10/08/2025
#உகந்தைமலை_ஸ்ரீ_முருகன்_ஆலய #வருடாந்த_மகோற்சவம்_நிறைவுபெற்ற_பின்னர்_மேற்கொள்ளப்பட்ட_சிரமதானப்பணி_10_08_2025
********************************************************
Subscribe here:
https://youtube.com/
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************
உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் ஆவணி மாதம் 09ஆந் திகதி நிறைவுற்றதன் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினரால் ஆலய வளாகத்தினை துப்பரவு செய்யும் சிரமதானம் இன்றைய தினம் (10) காலை இடம்பெற்றது.
ஆலய வளாகத்தில் பக்தர்களினால் விட்டு செல்லப்பட்ட குப்பைகளை அகற்றியதுடன், அங்கு போடப்பட்டிருந்த போத்தல்கள், பொலித்தீன் பைகள் போன்ற டெங்கு பரவும் அபாயப் பொருட்களையும் அகற்றியதுடன் சேகரித்த குப்பைகளை உழவு இயந்திரத்தின் உதவியுடன் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டது.
10/08/2025
#உகந்தைமலை_ஸ்ரீ_முருகன்_ஆலயத்தில்_மூன்று_கட்டங்களாக_நடைபெற்ற_அன்னதானப்பணி
********************************************************
2025.08.07ஆந் திகதி உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வில் கலந்து கொண்ட பக்த அடியார்களின் நலன்கருதி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் ஏற்பாட்டில் #ஆலையடிவேம்பு_பிரதேச_பொதுமக்களினதும்_மற்றும்_வெளிநாடுகளில்_வசிக்கும்_எமது_உறவுகளினதும் #நிதிப்பங்களிப்புடன் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஆவணி மாதம் 08ஆந் திகதி மற்றும் தீர்த்தோற்சவ தினமான 09ஆந் திகதியுடன் இவ்வாண்டு ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கு மூன்று கட்டங்களாக மாபெரும் அன்னதானம் வழங்கும் பணி இறையருளால் இனிதே நிறைவுபெற்றது.
அத்தோடு, இப்பணி ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறுவதற்கு #பங்களிப்பு_மற்றும்_ஒத்துழைப்பை_வழங்கிவரும்_அனைவருக்கும் எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் சார்பில் #மனமார்ந்த_நன்றியினை_தெரிவித்துக்_கொள்கின்றோம்.
08/03/2025
#அன்னை_சாரதா_கலவன_பாடசாலை_சுற்றுச்சூழல்_பகுதியில்_உள்ள_புற்களை_அழிக்கும்_சிரமதானப்பணி_07_03_2025
********************************************************
Subscribe here:
https://youtube.com/
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************
கடந்த காலங்களில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலையின் சுற்றுச்சூழல் பகுதியில் புற்கள் வளர்ந்து சிரமதானம் செய்ய வேண்டிய தேவைப்பாடு காணப்பட்டது.
அந்தவகையில் பாடசாலையின் அதிபர் திருமதி K.துளசிநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினர் 2025.03.07ஆந் திகதி அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலையின் சுற்றுச்சூழல் பகுதியில் உள்ள புற்களை முற்றாக அழிப்பதற்கு களைக்கொல்லி வேதிப்பொருள் தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
| | | | | | |
08/03/2025
#தாண்டியடி_சங்கமன்கண்டி_காட்டுப்பிள்ளையார்_ஆலயத்தில்_நடைபெற்ற_சிரமதானப்பணி_07_03_2025
********************************************************
Subscribe here:
https://youtube.com/
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************
அருள்மிகு ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மாண வேலைகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றதுடன், ஆலய உட்பகுதிகள் கொங்கிறீட் இடப்பட்டு மாபிள் பதிக்கும் வேலைகள் நடைபெறவுள்ளது.
