UPA - United Peace Alliance Official

UPA - United Peace Alliance Official

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UPA - United Peace Alliance Official, Political Party, maligawatte, Colombo.

28/05/2026

🕋Eid Ul Adha Mubarak 🕋

26/05/2026

සිරස්තලය

ඔලුවිල් වරාය ආරක්ෂා කළ යුතුයි; එය ආර්ථික අනාගතයේ සලකුණයි - අයි.ඒ. කලීලූර් රහ්මාන් -

“ඔලුවිල් වරාය සාමාන්‍ය ව්‍යාපෘතියක් නොවේ; එය ධීවර කර්මාන්තය, කර්මාන්තය, රැකියා අවස්ථා, ආයෝජන සහ ප්‍රාදේශීය සංවර්ධනයට මඟ පෙන්වන වැදගත් ජාතික වත්කමකි. එය විද්‍යාත්මකව කළමනාකරණය කර, ආරක්ෂා කිරීම අප සැමගේ වගකීමයි.”

අනු සිරස්තලය

ඔලුවිල් වරායේ වැදගත්කම

1. ධීවර කර්මාන්ත සංවර්ධනය
2. තරුණයන්ට රැකියා අවස්ථා
3. කුඩා හා මධ්‍ය පරිමාණ ව්‍යාපාර ව්‍යාප්තිය
4. සාගරික සේවා සංවර්ධනය
5. ආයෝජන අවස්ථා වැඩිවීම
6. ප්‍රවාහන සහ සේවා පහසුකම් දියුණු කිරීම
7. ප්‍රාදේශීය ආර්ථික ශක්තිමත් කිරීම
8. සංචාරක ව්‍යාපාරය

“ඔලුවිල් වරාය අත්හැරිය යුතු එකක් නොවේ; එය ආරක්ෂා කර, කාර්යක්ෂමව ක්‍රියාත්මක කළ යුතුය.”

- එක්සත් සාම සන්ධානය -

26/05/2026

"ඔලුවිල් වරාය ආරක්ෂා කළ යුතුයි; එය ආර්ථික අනාගතයේ සලකුණයි"

එක්සත් සාම සන්ධානයේ මහ ලේකම් සහ කොළඹ මහ නගර සභා මන්ත්‍රී I.A. කලීලූර් රහ්මාන්

ඔලුවිල් වරාය යනු සාමාන්‍ය යටිතල පහසුකම් ව්‍යාපෘතියක් නොවේ. එය ශ්‍රී ලංකාවේ ආර්ථික අනාගතය, සමාජ විශ්වාසය සහ ප්‍රාදේශීය සංවර්ධනයේ සංකේතයකි. ජාත්‍යන්තර න්‍යායපත්‍ර සහ කලාපීය ආධිපත්‍ය බලවේගවල භූදේශපාලනික අවශ්‍යතා සමඟ සම්බන්ධ වූ ඇතැම් දේශීය දේශපාලන සහයෝගීතා හරහා ඔලුවිල් වරාය අක්‍රිය කිරීමට ගන්නා උත්සාහයන් සමඟ සංචාරක ව්‍යාපාරයට හානි කරන වැඩසටහනක් ක්‍රියාත්මක කරනවාද ? යන සැකය ජනතාව අතර ඇති වී තිබෙන බව එක්සත් සාම සන්ධානයේ මහ ලේකම් සහ කොළඹ මහ නගර සභා මන්ත්‍රී I.A. කලීලූර් රහ්මාන් මහතා ප්‍රකාශ කර ඇත.

මේ සම්බන්ධයෙන් ඔහු නිකුත් කළ මාධ්‍ය නිවේදනයේ වැඩිදුරටත් සඳහන් වන්නේ:

නැගෙනහිර පළාත් ජනතාවගේ දීර්ඝකාලීන සමාජ-ආර්ථික ප්‍රගතිය පදනම් කරගෙන, හිටපු අමාත්‍ය අභාවප්‍රාප්ත M.H.M. අෂ්රෆ් මහතාගේ සංවර්ධන චින්තනයේ ප්‍රතිඵලයක් ලෙස ඔලුවිල් වරාය ව්‍යාපෘතිය නිර්මාණය විය. මෙම වරාය හරහා ධීවර කර්මාන්ත සංවර්ධනය, තරුණයන්ට රැකියා අවස්ථා, කුඩා හා මධ්‍ය පරිමාණ ව්‍යාපාර ව්‍යාප්තිය, සාගරික සේවා, ආයෝජන අවස්ථා සහ ප්‍රාදේශීය ආර්ථික ශක්තිමත් කිරීම වැනි බොහෝ අරමුණු අපේක්ෂා කෙරිණි.

