Thelumbugahawatta Model Primary School

Thelumbugahawatta Model Primary School

Share

This is the one of Government School in Central provice of Kandy District in Sri Lanka.

Photos from Thelumbugahawatta Model Primary School's post 07/11/2025

தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் புலமைப் பரீட்சை பரிசளிப்பு விழா

தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்வை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, அதிபர் திருமதி ரியாஸா அவர்களின் தலைமையில், 06.11.2025 வியாழக்கிழமை அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக தமிழ் வலயக் கல்வி தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளர் திரு. ராசிக் அவர்களும், வலயக் கல்வி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அசீமா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஐந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவில், வெட்டுப் புள்ளிக்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற எட்டு (08) மாணவர்களுக்கு விசேட பரிசுகள் Taita steel, Peoples bank, SDEC, Tata timber, Insee cement company ஆகியவற்றால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பரீட்சைக்குத் தேற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஐந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள். ஜஸாக்குமுல்லாஹு ஹைரா.

Photos from Thelumbugahawatta Model Primary School's post 17/10/2025

தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா 16-10-2025 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் Riyaza Madem அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவி Mrs. Nazla Najimudeen (Speech Therapist - Teaching Hospital, Matale) கலந்துகொண்டார்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், SDEC, PPA, Thaqwa Masjidh, Wecare மற்றும் Faizal Foundation அங்கத்தவர்கள் பங்கேற்பினாலும் நிகழ்ச்சி சிறப்பூட்டப்பட்டது.

புதியதாக தெரிவுசெய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் அவர்கள் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையை முன்னேற்றும் வகையில் பாடசாலை வளர்ச்சிக்காகச் சிறந்த பங்களிப்பு செய்வதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Hilmy ibnu Habeeb
Secretary
PPA / MIM Faizal Foundation

08/10/2025

ِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்று நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு என்பது வெறும் வருடாந்திர நிகழ்வு அல்ல,
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பொறுமை, மற்றும் தியாகத்தை நினைவூட்டும் நன்றியின நாள் ஆகும்.

இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது SDEC, PPA, Taqwa Masjidh, We Care, மற்றும் MIM Faizal Foundation எனும் ஐந்து அமைப்புகளின் கூட்டு முயற்சியால் ஆகும்.

ஆசிரியர்களை கவுரவிப்பது வெறும் பரிசுகள் அல்லது பாடல்களால் மட்டுமல்ல;
அவர்களின் தேக ஆரோக்கியம், வாழ்க்கை நலன், பாவ மன்னிப்பு, மற்றும் இம்மை மறுமை வெற்றிக்காக அல்லாஹ்விடம் நாம் துஆ செய்வதே உண்மையான கவுரவமாகும்.
அல்லாஹுதஆலா எங்களை அவ்வாறான நற்செயல்களில் ஈடுபடும் மக்களாக ஆக்குவானாக.

இன்று நடைபெற்ற ஆசிரியர் கவுரவ நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

جَزَاكُمُ اللهُ خَيْرًا – بَارَكَ اللهُ فِيكُمْ


அன்புடன்,

Hilmy ibnu Habeeb
Secretary - PPA

10/06/2025

Thelumbugahawatta Muslim Vidyalaya வரலாறு பேசும் ஓர் கல்விப் பயணம்!

**புதிய கட்டிடம் – வரலாற்றுச் சாதனை**

1991க்குப் பிறகு எந்த வகுப்பறை கட்டிடமும் பெற்றிராத பாடசாலைக்கு,
ஒரு குடும்பம் ஒரு கனவாகக் கையெழுத்திட்டது…

**Alhaj K. G. H. M. Ahamed Shaheed**
அவரது பிள்ளைகள்:

* **Alhaj A. S. M. Ilyas**
* **Marhoom A. S. M. Ramzeen**
* **Alhaj A. S. Riyas Mohamed**

பாடசாலையின் நலனுக்காக தங்களது சொந்த செலவில்,
ஒரு முழுமையான மாடிக் கட்டிடத்தை நன்கொடையாக அளித்தனர்.

🏢
**K. G. H. M. AHAMED SHAHEED BLOCK**
அடிக்கல் நாட்டப்பட்டது: **03.01.2023**
திறப்பு விழா: **31.05.2025**














31/05/2025
08/05/2025

தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலய *பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் புதிய அங்கத்தவர்கள் தெரிவும்*.

⏰காலம் : *இன்ஷா அல்லாஹ் 09-05-2025 வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு*.

🏠இடம் : *பாடசாலை பிரதான கேட்போர் கூடம்*.

✅ பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

செயலாளர்.

Want your business to be the top-listed Government Service in Akurana?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Thelumbugahawatta
Akurana
20850

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 11:30