Pradeshiya Sabha Akkaraipattu

Pradeshiya Sabha Akkaraipattu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pradeshiya Sabha Akkaraipattu, Government Official, Akkaraipattu, Akkaraipattu.

12/07/2024

பட்டியடிப்பிட்டியின் மையவாடியினை சிரமதான மூலம்
துப்புரவு செய்வதற்கு Academy for Youth Affairs (பட்டியடிபிட்டி) இளைஞர்கள் படையணி களமிறங்கிருப்பது கோடி சந்தோஷங்களை கொடுக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

மையவாடியினை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வருகின்ற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அந்த உணர்வுகள் முளைத்திருப்பது எல்லோருடைய உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களிலும் தெரிய முடிகிறது.

இதற்கெல்லாம் நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்ற இந்த இளைஞர் படைபணியின் சிரமதான செயற்திட்டத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து கரம் கொடுத்து உதவுவோம்.

முடியுமானவரைக்கும் ஓர் இரு மணித்தியாலங்களேனும் நமது கப்றுக்காக மண் வெட்டிகளோடு வருகை தந்து சுத்தம் செய்வதில் பங்கெடுத்துக் கொள்வோம்.

* அக்கரைப்பற்று பிரதேச சபை,
* பட்டியடிப்பிட்டி ஜும்மா பள்ளிவாசல்,
* பள்ளி குடியிருப்பு ஜும்மா பள்ளிவாசல்,
* அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல்,
* அக்கரைப்பற்று புதுப்பள்ளிவாசல்,
* அனைத்து இளைஞர் விளையாட்டுக் கழகங்கள்.
* அக்கரைப்பற்றின் அதி விசேட நிறுவனங்களான (Akp Janasa Team, Walkers Union) போன்ற
எல்லாம் நிறுவனங்களும் இணைந்து பங்கெடுத்துக் கொள்ளும்படியும்,

சனிக்கிழமை ஓய்வில் இருக்கின்ற ஒவ்வொரு கௌரவமான பிரஜைகளும் இணைந்து கொள்ளும்படியும் தாழ்மையோடு நினைவூட்டி வைக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ்
நாளை சனிக்கிழமை அதிகாலை 5:45 ற்கு
மண் வெட்டிகளோடு மையவாடியில் சந்தித்துக் கொள்வோம்.

Photos from Pradeshiya Sabha Akkaraipattu 's post 28/10/2022

இன்று அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி கேணியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் முதற்கட்டப் பணிநிறைவுக்கு வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு சிறுவர்களிடம் கையழிக்கவுள்ளோம்.
எமது பிரதேச சபையின் கௌரவ உதவித் தவிசாளர் A.M.அஸ்ஹர் அவர்களின் நீண்டகால கனவு நிறைவேறி இருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் இவ்வாறான சிறுவர் பூங்காவினை நிறுவுவதற்காக பல முயற்சிகளையும் தியாகங்களையும் மேற்கொண்டார் அதற்காக நான் அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு மேலாக எமது தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னால் அமைச்சருமான கெளரவ அல்ஹாஜ் A.L.M. அதாவுல்லா Sir அவர்களிடம் நாங்கள் பட்டியடிப்பிட்டி கேணியில் சிறுவர் பூங்கா ஒன்றினை அமைக்க வேண்டும் என்று கூறிய போது உடனடியாக இவ்வாறான வேலைத்திட்டங்களை செய்து எமது எதிர்கால பிள்ளைகளின் உடல, உள ஆரோக்கியத்திற்கு இடமழிக்க வேண்டும் என கூறி பாரிய நிதி ஒதுக்கீட்டினை வழங்கியமைக்கு நன்றியினை கூறிக்கொள்வதோடு எமது சபையின் கெளரவ உறுப்பினர்கள் இதனை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியது மாத்திரமன்றி நிதி ஒதுக்கீட்டினையும் இப்பூங்கா அமைப்பதற்கு தந்துதவியமைக்காக அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இவ்வாறான சிறுவர் பூங்காக்களை ஏனைய வட்டாரங்களில் நிறுவுவதற்கு என்னோடு நின்று கௌரவ உறுப்பினர்கள் உழைக்க வேண்டும் என கூறிக்கொள்கின்றேன்.

M.A.றாசிக்
தவிசாளர்

28/10/2022
Want your business to be the top-listed Government Service in Akkaraipattu?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Akkaraipattu
Akkaraipattu

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15