වර්තමානයේ වරාය මුහුණ දෙන අභියෝග පිළිබඳව විවිධ අදහස් ඉදිරිපත් වෙමින් පවතී. මේ සම්බන්ධයෙන් ජනාධිපති අනුර කුමාර දිසානායක සහෝදරයා ද මෑතකදී නින්තවුර් සංචාරයේදී අදහස් පළ කළේය. විශේෂයෙන් අම්පාර දිස්ත්‍රික්කයේ වෙරළබඩ ප්‍රදේශ මුහුදු ඛාදනය සහ වැලි තැන්පත් වීම වැනි බරපතළ ගැටලුවලට මුහුණ දී ඇත. මෙම තත්ත්වය සම්පූර්ණයෙන්ම වරාය සමඟ සම්බන්ධ කරන අදහස් ද සමාජයේ දක්නට ලැබේ. නිසි තාක්ෂණික ප්‍රවේශයක් සහ විද්‍යාත්මක සැලසුම්කරණයක් නොමැතිව වරාය ඉදිකිරීම මෙයට මූලික හේතුවක් විය හැකි බවත් ඔහු සඳහන් කළේය.

ඒ සමඟම, වරාය ඉදිකිරීමෙන් පසු ප්‍රමාණවත් තාක්ෂණික සහ විද්‍යාත්මක පදනමක් සහිත නඩත්තු කටයුතු අඛණ්ඩව සිදු නොකිරීම නිසා ද ගැටලු උග්‍ර වී ඇති බව ඔහු පෙන්වා දුන්නේය.

තවද, ප්‍රතිපත්ති අඛණ්ඩතාව නොමැතිකම, පරිපාලන ප්‍රමාදයන්, නඩත්තු ආයෝජන අඩුකම සහ ප්‍රාදේශීය සංවර්ධන ප්‍රමුඛතා වෙනස් වීම් ද වරායේ සම්පූර්ණ ක්‍රියාකාරීත්වයට බලපා ඇති බව ඔහු පැවසීය.

"කොළඹ ලෝක මට්ටමේ වරාය නගර ව්‍යාපෘතියක් නිර්මාණය කළ රටක, ඔලුවිල් වරාය ඇයි අපේක්ෂිත ඉලක්කය කරා ළඟා වීමට නොහැකි වූයේ ? යන ප්‍රශ්නය අද ස්වාභාවිකවම මතුවේ. ඊට හේතු දේශපාලන කෝණයෙන් පමණක් නොව තාක්ෂණික, පරිපාලන, ආර්ථික සහ භූදේශපාලනික පදනම්වලින් ද සොයා බැලිය යුතුය" යැයි I.A. කලීලූර් රහ්මාන් මහතා පැවසීය.

ජනාධිපති අනුර කුමාර දිසානායක සහෝදරයා නින්දවුර් සංචාරයේදී අෂ්රෆ් මහතා පිළිබඳව ඉදිරිපත් කළ අදහස් දේශපාලනික සහ සමාජීය වශයෙන් විශාල විවාද ඇති කර ඇති බවත් ඔහු සඳහන් කළේය.

"අෂ්රෆ් ඇමති වූ නිසා විද්‍යාත්මක අධ්‍යයනයක් හෝ දුරදර්ශීභාවයක් නොමැතිව ඔලුවිල් වරාය ගෙන ආවා. එහි ප්‍රතිඵලයක් ලෙස මුහුදු ඛාදනය වැඩි වී තිබෙනවා" යන අදහස මුස්ලිම් සමාජයේ සහ විශේෂයෙන් අෂ්රෆ් මහතාගේ දේශපාලන උරුමය ගරු කරන ජනතාව අතර දැඩි විරෝධයක් ඇති කර ඇති බවත් ඔහු පැවසීය.

