன்பும், அப்பாவித்தனமும் கலந்திருக்கும்.

அந்த உணவுவிடுதிக்குச் சிறுவனாக நான் சென்ற காலம் இன்னும் என் நினைவில் அழியாமல் நிற்கிறது.

“அண்ணே… டீ, பலகாரம் கொடுங்கள்!”

“வாங்க தம்பி!”

என்று கூறியவாறே, கேட்டதை அன்போடு பரிமாறுவார் சேது.

அந்தக் கடையின் ஒரு மூலையில் ஒரு சிறுவன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பான்.

அவன்—கருணாஸ்.

அப்போது அவன் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறான் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு சாதாரண சாலையோர டீக்கடையில் வளர்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுவன், ஒருநாள் தமிழ்த் திரையுலகின் வெளிச்சத்தில் நிற்பான் என்றும், ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றுவான் என்றும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக உயர்வான் என்றும், அக்காலத்தில் யார் எண்ணியிருக்க முடியும்?

⸻

1971 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில் நான் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன்.

அந்தக் காலத்தில் சென்னை என்பது இன்றையபோல் எளிதில் சென்றுவரக்கூடிய நகரமன்று. தஞ்சை, திருச்சி, காரைக்குடி போன்ற அருகிலுள்ள நகரங்களில் கல்லூரிப் படிப்பை முடித்துவிடுவதே பலருக்கும் இயல்பாக இருந்தது.

சென்னைக்குச் சென்று படிப்பது என்பது அக்காலத்தில் கிராமத்து மக்களின் பார்வையில் ஒரு பெரிய சாதனை.

விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம், சேது அவர்களின் டீக்கடைக்குச் சென்று தேநீரும் பலகாரமும் உண்ணாமல் நான் சென்னைக்குத் திரும்பியதில்லை.

ஒருநாள், சென்னையிலிருந்து வந்த என்னைக் கண்ட சேது அவர்களின் கண்களில் ஒரு வியப்பு.

“தம்பி! சென்னையிலா படிக்கிறீங்க?”

“ஆமாம் அண்ணே.”

சிறிது நேரம் என்னைப் பார்த்துவிட்டு, அடுத்த கேள்வியைக் கேட்டார்.

“அங்கே எம்.ஜி.ஆர்., சிவாஜி எல்லாம் ஈஸியா பார்ப்பீங்களா?”

நான் சிரித்தேன்.

அவருடைய அடுத்த கேள்வி இன்னும் அப்பாவித்தனமானது.

“சினிமா எடுக்கிறதையெல்லாம் நேர்ல பார்ப்பீங்களா?”

அந்தக் கேள்வி இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது.

அவருடைய மனக்கண்ணில் சென்னை என்பது வேறொரு உலகம்.

திரைப்பட நடிகர்கள் என்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர்.

அவர்கள் எட்டிப் பார்க்க முடியாத இந்திரலோகத்தில் வாழ்பவர்கள்!

அந்த இந்திரலோகத்தைப் பார்க்கச் செல்லும் வாய்ப்பு தமது மகனுக்கும் ஒருநாள் கிடைக்கும் என்று அப்போது அந்தத் தந்தை கனவு கண்டாரோ இல்லையோ—எனக்குத் தெரியாது.

ஆனால், காலம் அவருக்காக ஒரு பதிலை வைத்திருந்தது.

⸻

காலம் நகர்ந்தது.

குருவிக்கரம்பையின் அந்தச் சிறுவன் வளர்ந்தான்.

அவனுக்குள் இசையின் மீது ஒரு தனித்த ஈர்ப்பு இருந்தது.

இசையைக் கற்றான்.

மேடைகளில் பாடத் தொடங்கினான்.

மேடை அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை; மாறாக, அது அவனுடைய திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மாறியது.

பாடகராகத் தொடங்கிய பயணம், அவனைத் திரையுலகின் வாசலுக்கு அழைத்துச் சென்றது.

அங்கேயும் அவன் நின்றுவிடவில்லை.

நடிப்பைக் கற்றுக்கொண்டான்.

வாய்ப்புகளைத் தேடினான்.

கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டான்.

சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தன் திறமையை வெளிப்படுத்தினான்.

மெல்ல மெல்ல அவனுடைய பெயர் திரையுலகில் ஒலிக்கத் தொடங்கியது.

குருவிக்கரம்பையின் அந்தச் சிறுவன்—

கருணாஸ்!

⸻

வாழ்க்கை அவனை இன்னும் உயரத்திற்கு அழைத்துச் சென்றது.

திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றார்.

அரசியல் களத்திலும் கால்பதித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, ஒருநாள் தொலைக்காட்சித் திரையில் நான் கண்ட ஒரு காட்சி என்னை பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விழா.

மேடையில் பல திரையுலகப் பிரபலங்கள்.

அவர்களுக்கிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்—

கருணாஸ்.

அவர் சாதாரணமாக நின்றிருக்கவில்லை.

