Nalini Shantha Kumari

Nalini Shantha Kumari வார்த்தைகளில் கவிதை, செயல்களில் நீதி – ஒரு தமிழ்பெண்ணின் பயணம்

A.D.W. நளினி சந்தகுமாரி,
பி.காம்., பி.எட்., எம்.ஏ., எல்.எல்.பி. (Hons.)

2026ல் அடுத்தடுத்து மறைந்த 5 திரையுலக ஜாம்பவான்கள்..
17/10/2026

2026ல் அடுத்தடுத்து மறைந்த 5 திரையுலக ஜாம்பவான்கள்..

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவு இசை உலகில் மாபெரும் இழப்பு. எத்தனையோ பாடல்கள்.. இசையால் மக்கள் மனதில் என்றும் நிலை...
17/10/2026

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவு இசை உலகில் மாபெரும் இழப்பு.

எத்தனையோ பாடல்கள்..
இசையால் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்!

16/10/2026

*♨️செட்-டாப் பாக்ஸ், டிஷ் இல்லாமல் இனி டிவி பார்க்கலாம்.*

செட்-டாப் பாக்ஸ், டிஷ் ஆண்டெனா, கேபிள் ஒயர்கள் இல்லாமல், இணையம் மூலம் 500+ லைவ் டிவி சேனல்களைப் பார்க்கும் வகையில் புதிய TATA PLAY SMART செயலி அறிமுகம்.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் போன்கள், லேப்டாப்களில் இன்டர்நெட் இணைப்பு மூலம் இதைப் பயன்படுத்தலாம்; இதன் மாதாந்திர கட்டணம் ரூ.199-ல் தொடங்குகிறது.

16/10/2026
100கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டை, 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப்படை, மோப்ப நாய் ஒருபுறம், அக்கம் பக்கம் என விச...
15/10/2026

100கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டை, 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப்படை, மோப்ப நாய் ஒருபுறம், அக்கம் பக்கம் என விசாரணை ஒரு புறம், சோசியல் மீடியாவி-இல் பலரும் புகைப்படம், வீடியோ என பகிர்ந்தும் ஒரு சின்ன Clue (தகவல்)கூட கிடைக்கவில்லை என்பது இதில் பெரும் சோகம்.
டிரோன் உதவியுடன் விவசாயக் கிணறுகள், குட்டைகள், மலைக்குகைகளில் தேடுதல். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியும் ஒரு பலனும் கிடைக்கவில்லை.

இன்றோடு சரியாக நான்காவது நாள்... குழந்தை காணாமல்போய் ஒரு சின்ன தகவல் கூட கிடைக்காமல் தவிக்கும் காவல்துறை.

குழந்தைக்கு என்ன ஆனது என்று தவிக்கும் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள்.

பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி… மறுநாள் காலையில் வீட்டில் இல்லை! செஞ்சி பகுதியில் பரபரப்பு!

வீட்டில் சந்தோஷமாகப் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, பெற்றோருடன் தூங்கிய 7 வயது சிறுமி காலையில் காணாமல் போனது செஞ்சி அருகே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 7வது பிறந்தநாளை முன்னிட்டு, முந்தைய நாள் இரவு வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்பகுதி குழந்தைகளுக்கும் கேக் வழங்கியுள்ளனர்.

ஆனால், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுற்றுப்புறங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்ட எஸ்.பி. மதிவாணன் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகாலை நேரத்தில் சிறுமி அழும் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவல் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைத்ததாகச் செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.

ஒரு குடும்பம் தங்கள் குழந்தையைப் பத்திரமாக மீண்டும் பார்க்கக் காத்திருக்கிறது. சிறுமி விரைவில் பாதுகாப்பாகக் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இறைவன் இக்குழந்தையை பத்திரமாக மீட்டு தரவேண்டும்... அனைவரும் பிரார்த்தனை செய்வோம்🤲

முடிந்ததை விட அதிகமாக பகிருங்கள்...!
ஒரு சின்ன தகவல் கூட ஒரு பெரும் உதவியாக இருக்கும்.

News Update || முதல்வர் விஜய் கடிதம் மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களை மீட்கக்கோாி மத...
15/10/2026

News Update || முதல்வர் விஜய் கடிதம்

மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களை மீட்கக்கோாி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வா் விஜய் கடிதம்

தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த 25 மீனவா்களையும், அவா்களின் 3 விசைப்படகுகளையும் மீட்கக்கோரி கடிதம்

நீதி தேவதை கண்ணைக் கட்டிக்கொண்டு,கையில் தராசு வைத்திருக்கிறாள். தராசில் யார் இருக்கிறார்கள் என்பதை நீதி தேவதை பார்ப்பதில...
15/10/2026

நீதி தேவதை கண்ணைக் கட்டிக்கொண்டு,கையில் தராசு வைத்திருக்கிறாள்.
தராசில் யார் இருக்கிறார்கள் என்பதை நீதி தேவதை பார்ப்பதில்லை என்பது அர்த்தமாம்.