අෂ්රෆ් මහතා එක් සමාජයක දේශපාලන අයිතිවාසිකම් පමණක් නොව, නැගෙනහිර පළාතේ ආර්ථික ස්වයංපෝෂිතභාවය සහ සංවර්ධන අරමුණු ද ඉදිරියට ගෙන ගිය නායකයෙකු ලෙසත්, කොටි ත්‍රස්තවාදීන් සමඟ එකතු නොවී මුස්ලිම්වරුන් ආයුධ නොගෙන ප්‍රජාතන්ත්‍රවාදී මාර්ගයට යොමු කළ නායකයෙකු ලෙසත් සිහිපත් වේ. එපමණක් නොව අග්නිදිග විශ්වවිද්‍යාලය, ඔලුවිල් වරාය ඇතුළු ඔහුගේ බොහෝ ව්‍යාපෘති එම දීර්ඝකාලීන සංවර්ධන චින්තනයේ ප්‍රතිඵල ලෙස සැලකිය යුතු බවත් ඔහු සඳහන් කළේය.

"අද ජනාධිපති අනුර කුමාර දිසානායක සහෝදරයා JVP නායකයෙකු ලෙස දීර්ඝ කාලයක් පාර්ලිමේන්තුවේ රැඳී සිට පසුව රටේ ජනාධිපතිවරයා දක්වා ඉහළට පැමිණීමට ඇති ප්‍රජාතන්ත්‍රවාදී දේශපාලන මාර්ගය මේ රටේ කුඩා පක්ෂ සදහා නිර්මාණය කිරීමේදී අෂ්රෆ් වැනි නායකයින් ප්‍රේමදාස ජනාධිපතිවරයා සමග කල කේවල් කිරිමේ දායකත්වය අමතක කළ නොහැක" යැයි ද I.A. කලීලූර් රහ්මාන් මහතා පැවසීය.

එබැවින්, ඔලුවිල් වරාය සම්බන්ධයෙන් ස්වාධීන තාක්ෂණික ඇගයීම් සිදු කළ යුතුය. ජාත්‍යන්තර ප්‍රමිතීන්ට අනුව නඩත්තු සැලසුම් ක්‍රියාත්මක කළ යුතුය. ප්‍රාදේශීය ජනතාවගේ සහභාගීත්වයෙන් යුතු විනිවිද පෙන පරිපාලන කළමනාකරණයක් සහ විද්‍යාත්මක අධීක්ෂණ ක්‍රමවේද ක්‍රියාත්මක කළ යුතු බවත් ඔහු අවධාරණය කළේය.

ඔලුවිල් වරාය අත්හැරිය යුතු එකක් නොවේ. එය ආරක්ෂා කර, විද්‍යාත්මකව කළමනාකරණය කර, ජාතික සහ ප්‍රාදේශීය යහපත වෙනුවෙන් කාර්යක්ෂමව ක්‍රියාත්මක කළ යුතු බව I.A. කලීලූර් රහ්මාන් මහතා තම නිවේදනයේ සඳහන් කර ඇත.

26/05/2026

Divaina
2026/05/26
Page 9

26/05/2026

ஒலுவில் துறைமுகத்தை பாதுகாக்க வேண்டும்; அது பொருளாதார எதிர்காலத்தின் அடையாளம் – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

நூருல் ஹுதா உமர்

ஒலுவில் துறைமுகம் ஒரு சாதாரண உட்கட்டமைப்புத் திட்டமல்ல; அது இலங்கையின் பொருளாதார எதிர்காலம், சமூக நம்பிக்கை மற்றும் பிராந்திய அபிவிருத்தியின் அடையாளமாகும். சர்வதேச அஜந்தாக்கள் மற்றும் பிராந்திய ஆதிக்க சக்திகளின் புவிசார் அரசியல் நலன்களுடன் இணைந்த சில உள்நாட்டு அரசியல் ஒத்துழைப்புகள் மூலமாக ஒலுவில் துறைமுகத்தை செயலிழக்கச் செய்யும் முயற்சிகளுடன் சுற்றுலாத்துறையை பாதிப்படைய செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண மக்களின் நீண்டகால சமூக–பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அபிவிருத்திசார் சிந்தனைகளின் வெளிப்பாடாக ஒலுவில் துறைமுகத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் துறைமுகம் ஊடாக மீன்பிடித் தொழில் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் விரிவாக்கம், கடல்சார் சேவைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பொருளாதார வலுப்படுத்தல் போன்ற பல நோக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டிருந்தன.

