20/11/2022
FIFA WORLD CUP QATAR 2022 இன்று 20 ஆம் திகதி முதல் போட்டியை ஆரம்பித்து, December 18 திகதி வரை 🔰
நடைபெறவுள்ளது.
இன்று இலங்கை நேரப்படி இரவு 09.30 மணிக்கு Qatar Football Association vs Football Ecuador அணிகள் முதல் போட்டியில் மோதிக் கொள்கிறது.
இந்த முதல் போட்டி استاد البيت - Al Bayt stadium Al Khor மைதானத்தில் (Qatar - 07.00 Pm) ஆடவுள்ளது.
16/07/2022
எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகனங்களை பதிவு செய்தல்
வாகனங்களை பதிவு செய்து கொண்டதன் பின்னர் பெறப்படும் QR Code இனை பிரின்ட் அவுட் அல்லது ஸ்கிரீன் சொட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முதலிரு நாட்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்ளல் வேண்டும். இதன் பின்னர் எரிபொருள் வழங்கப்படும் போது மேற்படி QR Code இனை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படும்.
வாகனத்தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விநியோகிக்கப்படும்.
👉வாகனத்தின் கடைசி இலக்கம்
0,1,2,எனின் - திங்கள் மற்றும் வியாழன்
👉3,4,5 எனின் - செவ்வாய் மற்றும் வௌ்ளி
👉6,7,8,9 எனின் - புதன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விநியோகிக்கப்படும்.
பின்வரும் இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்
👇
NATIONAL FUEL PASS
09/05/2022
Big Breaking.!
மஹிந்த ராஜபக்ஷ சற்று முன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்..!
🇱🇰👌🏻🔥
31/03/2022
#கொழும்பில் #ஊரடங்கு
Sri Lanka capital imposes after anti-government unrest.
பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் மறு அறிவித்தல் வரும் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
01.04.2022
30/03/2022
நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை 13 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
01/12/2021
ஏக இறைவன் அள்ளிச்சொரிந்த வளம்!
பாலைவனமெல்லாம், பசுஞ்சோலை வனமான செல்வம்!
இங்கு சாதி,மதம், சூது, சுரண்டல் இல்லை!
இங்கு பஞ்சமும் இல்லை, வஞ்சகமும் இல்லை!
வந்தாரை வாழவைக்கும் “வள்ளலானமண்”
கொன்றொழிக்கும் கொரோனா வந்தும் வீழ்ந்து விடாத “கெத்தான” பாக்கியம் பெற்ற பூமி!
அரபு நாடுகளை சேர்ந்த சுமார் 16 டீம் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான போட்டித்தொடர் அல்பைத் விழையாட்டரங்கில் நேற்று மிக கோலாகலமாக ஆரம்பமானது!
ஆரம்ப நிகழ்வின் வர்ணமயமான காட்சிகளையே இங்கு காண்கிறீர்கள்.
28/09/2021
28.09.2021
கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலனியினால் 2022 ஆம் ஆண்டு பாதீட்டை (வரவுசெலவு திட்டம்) அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கும் மூன்று மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த நிதி ஒதுக்கீட்டை விஷேட பொறிமுறை ஒன்றின் மூலம் மேற்கொள்வதற்கான ஆலோசனை கலந்துரையாடலொன்று நேற்று (27) துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமிரா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் வோல்டிசொய்சா, கிராம சேவையாளர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.