Sri Lanka Muslim Congress
Official Page Of Sri Lanka Muslim Congress
Sri Lanka Muslim Congress (SLMC) is a political party that is totally focused on giving voice to the Muslim minority who comprises 10% of the island’s population.
08/04/2026
அபிவிருத்தி வேலைத்திட்டம்-குச்சவெளி ஜயா நகர்.
குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட குச்சவெளி ஜயாநகர் மையவாடிக்கான கொங்றீட் நடைபாதை அமைக்கும் வேலைத்திட்டம் இன்றையதினம்(08) குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ஜனாப் ஏ.ஆர்.சமீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஜனாப் ஏ.முபாறக் அவர்களுடன் சபையின் கௌரவ உபதவிசாளர் ஜனாப் வீ.எம்.றிசாத் ஆகியோரால் குறித்த வேலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது
குறித்த வேலைத்திட்டத்தின்
ஒப்பந்ததாரர்களான ஜயாநகர் சனசமூக நிலையம் -தலைவர் உட்பட உறுப்பினர்கள் அப்பகுதி பள்ளிவாசல் தலைவர்,அப்பகுதி பிரமுகர்களும் பங்கேற்றனர்.
08/04/2026
ஏறாவூர் பொதுச்சந்தை மொத்த வியாபாரிகளை கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம். எஸ். நழீம் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வு நேற்று இரவு 8.00 மணியளவில் ஏறாவூர் நகரசபை வளாகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் நகரசபை வருமானப் பரிசோதகர்களும் இணைந்து கொண்டிருந்தனர். #
06/04/2026
ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ කොළඹ මහා නගර සභා මන්ත්රී ගරු රියාස් කපූර් මහතා, කොළඹ මහා නගර සභාවේ පරිසර සංවර්ධන, ආපදා සහ කාලගුණික විපර්යාස කළමනාකරණය පිළිබඳ ස්ථාවර කමිටුවේ සභාපති ලෙස තේරී පත් විය.
මෙම තනතුර වෙනුවෙන් කොළඹ මහා නගර සභාවේ පැවති ඡන්ද විමසීමේදී,බහුතර කමිටු සාමාජික මන්ත්රීවරුන්ගේ ඡන්දයෙන් ඒ මහතා තේරී පත්වීම විශේෂත්වයකි."
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கௌ. ரியாஸ் கபூர் அவர்கள்
கொழும்பு மாநகரின் சுற்றாடல் அபிவிருத்தி, அனர்த்த மற்றும் காலநிலை மாற்றங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான நிலையியற் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்."
இந்த பதவிக்காக கொழும்பு மாநகர சபையில் நடந்த வாக்கெடுப்பில் குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளால் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eid Mubarak
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் , ஈரானின் சுயாதிபத்தியத்தை வலியுறுத்தியும் இன்று ( 6) ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பு தெவடகஹ பள்ளிவாயலுக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் போது…..
During a protest rally held in front of the Colombo, Dewatagaha Jummah Mosque after Friday prayers today (6), condemning the US-Israeli merciless attack on Iran and emphasizing Iran's sovereignty...
06/03/2026
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் , ஈரானின் சுயாதிபத்தியத்தை வலியுறுத்தியும் இன்று ( 6) ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பு தெவடகஹ பள்ளிவாயலுக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் போது…..
During a protest rally held in front of the Colombo, Dewatagaha Jummah Mosque after Friday prayers today (6), condemning the US-Israeli merciless attack on Iran and emphasizing Iran's sovereignty...
24/02/2026
*ஜனாஸா அறிவித்தல்*
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் *ரியாஸ் கபூர் அவர்களின்* *மூத்த சகோதரர்* *ரஸ்னின் கபூர்* இன்று (24.02.2026) காலமானார்.
இன்று இரவு 7.30 மணியளவி நூராணியா தொடர் மாடி அல் ஹுதா மஸ்ஜிதில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு *9.00 மணியளவில் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.*
ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ කොළඹ මහා නගර සභා මන්ත්රී *රියාස් කපූර් මහතාගේ ජ්යෙෂ්ඨ සහෝදර රස්නින් කපූර් මහතා*
අද දින (24.02.2026) අභාවප්රාප්ත විය.
ජනාසා සලාතය අද රාත්රී 7.30 ට නූරානියා නිවාස සංකීර්ණයේ පිහිටි අල් හුදා පල්ලියේ පවත්වා, පසුව රාත්රී *9.00 ට මාලිගාවත්ත මුස්ලිම් සුසාන භූමියේදී භූමදාන කටයුතු සිදු කිරීමට නියමිතයි.*
22/02/2026
வீரகேசரி
16/02/2026
அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பாளர்களுக்கான விஷேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான றியா மசூர்(MPS) அவர்களின் தலைமையில் நேற்று (16.02.2026) அட்டாளைச்சேனை பீச் ஹவுஸ் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எல். பாயிஸ், எஸ்.ஐ.றியாஸ், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் காங்கிரஸின் இணைப்பாளர் எம்.எச்.அஜ்வத்(SO) மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளைகளின் இளைஞர் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள 06 வட்டாரங்களிலும் தனித்தனியான இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கிராம சேவகர் பிரிவுகளுக்கான இளைஞர் அமைப்பாளர்கள் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Colombo