தற்போது துறைமுகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் அண்மையில் நிந்தவூர் விஜயத்தின் போது கருத்து வெளியிட்டிருந்தார். குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகள் கடல் அரிப்பு மற்றும் மணல் தேக்கம் போன்ற தீவிர பிரச்சினைகளில் சிக்கியுள்ளன. இந்நிலையை முழுமையாக துறைமுகத்தோடு தொடர்புபடுத்தும் பார்வைகளும் சமூகத்தில் காணப்படுகின்றன. சரியான தொழில்நுட்ப அணுகுமுறை மற்றும் விஞ்ஞான திட்டமிடல் இன்றி துறைமுகம் அமைக்கப்பட்டதே இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர் போதுமான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் அடிப்படையிலான பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததாலும் பிரச்சினைகள் தீவிரமடைந்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொள்கைத் தொடர்ச்சியின்மை, நிர்வாக தாமதங்கள், பராமரிப்பு முதலீட்டு குறைபாடுகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி முன்னுரிமை மாற்றங்கள் ஆகியவையும் துறைமுகத்தின் முழுமையான செயற்பாட்டை பாதித்திருக்கின்றன என அவர் தெரிவித்தார்.

“கொழும்பில் உலகத் தரத்திலான துறைமுக நகரத் திட்டத்தை உருவாக்க முடிந்த ஒரு நாட்டில், ஒலுவில் துறைமுகம் ஏன் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை என்ற கேள்வி இன்று இயல்பாகவே எழுகிறது. அதற்கான காரணங்களை அரசியல் கோணத்தில் மட்டும் அல்லாது தொழில்நுட்ப, நிர்வாக, பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அடிப்படைகளிலும் ஆராய வேண்டியது அவசியமாகிறது” எனவும் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் நிந்தவூர் விஜயத்தின் போது மர்ஹூம் அஷ்ரப் தொடர்பாக முன்வைத்த கருத்துக்கள் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அஸ்ரப் அமைச்சர் ஆனதால் விஞ்ஞான ஆய்வோ தூரநோக்கோ இல்லாமல் ஒலுவில் துறைமுகம் கொண்டு வரப்பட்டது; அதன் விளைவாக கடலரிப்பு அதிகரித்துள்ளது” என்ற கருத்து முஸ்லிம் சமூகத்திலும், குறிப்பாக மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் பாரம்பரியத்தை மதிக்கும் மக்களிடையிலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ஒரு சமூகத்தின் அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்தின் பொருளாதார சுயநிறைவு மற்றும் அபிவிருத்தி நோக்கங்களையும் முன்னிறுத்திய தலைவராகவும், புலிப்பயங்கரவாதிகளுடன் இணைந்து முஸ்லிங்களை ஆயுதம் தூக்காமல் ஜனநாயக வழிக்கு வழிநடத்திய தலைவராகவும் நினைவுகூறப்படுகிறார். மட்டுமில்லாது தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் உள்ளிட்ட அவரின் பல திட்டங்கள் அந்த நீண்டகால அபிவிருத்தி சிந்தனைகளின் வெளிப்பாடுகளாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஒரு சிறிய கட்சியின் தலைவராக நீண்டகாலம் பாராளுமன்றத்தில் நிலைத்து நின்று பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்திருப்பதற்கான ஜனநாயக அரசியல் பாதையை இந்த நாட்டில் உருவாக்குவதில் மர்ஹூம் அஷ்ரப் போன்ற தலைவர்களின் பங்களிப்பும் மறுக்க முடியாததாகும்” என்றும் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒலுவில் துறைமுகம் தொடர்பாக சுயாதீன தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச தரப்படுத்தல்களுக்கேற்ப பராமரிப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். பிராந்திய மக்களின் பங்களிப்புடன் கூடிய வெளிப்படையான நிர்வாக முகாமைத்துவம் மற்றும் அறிவியல் கண்காணிப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒலுவில் துறைமுகம் கைவிடப்பட வேண்டியதல்ல; அது பாதுகாக்கப்பட்டு, விஞ்ஞான ரீதியாக முகாமைத்துவம் செய்யப்பட்டு, தேசிய மற்றும் பிராந்திய நலனுக்காக திறம்பட செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

26/05/2026

ஒலுவில் துறைமுகத்தை பாதுகாக்க வேண்டும்; அது பொருளாதார எதிர்காலத்தின் அடையாளம்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான
ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் !

ஒலுவில் துறைமுகத்தை பாதுகாக்க
வேண்டும்; அது பொருளாதார
எதிர்காலத்தின் அடையாளம்

📍📍📍📍📍📍📍📍📍📍

ஒலுவில் துறைமுகம் ஒரு சாதாரண உட்கட்டமைப்புத் திட்டமல்ல; அது இலங்கையின் பொருளாதார எதிர்காலம். சமூக நம்பிக்கை மற்றும் பிராந்திய அபிவிருத்தியின் அடையாளமாகும்.

