தினம் ஒரு ஹதீஸ்

தினம் ஒரு  ஹதீஸ்

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தினம் ஒரு ஹதீஸ், Library, 138 bulugohethenna, Akurana.

18/08/2022
10/09/2020

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏  ، اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏  ، صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 

(இறைவா!)உன்னையே நாங்கள்
வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7

10/02/2020

அல்லாஹ் ❤

Photos from தினம் ஒரு  ஹதீஸ்'s post 06/10/2018

இவர் பேருவளை பள்ளிவீதியைச்
(எலந்தகொடை)சேர்ந்த வஸீம்.

வாய் பேச முடியாது.மிகுந்த சிரமத்தோடு
கைகளை அகட்டி,ஒடுக்கி நடப்பவர்.
எப்போதும் சிரித்த முகம்.ஐவேளையும்
பள்ளிக்குப் போய்த் தொழுவார்.

பாரைக்கு அடியில் இருக்கும் தவளை
போல,யாருக்கும் தெரியாமல்,
இவருக்குள் இருந்த ஆசை மக்காவுக்குப்
போய் உம்றாச்செய்யவேண்டுமென்பது
தான்.ஆசையை அடுத்தவரிடம் சொல்ல
மொழியும் இல்லை வழியுமில்லை.

அடுத்தவரை என்னவென்று அழைப்பது ?
தனக்கென என்னவென்று உழைப்பது. ?
சைக்கிளோ,மோட்டார் சைக்கிளோ
ஓட்டத் தெரியாது.எங்கும் நடைதான்.
ஆனால் இவரது முயற்சிக்கு இல்லை
தடை தான்.

ஒருநாள் இவர் ஒரு கைக்கடிகாரத்தை
இன்னொருவருக்குக் காட்டிக் கொண்டி
ருப்பதை ஒரு தனவந்தர் காணுகிறார்.
இவரை அணுகி "நான் தருகிறவற்றை
விற்றுக்கொண்டு வர முடியுமா" எனக்
கேட்கிறார்.முடியுமென தலையசைக்கிறார்.

அந்த தனவந்தரின் காட்சியறை
(showroom)யிலிருந்து அழகுசாதன (வாசனைப் )பொருட்களை(cosmetic) வரவழைத்து, அவற்றை விற்றுத்
கொண்டு வந்து தனது முதலைத்
தந்துவிட்டு லாபத்தை எடுத்துக்
கொள்ளச் சொல்கிறார்.

வஸீம் போய் விற்றுவிட்டு காசோடு
வருகிறார்.இருவருக்குமே உற்சாகம்.
மீண்டும் மீண்டும் பொருட்களை
எடுத்து விற்கக்கொடுக்கிறார்.
பொருட்களைக் கொண்டுவருகிற
(currier)கொரியர் செலவு அந்த தனவந்தருடையது.வஸீம் விற்றுக்
கொண்டு வருகிற பணத்தில் "முதல்" ஐ
அவரது showroom க்கு அனுப்பவும்
லாபத்தை தனது காரியாளயத்தில்
வஸீமின் பெயரில் சேமித்து வரவும்
தனது காரியாலயத்தில் உள்ள
ஒருவருக்குப் பொறுப்புக் கொடுக்கிறார்.
வஸீமிடம் பொய்,களவு, ஏமாற்று இல்லை.
அவரது நேர்மையும் உழைப்பும் அவரை
உச்சத்துக்குக் கொண்டு போகிறது.

பெண்கள் தமக்குத் தேவையான
cosmetic பொருட்களை எழுதியனுப்பு
வார்கள்.வஸீம் அவற்றை வரவழைத்து
அவர்களுக்கு விற்பார்.சுமார்
ஒன்றரை வருட உழைப்பு.
ஒருலட்சத்து முப்பதாயிரத்தைச் சேர்த்து
விட்டார்.உம்றாக் கனவு கைகூடுகிறது.

வஸீம் நாளை (07/10/18) உம்றாவுக்குப்
போகிறார்.அவரது துணைக்கு அவரது
தாயும் உம்ராவுக்குப் போக அந்த
தனவந்தர் உதவுகிறார்.

அந்தக்கோடீஸ்வருக்கு சவூதிக்கு ஒரு
டிக்கெட் வாங்குவது பெரியவிடயமல்ல.
ஆனால் எந்த ஒரு மனிதனாலும் உழைக்க
முடியும்.உழைத்தே போகட்டும் என்று
ஊக்கப்படுத்தினார்.வஸீம் அடுத்தவர்
களை எதிர் பார்க்காமல் உழைத்தார்.

