DYFI Villupuram

DYFI Villupuram அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் வேலை

செவ்வணக்கம் தோழர் A.Kதிண்டிவனம் அருகே நகந்தூர் கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த தோழர் ஏ.கோதண்டம் அவர்கள...
23/10/2026

செவ்வணக்கம்
தோழர் A.K

திண்டிவனம் அருகே நகந்தூர் கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த தோழர் ஏ.கோதண்டம் அவர்கள் மாணவப் பருவத்திலேயே பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்திய மாணவர் சங்கத்தில் செயல்பட தொடங்கினார்.

பின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் வீரியமாக கொண்டு சென்று அமைப்பை வலிமையாக்கினார்.

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்
சங்கம் சார்பில் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்களுக்கு களத்தில் இறங்கி போராடியவர்.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிற்சங்க தலைவராகவும், ஆலோசகரவும் இருந்து பல்வேறு தொழிலாளர் பிரச்சினைகளுக்கு சட்ட போராட்டத்தை முன்னெடுத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த திண்டிவனம் வட்ட செயலாளராக (இன்றைய திண்டிவனம், வானூர், மரக்காணம், மயிலம், செஞ்சி, மேல்மலையனூர்) பல கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று மார்க்சிஸ்ட் கட்சியை கட்டியெழுப்பியவர்.

திண்டிவனம் வட்டம் கீழ் சேவூர் கிராமத்தில் நிலைவிய அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னின்று போராடி வெற்றி கண்டவர்.

இன்றைய சிபிஎம் மாவட்ட தலைவர்களில் பலர் இவரால் வளர்த்தெடுக்க பட்டவர்கள்.

இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு எப்போதும் ஆதரவும் உதவியும் செய்தவர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விழுப்புரம் - DYFI மாவட்டக்குழு

14/10/2026

நீட் தேர்வு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்களின் தலைமையில் கன்னியாக்குமரியில் இருந்து சென்னை வரை செல்லும் மிதிவண்டி பேரணி இன்று இரவு திண்டிவனம் வந்தடைந்தது.

DYFI-SFI-தமுஎகச சார்பாக அவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீட் தேர்வு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்களின் தலைமையில் கன்னியாக்குமரி...
13/10/2026

நீட் தேர்வு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்களின் தலைமையில் கன்னியாக்குமரியில் இருந்து சென்னை வரை செல்லும் மிதிவண்டி பேரணி இன்று மதியம் 1 மணியளவில் விழுப்புரம் வந்தடைந்தது.

DYFI-SFI-தமுஎகச சார்பாக அவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

11/10/2026

டெல்லியில் அறவழியில் போராடிய மாணவர்களையும், இளைஞர்களையும் அடக்குமுறையை கட்டவிழ்த்த மோடி அரசை கண்டித்தும் , ஓட்டு திருடன் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தியும்
SFI | DYFI விழுப்புரம் மாவட்டக்குழு சார்பாக கருப்புக் கொடி போராட்டம்.

டெல்லியில் அறவழியில் போராடியவர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்த மோடி அரசே..!மன்னிப்பு கேள்..!தாக்குதல் நடத்திய அதிகாரி...
11/10/2026

டெல்லியில் அறவழியில் போராடியவர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்த மோடி அரசே..!

மன்னிப்பு கேள்..!

தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு.!

வாக்குத்திருடன் ஞானேஷ்குமாரே பதவி விலகு ..!

அக்டோபர் 11
தமிழ்நாட்டுக்கு வரும் மோடியை எதிர்த்து

கருப்புக் கொடி போராட்டம்

மாலை 4 மணி
விழுப்புரம் சிக்னல்

DYFI - SFI Villupuram

தமிழக அரசே..!ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது..!திண்டிவனம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்ப...
28/09/2026

தமிழக அரசே..!

ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது..!

திண்டிவனம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது இருந்தும் கட்டிடங்களை தவிர மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான எந்த வசதிகளும், முன்னேற்றமும் இல்லை..

மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட திண்டிவனம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடு..!

தலைமை மருத்துவமனைக்கான உண்டான உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்களை ஏற்படுத்திடு..!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - DYFI திண்டிவனம் வட்டக்குழு

11/09/2026

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் சிறுவாக்கூர் கிராமத்தைச்சேர்ந்த தலித் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது ஜாதிய வன்மத்தோடு கொலை வெறி தாக்குதல் நடத்திய தெளி கிராமத்தைச் சேர்ந்த சாதி வெறியர்களை சட்டப்படி கைது செய்து சிறையில் அடைக்காமல் குற்றவாளிகளுக்கு பாதுகாக்க இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் விழுப்புரம் DSP மற்றும் காணை காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 10.09.2026 தேதி விழுப்புரம் நகராட்சி திடலில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தோழர் P.சுகந்தி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் வர்க்க வெகுஜன அரங்க தலைவர்கள் முன்னணி ஊழியர்கள் தோழர்கள் திரளாக பங்கேற்றார்கள்

திண்டிவனம் வட்டம் பட்டணம் கிளையில் DYFI உறுப்பினர் பதிவு நடைபெற்றது.
06/09/2026

திண்டிவனம் வட்டம் பட்டணம் கிளையில் DYFI உறுப்பினர் பதிவு நடைபெற்றது.

விழுப்புரம் வட்ட கோலியனூர் ஒன்றியம் இராமயம்பாளையம் மற்றும் நறையூர் கிராமங்களில் 2026-ஆம் ஆண்டிற்கான DYFI உறுப்பினர் பதிவ...
05/09/2026

விழுப்புரம் வட்ட கோலியனூர் ஒன்றியம் இராமயம்பாளையம் மற்றும் நறையூர் கிராமங்களில் 2026-ஆம் ஆண்டிற்கான DYFI உறுப்பினர் பதிவு பணி நடைபெற்றது.

மேலும், இரண்டு புதிய பகுதிகளான தனசிங்கபாளையம் மற்றும் கல்லப்பட்டு 1, கல்லப்பட்டு 2 ஆகிய கிராமங்களிலும் 2026-ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் பதிவு பணி நடைபெற்றது.

இளைஞர்களை இணைப்போம்!
DYFI-யை வலுப்படுத்துவோம்!

Address

Villupuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share