07/07/2026
🤝 சமூக சேவையின் இன்னொரு சிறிய முயற்சி 🤝
அல்ஹம்துலில்லாஹ்!
அல் மினா பாலர் பாடசாலையின் அதிபரின் கோரிக்கைக்கு இணங்க, 2026-07-05 அன்று எமது அஹ்லுஸ் ஸுன்னது வல் ஜமாஅத் இளைஞர் பேரவை – வாங்காமம் 11 சார்பாக ஒரு மின் விசிறி (Ceiling Fan) அன்பளிப்பாக பொருத்தி வழங்கப்பட்டது.
இந்நற்செயல் நிறைவேற பங்களித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
அல்லாஹ் ﷻ இந்த நற்செயலை ஏற்றுக்கொண்டு, இதில் பங்களித்த அனைவருக்கும் ஈருலக நன்மைகளையும் அருள் புரிவானாக. ஆமீன். 🤲
02/07/2026
🌿 "ஸதகா பாவங்களை அணைத்துவிடுகிறது."
அல்லாஹ்வின் திருப்தியை நாடி, ஸதகத்துல் ஜாரியாவில் பங்கேற்போம்.
01/07/2026
🌿 "நற்குணமே ஈமானின் அழகு; நல்ல உள்ளமே மனிதனின் பெருமை." 🤍
24/06/2026
முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோற்கப்படும் நோன்புகள் (தாசூரா மற்றும் ஆஷூரா) இஸ்லாத்தில் மிகுந்த முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தவை.
1. முஹர்ரம் மாதத்தின் பொதுவான சிறப்பு
முஹர்ரம் மாதம் என்பது அல்லாஹ்வினால் கண்ணியப்படுத்தப்பட்ட நான்கு புனித மாதங்களில் ஒன்றாகும்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"ரமலான் மாதத்திற்குப் பின் நோற்கப்படும் நோன்புகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும்." (நூல்: முஸ்லிம்)
2. ஆஷூரா (பிறை 10) நோன்பின் சிறப்பு
முஹர்ரம் 10-ம் நாள் 'ஆஷூரா' என்று அழைக்கப்படுகிறது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமூகத்தினரையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்.
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுதல்: ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதால், அதற்கு முந்தைய ஓராண்டு பாவங்கள் மன்னிக்கப்படும் என நபிகளார் நன்மாராயம் கூறியுள்ளார்கள்.
நன்றியுணர்வு: மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்நாளில் நோன்பு நோற்றார்கள். அவர்களைப் பின்பற்றி நாமும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்.
3. தாசூஆ (பிறை 9) நோன்பின் முக்கியத்துவம்
யூதர்களும் ஆஷூரா (பிறை 10) நாளில் நோன்பு நோற்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அவர்களுக்கு மாறுசெய்யும் விதமாக மற்றொரு நோன்பையும் சேர்த்து நோற்க விரும்பினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"நான் அடுத்த ஆண்டு உயிரோடு இருந்தால், நிச்சயமாக (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன்." (நூல்: முஸ்லிம்)
எனவே தான், யூதர்களின் கலாச்சாரத்திற்கு மாறுசெய்யும் விதமாக பிறை 9 மற்றும் பிறை 10 ஆகிய இரு நாட்களும் (வியாழன் மற்றும் வெள்ளி) சேர்த்து நோன்பு நோற்பது சுன்னத்தாகும். (இயலாதவர்கள் பிறை 10 மற்றும் 11 ஆகிய நாட்களிலும் நோற்கலாம்).
07/11/2025
வாங்காமம் 11A கிராமத்தில் நாவாலடி வட்டையில் மழை வேண்டி துஆ பிரார்த்தனை இடம்பெற்றது
2025.11.06
24/09/2025
#பண்பாட்டை போதிக்கும் இஸ்லாம்
******************************************
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக நீங்கள் உங்கள் செல்வத்தினால் எல்லா மக்களுக்கும் உதவ முடியாது. ஆனால், உங்கள் முகத்தின் #புன்னகை மற்றும் நல்ல நடத்தை (அழகிய குணம்,பண்பாடுகள்) அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்."
(அதாவது, மக்களுக்கு உதவுவதில் பணம் மட்டும் அல்ல, சிரித்த முகமும் நற்குணங்களும் மிகப்பெரிய உதவியாகும்.)
மூலம்: ஸஹீஹ் அத்-தர்கீப் 2661
Ahlush Sunnadu Wal Jamaad Youth Council Wangamam Irakkamam 02