வானம் தொட்டுவிடும் தூரம் தான்.

Nabhan Shihabdeen
beruwala
06/10/18.

10/12/2017

2410. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
'ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்' என்று கூறினார்கள்.
'நபி(ஸல்) அவர்கள், 'வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்' என்று கூறினார்கள் என எண்ணுகிறேன்' என்று அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார்.
ஸஹீஹ் புகாரி

24/11/2017

7096. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் (ஒரு முறை கலீஃபா) உமர்(ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தபோது அவர்கள், 'உங்களில் யார் இனி தலை தூக்கவிருக்கும் (ஃபித்னா) குழப்பத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?' என்று கேட்டார்கள். நான், 'ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பதன் மூலமும்), தன்னுடைய செல்வம் விஷயத்தில் (அது இறைவனைப் பணிந்து வாழும் வாழ்க்கையிலிருந்து திசைதிருப்புதன் மூலமும்,) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (-சோதனையில்) ஆழ்த்தப்படும்போது தொழுகை, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு, தீமையிலிருந்து தடுத்தல் ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும்' என்று (நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் எனக்) கூறினேன். உமர்(ரலி) அவர்கள், 'நான் (சோதனை எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதைப் பற்றிக் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (நபியவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பம் எனும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்' என்றார்கள். நான், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. (உங்கள் ஆட்சியில் அவற்றில் ஏதும் தலைதூக்கப் போவதில்லை.) உங்களுக்கும் அதற்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது' என்று கூறினேன். உமர்(ரலி) அவர்கள், 'அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை; அது உடைக்கப்படும்' என்று பதிலளித்தேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அப்படியானால் அது ஒருபோதும் மூடவேபடாது' என்றார்கள். நான், 'ஆம் (சரிதான்)' என்று சொன்னேன்.
(அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களிடம், 'உமர்(ரலி) அவர்கள் அந்தக் கதவு எதுவென்று அறிந்திருந்தார்களா?' என்று கேட்டோம். ஹுதைஃபா(ரலி) அவர்கள், 'ஆம். பகலுக்கு முன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர்(ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்திருந்தேன்' என்று பதிலளித்தார்கள். அந்தக் கதவு எதுவென்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, அவர்களிடம் மஸ்ரூக் இப்னு அஜ்தஃ(ரஹ்) அவர்களைக் கேட்கச் சொன்னோம். அவர் அந்தக் கதவு எது என்று கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி) அவர்கள், 'உமர்(ரலி) அவர்கள்தாம் அந்தக் கதவு' என்று பதிலளித்தார்கள்.33
ஸஹீஹ் புகாரி

Photos from தினம் ஒரு  ஹதீஸ்'s post 17/07/2017

138 புழுகோகதன்ன அகுரனயை சேர்ந்த Mohamed Rimzan (32) அவர் கடந்த 2016 ஆண்டு வாய் புற்று நோயால் பாதிக்கப் பட்டார் அவருக்கு இதுவரையில் 5 சத்திரசிகிச்சைகள் நடந்து முடிந்துள்ளன இன்னொரு சத்திரசிகிச்சை நடைபெரவுள்ளது இதற்காக ஒரு தொகைபனம் தேவைபடுகிறது அல்லாஹ் மிகப்பெரியவன் உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்

‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ருகூவும், ஸுஜூதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள். (இதன் மூலமே) நீங்கள் வெற்றி அடைவீர்கள்!’’ (22:77).

SHM ISMAIL
Sampath Bank
Ac:103250048533

#0767676343

Photos 30/05/2017

நோன்பு நோற்றுக் கொண்டு பொய்யையும் தீய செயல்களையும் விடாது இருத்தல்.

1903. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 30

Photos 05/03/2017

289. 'நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?' என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளூச் செய்துவிட்டுத் தூங்கலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5

Photos 05/03/2017

1597. ஆபிஸ் இப்னு ரபீஆ அறிவித்தார்.
உமர்(ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார்.
Volume :2 Book :25

Photos 05/03/2017

16:19
16:19 وَاللّٰهُ يَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَ مَا تُعْلِنُوْنَ‏ 
16:19. அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான்.
16:20
16:20 وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَؕ‏ 
16:20. அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.

Want your business to be the top-listed Government Service in Akurana?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


138 Bulugohethenna
Akurana