19/03/2026
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் பெரும்போக நெல் கொள்வனவு!
2025/26 ஆம் ஆண்டின் பெரும்போக நெல் அறுவடையினை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தீகவாபி கிராமத்தின் நெல் களஞ்சியசாலையில் கடந்த 2026.01.29 ஆம் திகதி தொடக்கம் 2026.03.16 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உரிய விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இக்கொள்வனவு வேலைத்திட்டமானது நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையின் பிராந்திய உதவி முகாமையாளர் திரு. சந்திரசிறி அவர்களின் மேற்பார்வையில் பிரிவிற்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர், விவசாய அமைப்பின் பிரதிநிதி மற்றும் பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது.
குறிப்பாக, 516 விவசாயிகளிடம் இருந்து 2130434 Kg நெல் கொள்வனவு செய்யப்பட்டது. இவற்றுள் நாடு வெள்ளை 198,809 Kg நாடு சிவப்பு 1931625 Kg அளவில் நெல் கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
13/03/2026
தேசிய உணவு உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும் பிரதேச செயலக சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் எண்ணக்கருவிலும் பிரதேச செயலாளர் ஏ.சி அஹமட் அப்கர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பில் Red lady பப்பாசி பழக்கன்றுகள் மற்றும் கத்தரி, மிளகாய் பயிர்கள் நடும் திட்டம் ஆரம்பம்.
20/01/2026
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று (2026.01.20) மேற்கொண்ட களவிஜயம்
16/01/2026
" *செயலகச் செய்திகள்-3* " – உங்கள் பார்வைக்கு, கீழே உள்ள PDF Link ஐ திறக்கவும்.
👇https://drive.google.com/file/d/1aEJafqI8dSOqpBkOLkLbNqRUH9UecM8F/view?usp=drive_link
23/12/2025
ஹெக்டர் கொப்பேகடுவ கமநல பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரிசி ஆலை தொழில் தொடர்பான ஆய்வு - 2025 வேலைத்திட்டத்திற்கு அமைய, அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரிசி ஆலைகளை கணக்கெடுப்பு மேற்கொண்டதற்கு அமைவாக Hector kobbekaduwa Agrarian Research & Training Institute இனால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழினை 2025.12.22 ஆம் திகதி பிரதேச செயலாளர் ஏ. சி. அகமட் அப்கர் அவர்கள் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் வழங்கி வைத்தார்.
28/10/2025
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலமுனை விவசாய கல்லூரியில் இருந்து