அதற்கமைவாக, தாண்டியடி சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு 2025.03.07ஆந் திகதி ஆலய உள்நிலப்பரப்பு கொங்றீட் இடப்பட்டு மாபிள் இடும் பணிகள் இடம்பெறவுள்ள நிலையில் ஆலய உட்பகுதிகள் மற்றும் வெளிப்பகுதிகளை செப்பனிட்டு சமப்படுத்தும் பணியை எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினர் சிறந்த முறையில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| | | | | | | |
16/02/2025
" #கிளீன்_ஶ்ரீ_லங்கா_( )” #தேசிய_நிகழ்ச்சித்திட்டம்_16_02_2025
********************************************************
Subscribe here:
https://youtube.com/
🔗https://alayadisocialwelfare.blogspot.com/2025/02/15022025.html?m=1
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************
“கிளீன் ஶ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "அழகான கடற்கரை - கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்'' எனும் தொனிப்பொருளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்னமுகத்துவார கடற்கரைப் பகுதியை துப்பரவு செய்யும் சிரமதானப் பணி 2025.02.16ஆந் திகதி முன்னெடுக்கப்பட்டது.
இச் செயற்பாடு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ் தலைமையில் கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணியில் அக்கரைப்பற்று 241ஆம் காலாட்படைப்பிரிவின் அதிகாரிகளுடன் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், ஆலையடிவேம்பு பிரதேச சபை ஊழியர்கள், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடற்கரை பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள், சிரட்டைகள், பொலித்தீன் பைகள், குப்பைகள் போன்ற கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டது.
| | | | | | |
08/02/2025
#கிழக்கு_மாகாண_பொங்கல்_பெருவிழா_08_02_2024
********************************************************
Subscribe here:
https://youtube.com/
🔗https://alayadisocialwelfare.blogspot.com/2025/02/08022024.html
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************
கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து 2025.02.08ஆந் திகதி நடாத்திய கிழக்கு மாகாண பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் S.நவனீதன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ் ஒருங்கிணைப்பில் இவ்வருடம் மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வின் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரெட்ணசேகர மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம ஆகியோர் கலந்து கொண்டனர்.
| | | | | | | |
13/01/2025
நம்மை வாழ வைக்கும் தமிழுக்கு
விவசாயிகளுக்கும் இந்நாளில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
#அனைவருக்கும்
#இனிய_தைபொங்கல்
#நல்வாழ்த்துகள்
31/12/2024
புதிய வருடம் புதிய கனவுகளின் தொடக்கம். தைரியத்துடன் முன்னேறுங்கள், வெற்றி உங்களை தேடி வரும். ஒவ்வொரு புதிய நாளும் ஒரு புதிய வாய்ப்பாக இருப்பதாகக் கருதி, நம்பிக்கையும் மாற்றமும் உங்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கட்டும்.
#அனைவருக்கும்_இனிய_ஆங்கில
#புத்தாண்டு_நல்வாழ்த்துகள்!
27/12/2024
#விவேகானந்தா_வித்தியாலத்தில்_மேற்கொள்ளப்பட்ட_சிரமதானப்பணி_27_12_2024
********************************************************
Subscribe here:
https://youtube.com/
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************
கடந்த மாதம் பெய்த கனமழையால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவேகானந்தா வித்தியாலயத்தின் சுற்றுச்சூழல் பகுதி சிரமதானம் செய்யப்பட வேண்டிய தேவை காணப்பட்டது.
இந்நிலையில் 2024.12.27ஆந் திகதி எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும் அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் அவர்களின் ஆலோசனையிலும் விவேகானந்தா வித்தியாலயத்தின் சுற்றுச்சூழல் பகுதியை துப்பரவு செய்யும் சிரமதானப்பணி நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டது.
| | | | | | |
14/12/2024
பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற மாபெரும் சிரமதானப்பணி
Alayadivembu Divisional Social Welfare Organization, Social Welfare, Organization, Akkaraipattu, Sri Lanka, Social Service,Tamil, Hindu, Alayadivembu
13/12/2024
#பனங்காடு_பிரதேச_வைத்தியசாலையில்_மேற்கொள்ளப்பட்ட_சிரமதானப்பணி_13_12_2024
********************************************************
Subscribe here:
https://youtube.com/
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
********************************************************
கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வந்த கழிவுப்பொருட்கள் காரணமாக பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் பகுதி அசுத்தமடைந்து காணப்பட்டது. இக்கழிவு பொருட்களை முழுமையாக அகற்றி துப்பரவு செய்வது அவசியமான தேவையாக இருந்தது.
அந்தவகையில் 2024.12.13ஆந் திகதி எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் கீழ் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றியதுடன், மேலதிகமான குப்பைகளை உழவு இயந்திரத்தின் உதவியுடன் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டது.
இச்செயற்பாடு மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் உறுப்பினர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
| | | | | |