அந்தப் பெரும் திரையுலக அமைப்பின் துணைத் தலைவராக நின்று கொண்டிருந்தார்.

அந்தக் காட்சியைப் பார்த்தபோது, என் மனக்கண் திடீரென 1975-ஆம் ஆண்டுக்குத் திரும்பியது.

குருவிக்கரம்பை.

சேதுவின் சிறிய தேநீர்க் கடை.

தேநீரின் மணம்.

பலகாரங்களின் சுவை.

சுவரில் அண்ணாவும் எம்.ஜி.ஆரும்.

கடைக்குள் ஓடிக்கொண்டிருந்த சிறுவன் கருணாஸ்.

என்னைப் பார்த்து வெகுளித்தனமாகக் கேட்ட சேது:

“தம்பி… சென்னையிலா படிக்கிறீங்க?”

அதன்பின்—

“அங்கே எம்.ஜி.ஆர்., சிவாஜி எல்லாம் ஈஸியா பார்ப்பீங்களா?”

என்று கேட்ட அந்த அப்பாவித் தந்தையின் முகம் என் நினைவில் தோன்றியது.

அப்போது அவர் நினைத்த சென்னை—

அவரால் எட்ட முடியாத இந்திரலோகம்.

ஆனால், அவர் மகன் அந்த இந்திரலோகத்தின் வாசலில் நின்றுவிடவில்லை.

அதன் உள்ளே சென்றார்.

அங்கே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கினார்.

இறுதியில், அந்த உலகின் முக்கியமான அமைப்பொன்றின் துணைத் தலைவராகவே உயர்ந்தார்.

⸻

இது வெறும் ஒரு நடிகரின் வெற்றிக்கதை அன்று.

இது ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவனின் விடாமுயற்சிக் கதை.

அவன் செல்வச் செழிப்பில் வளரவில்லை.

அவனது தந்தை நடத்திய சாலையோர தேநீர்க் கடையில் வளர்ந்தான்.

அவனது பள்ளிப் படிப்பு அருகிலிருந்த அரசுப் பள்ளியில்

அவனது குழந்தைப் பருவம் தேநீரின் மணமும், பலகாரங்களின் சுவையும், கிராமத்தின் மண்வாசனையும் நிறைந்தது.

ஆனால், வறுமை அவனுடைய பாதையில் தடையாக நின்றது; ஆனால், அது அவனுடைய கனவுகளுக்குத் தடை விதிக்கவில்லை.

பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், குடும்பத்தின் வறுமையைத் தணிக்கத் தன்னால் இயன்ற வழியில் உழைக்கத் தொடங்கினான். அருகிலிருந்த திரையரங்கில் இரவுக் காட்சிகள் நடைபெறும் நேரங்களில், கையில் முறுக்குக் கூடையுடன் அங்கும் இங்கும் சென்று முறுக்கு விற்றான். அந்தச் சிறு வருமானத்தில் தன் குடும்பத்திற்கும் தன்னால் இயன்ற உதவியைச் செய்தான்.

அன்று அவன் கையில் இருந்தது முறுக்குக் கூடை; உள்ளத்தில் இருந்ததோ முன்னேற வேண்டும் என்ற முயற்சிகள் நிறைந்த உறுதி!

திரையரங்கின் வாசலில் முறுக்கு விற்ற அந்தச் சிறுவனுக்குத் தெரியாது—ஒருநாள் அதே திரையுலகமே அவனைத் தன் மேடைக்கு அழைத்து, ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நிறுத்தப்போகிறது என்று!

வறுமையை வெல்ல அவன் அன்று விற்றது முறுக்கு; வாழ்க்கையில் உயர்வதற்காக அவன் செய்தது விடாமுயற்சி.

அந்த விடாமுயற்சிக்குத் துணை நின்றது வெளியிலகம் சென்று சாதிக்க வேண்டும் என்கிற முனைப்பு.

அந்த முனைப்பு அவன் பாதையில் குறுக்கிட்ட அனைத்துத் தடைகளையும் தகர்த்தெரியச் செய்தது.

⸻

நம்முடைய கிராமங்களில் இன்னும் பல இளைஞர்கள் இருக்கிறார்கள்.

பெரிய வைக்கோல் போர்களும், விரிந்த தென்னைத் தோப்புகளும், பரந்து கிடக்கும் தேங்காய்ப் பட்டரைகளும், சொந்த நிலமும், சொந்த வீடும் இருந்தாலே வாழ்க்கை நிறைவு பெற்றுவிட்டது என்று எண்ணுபவர்கள்.

தமக்குக் கிடைத்த வசதிகளையே உலகம் ( Comfort-Zone Captive) என்று எண்ணி, அந்த வசதிகளின் எல்லைக்குள் சிக்கிக்கொண்டு வாழ்பவர்களும் உண்டு.

அவர்களுக்கு கருணாஸின் வாழ்க்கை ஒரு கிரியா ஊக்கி ( Catalyst).

“நீ பிறந்த இடம் உன் உயரத்தை நிர்ணயிப்பதில்லை; நீ செல்லத் தீர்மானிக்கும் பாதையே உன் உயரத்தை நிர்ணயிக்கிறது.”