கண்ணைக் கட்டிக் கொண்டிருந்தால், தராசு சமநிலையாக இருக்கிறதா என்பது அவளுக்கு எப்படி தெரியும்?

ஏதோ பெரிய  #தீவிரவாதிய புடிச்ச மாதிரி  #போட்டோக்கு போஸ் குடுக்குறாங்க....!  #பாவம் ₹1½ லட்சம் ரூபாய் அபராதம் வேற ... #கன...
14/10/2026

ஏதோ பெரிய #தீவிரவாதிய புடிச்ச மாதிரி #போட்டோக்கு போஸ் குடுக்குறாங்க....! #பாவம் ₹1½ லட்சம் ரூபாய் அபராதம் வேற ...

#கன்னியாகுமரி மாவட்டம் #தேரூர் அருகே உள்ள குளத்தில் #தாமரை இலைகளையும், தாமரை #மலர்களையும் பறித்ததற்காக, ஒரு முதியவரை மறைந்திருந்து #கண்காணித்துக் கைது செய்து, அவருக்கு #ஒன்றரை_லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள் வனத்துறையினர்.

பாவம் அந்த #முதியவர்! ஒரு தாமரை இலையின் விலை ஒரு ரூபாய்கூட இருக்காது. அந்த இலைகளையும் பூக்களையும் பறித்து, பூக்கடைக்காரரிடம் கொடுத்து ஒரு நாளைக்கு 50 ரூபாயோ, 100 ரூபாயோ சம்பாதித்து, அதில் #வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் ஏழை மனிதராகத்தான் இருப்பார். வயதான காலத்தில் வேறு என்ன வேலை அவரால் செய்ய முடியும்? குளத்தில் இறங்கி, தாமரை இலைகளையும் பூக்களையும் பறைத்து விற்று, கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பார். அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய முதியவரைப் பிடித்து, ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள். ஐயா, அவர் அந்தப் பணத்தை எப்படிக் கட்டுவார்? தாமரை இலை பறித்துப் பிழைப்பு நடத்தும் அந்த ஏழை மனிதர், ஒன்றரை லட்சம் ரூபாயை எங்கே போய்த் தேடுவார்? அபராதம் கட்டுவதற்காகக் கடன் வாங்க வேண்டுமா? அல்லது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் அடைக்க முடியாத கடன் சுமையை அவர் தலையில் ஏற்றப் போகிறீர்களா?

அடடா! என்ன ஒரு சுறுசுறுப்பான அதிகாரி! மறைந்திருந்து கண்காணித்து, தாமரை இலை பறிக்கும் முதியவரைக் கையும் களவுமாகப் பிடித்து, ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்துகிறீர்களே, பாராட்டுகள்!

ஆனால், அனுமதியின்றி வனத்துறைக்குச் சொந்தமான கன்னியாகுமரி மாவட்ட மலைகளையே வெடி வைத்து உடைத்து, கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் பெரிய பெரிய திருடர்களைப் பார்த்தால், இதே அதிகாரிகள் எத்தனை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் போகிறார்கள்? அந்த மலைகளை வெடி வைத்துத் தகர்க்கும்போது இந்த அதிகாரிகளின் கண்களுக்கு அது தெரியவில்லையா? ஏழை முதியவர் தாமரை இலை பறிப்பது மட்டும் கண்ணுக்குத் தெரிகிறதா? மலைகளைத் தகர்த்து இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் மீது இதே வேகம் பாயுமா?

சட்டம் என்பது ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கான ஆயுதமா? அல்லது இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களைத் தண்டிப்பதற்கான கருவியா?

ஒரு பக்கம், வயதான காலத்தில் 50 ரூபாய், 100 ரூபாய் சம்பாதிக்கத் தாமரை இலை பறிக்கும் ஏழை முதியவர். இன்னொரு பக்கம், மலைகளையே வெடி வைத்துத் தகர்த்து வளங்களைக் கொண்டு செல்லும் பணபலம் மிக்கவர்கள். இந்த இருவரையும் ஒரே அளவுகோலில் பார்க்க வேண்டியதில்லை. சட்டத்தை மீறியிருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஏழையின் வாழ்வாதாரத்தையும் குற்றத்தின் தன்மையையும் கருத்தில் கொள்ளாமல் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பது எந்த வகையில் நியாயம்?

