Mayor Sangeetha Inbam

Website

Mayor Sangeetha Inbam செய்வதைச் சொல்வோம்,சொல்வதை செய்வோம்
Mayor Sivakasi City Corporation

நேற்று (25/09/2026)தாராபுரம் தொகுதி அலங்கியம் ஊராட்சியில் திருமிகு S.சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக, அலங்கியம் ஊராட்சியில் உ...
26/09/2026

நேற்று (25/09/2026)
தாராபுரம் தொகுதி அலங்கியம் ஊராட்சியில் திருமிகு S.சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக, அலங்கியம் ஊராட்சியில் உள்ள பள்ளிவாசலில் வாக்கு சேகரித்தோம் மற்றும் இல்லம்தோறும் நேரில் சந்தித்து வெற்றிக்காக வாக்கு சேகரித்தோம்.

கழக முதன்மைச் செயலாளர். அண்ணன் கே.என்.நேரு, விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் தங்கம் தென்னரசு விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகத் தோழர்களுடன் இணைந்து மக்களைச் சந்தித்த தருணம் நெகிழ்ச்சியானது. எளிய மக்களின் முகங்களில் ஒளிரும் நம்பிக்கையும் மாறாத ஆதரவும் உதயசூரியன் சின்னத்தின் பெருவெற்றிக்கு நற்சான்று!

16/08/2026

வாக்குறுதிகள் எங்கே? – தீயணைப்பு நிலையம் எங்கே?

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிவகாசி பேருந்து நிலையத்தில், விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோம்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தொழில்துறை அமைச்சருமான திருமிகு கீர்த்தனா அவர்கள் மக்களுக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? மக்களுக்கு என்ன புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன? என்ற கேள்வியை எழுப்பி, உண்மை நிலையை மக்களிடம் எடுத்துரைத்தார்

மக்களின் அடிப்படை தேவைகளுக்கும், சிவகாசியின் வளர்ச்சிக்கும் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, சமூக வலைதளங்களில் Reels வெளியிடுவதும், பதிவுகளைப் பகிர்வதுமே ஆட்சியின் சாதனையாக இருக்க முடியாது.

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில், கழகத் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

ஆனால், தற்போதைய ஆட்சியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி புதிதாக அறிவிப்பதைத் தவிர, மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய திட்டங்கள் எங்கே? என்ற கேள்வி இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வாக்குறுதிகள் வெறும் Reels-ல் அல்ல… மக்களின் வாழ்க்கையில் செயல்பாடுகளாக மாற வேண்டும்!

🇮🇳 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா! 🇮🇳இந்தியத் திருநாட்டின் 80-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிவகாசி மாநகராட்சிய...
15/08/2026

🇮🇳 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா! 🇮🇳

இந்தியத் திருநாட்டின் 80-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றினேன்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரே சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமையைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

மாநில உரிமை, சமூகநீதி, சுயமரியாதை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் கலைஞரின் கொள்கை வழியில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, மக்களின் நலனுக்காக தொடர்ந்து பயணிப்போம்.

இவ்விழாவில் துணை மேயர், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், ஏராளமான பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர்.

🇮🇳 சுதந்திரத்தின் மாண்பை போற்றுவோம்!
ஜனநாயகத்தின் பெருமையை காப்போம்!
சமூகநீதியின் பாதையில் பயணிப்போம்!

வாழ்க இந்தியா!
வெல்க தமிழ்நாடு!
வாழ்க முத்தமிழறிஞர் கலைஞர் புகழ்! ❤️🖤

04/08/2026

விருதுநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தெனாட்டு சிங்கம் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களின் அறிவுறுத்தலின்படி, எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டதைக் வன்மையாகக் கண்டித்து, சிவகாசி பேருந்து நிலையத்தில் திமுக கழக தோழர்களுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்.

இன்று (19/04/2026)மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகாசி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. AMSG. அசோகன் அவ...
19/04/2026

இன்று (19/04/2026)

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகாசி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. AMSG. அசோகன் அவர்களுக்காக, இன்று எனது 34வது வார்டில் தீவிரமாக வாக்குகள் சேகரித்தோம்.

இந்த மகத்தான பணியில் என்னுடன் பகுதி செயலாளர் காளிராஜன், வட்ட செயலாளர் பாண்டி மற்றும் பல கழக உடன்பிறப்புகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மக்களின் நம்பிக்கையே எங்கள் பலம் – வெற்றி நிச்சயம்! ✋

#சிவகாசி

   #ஸ்டாலின்_தொடரட்டும்  #தமிழ்நாடு_வெல்லட்டும்
01/04/2026



#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

  #ஸ்டாலின்_தொடரட்டும்  #தமிழ்நாடு_வெல்லட்டும்
30/03/2026


#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

Address

Sivakasi

Alerts

Be the first to know and let us send you an email when Mayor Sangeetha Inbam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share