குருவிக்கரம்பையின் ஒரு சிறிய சாலையோர டீக்கடையில் வளர்ந்த சிறுவன், தன் திறமையையும் உழைப்பையும் நம்பி, பாடகரானான்.

பின்னர் நடிகரானான்.

திரையுலகில் தனக்கென இடம் பெற்றான்.

அரசியலிலும் கால்பதித்தான்.

இறுதியில், தந்தை ஒருகாலத்தில் தொலைதூர இந்திரலோகம் என்று எண்ணியிருந்த திரையுலகின் முக்கிய அமைப்பான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக உயர்ந்தான்.

இதற்கு ஒரே காரணம்—

விடாமுயற்சி.

⸻

மன்னனின் மகன் மன்னனாவதில் வியப்பில்லை.

ஆனால், ஒரு சாமான்யனின் மகன் தன் உழைப்பால் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது.

ஒரு தலைமுறையின் கனவை அடுத்த தலைமுறை நனவாக்குவதுதான் வாழ்க்கையின் அழகு.

சேது அவர்களின் தேநீர்க் கடையில் தொடங்கிய அந்தச் சிறுவனின் பயணம், இன்று ஒரு பெரிய மேடையில் நிற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

அந்த மேடையில் கருணாஸ் நிற்கும்போது, அவருக்குப் பின்னால் ஒரு கிராமம் நிற்கிறது.

ஒரு எளிய தந்தையின் கனவு நிற்கிறது.

ஒரு குடும்பத்தின் உழைப்பு நிற்கிறது.

ஒரு சிறுவனின் கனவு நிற்கிறது.

அவற்றையெல்லாம் விட—

“முயன்றால் முன்னேறலாம்; எதிர்நீச்சல் போட்டால் வாழ்வில் ஏற்றம் காணலாம்”

என்ற வாழ்க்கையின் மாறாத உண்மை நிற்கிறது.

குருவிக்கரம்பையின் மண்ணிலிருந்து எழுந்த அந்தச் சிறுவன், இன்று வெள்ளித்திரையின் வெளிச்சத்தில் நிற்கிறான்.

அதனால் அவன் கதை ஒரு நடிகரின் கதை மட்டுமல்ல.

ஒரு சாதாரண மனிதனும் அசாதாரண உயரத்தை அடைய முடியும் என்பதற்கான வாழும் சான்று.

—————————

International Film Festival Selections.✨  is proud to be an Official Selection at the Kaia International Film Festival 2...
21/08/2026

International Film Festival Selections.✨

is proud to be an Official Selection at the Kaia International Film Festival 2026, Istanbul, Turkey. 🇹🇷

One powerful story.
Taking Tamil cinema to the world.

In Theatres | September 2026 🎬

A film by
Produced by
Starring
An Musical

15/07/2026

WATCH | ஒப்பந்ததாரரிடம் ரூ 1.30 லட்சம் லஞ்சம்.. ஆதாரத்துடன் சிக்கிய மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக இணைச் செயலாளருமான வீரா

சாலை அமைக்கும் பணிகளுக்கான தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றுள்ளதாகத் தகவல்

13/07/2026

அரசு போக்குவரத்து பணிமனையை ஆய்வு செய்த தவெக நகரச் செயலாளர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை ஆய்வு செய்த மேட்டுப்பாளையம் தவெக நகரச் செயலாளர் காஜா வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுள்ளார்

ஆணவ படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனு ஆணவ படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத...
06/07/2026

ஆணவ படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனு

ஆணவ படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவனதலைவர் சேது கருணாஸ் ex MLA அவர்கள் இன்று அந்த ஆணையத்தின் இயக்குனர் K N பாஷா அவர்களிடம் எதிர்ப்பு பதிவு செய்து மனுவாக அளித்தார் இந்த நிகழ்வில் மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள் தேவர் உடனிருந்தார்

Chief Minister of Tamil Nadu

கட்டாகுஸ்தி டீம்முடன் சென்னை கசினோ திரையரங்கில்
04/07/2026

கட்டாகுஸ்தி டீம்முடன் சென்னை கசினோ திரையரங்கில்

01/07/2026

அண்ணன் சேது.கருணாஸ் அவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் என்ன விலை

01/07/2026

TVK நிர்வாகிகள் போலீசார் சினிமா பாணியில் நடவடிக்கை

போதை பொருட்கள் விற்ற தவெக நிர்வாகிகள்

30/06/2026
இன்று மரியாதை நிமித்தமாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் மதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் M. K. Stalin அவர்களை சந்தித்தார் ...
22/06/2026

இன்று மரியாதை நிமித்தமாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் மதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் M. K. Stalin அவர்களை சந்தித்தார்
வீரத்தமிழர் சேது.கருணாஸ் தேவர் அவர்கள்
🖤❤️+💛❤️💛

Address

Pudukkottai

Alerts

Be the first to know and let us send you an email when MPK Pudukottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share