அந்த முதியவர் பறித்தது தாமரை இலைகளையும் பூக்களையும்தான்! ஆனால், அவர் மீது விழுந்திருப்பதோ ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் என்ற இடி!

அதிகாரிகளே, அந்த முதியவரால் இந்த அபராதத்தை எப்படிக் கட்ட முடியும் என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள். சட்டத்தை அமல்படுத்துவதில் காட்டும் அதே ஆர்வத்தை, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் மீதும் காட்டுங்கள். ஏழை முதியவரின் கண்ணீருக்கு ஒரு விலையும், மலைகளை அழிப்பவர்களின் குற்றத்துக்கு வேறு விலையும் இருக்கக் கூடாது!, உங்களுடைய பார்வை ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும் இப்படி மேலும் கீழும் இருக்கக்கூடாது..

🍰🍬 இனிப்பின் சுவையில் இனிக்கட்டும் வாழ்க்கை! 🍬🍰அக்டோபர் 14 – தேசிய இனிப்பு தினம்!வாழ்க்கை எப்போதும் இனிப்பாக இருப்பதில்ல...
14/10/2026

🍰🍬 இனிப்பின் சுவையில் இனிக்கட்டும் வாழ்க்கை! 🍬🍰

அக்டோபர் 14 – தேசிய இனிப்பு தினம்!

வாழ்க்கை எப்போதும் இனிப்பாக இருப்பதில்லை…
ஆனால், சில இனிப்புகள் வாழ்க்கையின் கசப்பைக்கூட மறக்கச் செய்துவிடுகின்றன!

பிறந்தநாள் கேக்கில் தொடங்கி, திருமண வீட்டு மைசூர்பாக் வரை…
பண்டிகை நாளின் அதிரசத்தில் தொடங்கி, பாட்டி கையால் செய்த பாயசம் வரை…

ஒவ்வொரு இனிப்புக்கும் பின்னால் ஒரு நினைவு இருக்கிறது. ❤️

குழந்தைப் பருவத்தில் கடைக்கண் பார்வையுடன் கேட்ட மிட்டாய்…
தேர்வில் வெற்றி பெற்றபோது அப்பா வாங்கிக் கொடுத்த லட்டு…
நல்ல செய்தி சொன்னதும் உறவினர்களுக்குப் பகிர்ந்த இனிப்பு…

இவையெல்லாம் வெறும் சர்க்கரையின் சுவையல்ல…
அன்பின் சுவை! உறவுகளின் சுவை! மகிழ்ச்சியின் சுவை!

இனிப்பு என்பது நாக்கில் கரைவது மட்டுமல்ல…
சில நேரங்களில் அது மனதில் தங்கிவிடுகிறது.

வாழ்க்கையில் நாம் எவ்வளவு இனிப்புகளைச் சுவைக்கிறோம் என்பது முக்கியமல்ல; நம்மால் எத்தனை பேருடைய வாழ்க்கையை இனிமையாக்க முடிகிறது என்பதுதான் முக்கியம்!

இந்த தேசிய இனிப்பு தினத்தில், இனிப்புகளை ரசிப்போம்… அதைவிட முக்கியமாக, நம் வார்த்தைகளால் பிறர் மனதை இனிமையாக்குவோம்.

ஏனெனில்…

இனிப்பைக் கொடுத்தால் நாக்கு மகிழும்…
இனிமையாகப் பேசினால் இதயம் மகிழும்! ❤️

🍭 இன்று ஒரு இனிப்பைப் பகிருங்கள்… ஒரு புன்னகையைப் பரிசளியுங்கள்!

12/10/2026

நடிகை கஸ்தூரியின் பேச்சில் கூட "எங்களின் "
"உயர் சாதிப் பிரிவில் "

என்ற சாதி ஆணவம் பேச்சு தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் பேச்சாகவே உள்ளது!!

இதோ
கஸ்தூரியின் பேச்சு....

*தேவேந்திர குல வேளார்கள் எஸ்.சி. பிரிவில் இருந்து விலகி எங்களின் உயர் ஜாதியினர் பிரிவுக்கு மாறி விடுங்கள் என பட்டியல் மாற்றம் மாநாட்டில் நடிகையும், பாஜக பிரமுகருமான நடிகை கஸ்தூரி பேச்சு*

Address

Tirunelveli
627007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalini Shantha Kumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category