சர்வதேச அஜந்தாக்கள் மற்றும் பிராந்திய ஆதிக்க சக்திகளின் புவிசார் அரசியல் நலன்களுடன் இணைந்த சில உள்நாட்டு அரசியல் ஒத்துழைப்புகள் மூலமாக ஒலுவில் துறைமுகத்தை செயலிழக்கச் செய்யும் முயற்சிகளுடன் சுற்றுலாத்துறையை பாதிப்படைய செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண மக்களின் நீண்டகால சமூக - பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அபிவிருத்திசார் சிந்தனைகளின் வெளிப்பாடாக ஒலுவில் துறைமுகத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தத் துறைமுகம் ஊடாக மீன்பிடித் தொழில் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் விரிவாக்கம், கடல்சார் சேவைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பொருளாதார வலுப்படுத்தல் போன்ற பல நோக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டிருந்தன.

தற்போது துறைமுகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் அண்மையில் நிந்தவூர் விஜயத்தின் போது கருத்து வெளியிட்டிருந்தார். குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகள் கடல் அரிப்பு மற்றும் மணல் தேக்கம் போன்ற தீவிர பிரச்சினைகளில் சிக்கியுள்ளன.

இந்நிலையை முழுமையாக துறைமுகத்தோடு தொடர்புபடுத்தும் பார்வைகளும் சமூகத்தில் காணப்படுகின்றன. சரியான தொழில்நுட்ப அணுகுமுறை மற்றும் விஞ்ஞான திட்டமிடல் இன்றி துறைமுகம் அமைக்கப்பட்டதே இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர் போதுமான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் அடிப்படையிலான பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததாலும் பிரச்சினைகள் தீவிரமடைந்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொள்கைத் தொடர்ச்சியின்மை, நிர்வாக தாமதங்கள், பராமரிப்பு முதலீட்டு குறைபாடுகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி முன்னுரிமை மாற்றங்கள் ஆகியவையும் துறைமுகத்தின் முழுமையான செயற்பாட்டை பாதித்திருக்கின்றன என அவர் தெரிவித்தார்.

“கொழும்பில் உலகத் தரத்திலான துறைமுக நகரத் திட்டத்தை உருவாக்க முடிந்த ஒரு நாட்டில், ஒலுவில் துறைமுகம் ஏன் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை என்ற கேள்வி இன்று இயல்பாகவே எழுகிறது.

அதற்கான காரணங்களை அரசியல் கோணத்தில் மட்டும் அல்லாது தொழில்நுட்ப, நிர்வாக, பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அடிப்படைகளிலும் ஆராய வேண்டியது அவசியமாகிறது” எனவும் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் நிந்தவூர் விஜயத்தின் போது மர்ஹூம் அஷ்ரப் தொடர்பாக முன்வைத்த கருத்துக்கள் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அஸ்ரப் அமைச்சர் ஆனதால் விஞ்ஞான ஆய்வோ தூரநோக்கோ இல்லாமல் ஒலுவில் துறைமுகம் கொண்டு வரப்பட்டது; அதன் விளைவாக கடலரிப்பு அதிகரித்துள்ளது” என்ற கருத்து முஸ்லிம் சமூகத்திலும், குறிப்பாக மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் பாரம்பரியத்தை மதிக்கும் மக்களிடையிலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ஒரு சமூகத்தின் அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்தின் பொருளாதார சுயநிறைவு மற்றும் அபிவிருத்தி நோக்கங்களையும் முன்னிறுத்திய தலைவராகவும், புலிப்பயங்கரவாதிகளுடன் இணைந்து முஸ்லிங்களை ஆயுதம் தூக்காமல் ஜனநாயக வழிக்கு வழிநடத்திய தலைவராகவும் நினைவுகூறப்படுகிறார்.

மட்டுமில்லாது தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் உள்ளிட்ட அவரின் பல திட்டங்கள் அந்த நீண்டகால அபிவிருத்தி சிந்தனைகளின் வெளிப்பாடுகளாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஒரு சிறிய கட்சியின் தலைவராக நீண்டகாலம் பாராளுமன்றத்தில் நிலைத்து நின்று பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்திருப்பதற்கான ஜனநாயக அரசியல் பாதையை இந்த நாட்டில் உருவாக்குவதில் மர்ஹூம் அஷ்ரப் போன்ற தலைவர்களின் பங்களிப்பும் மறுக்க முடியாததாகும்” என்றும் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒலுவில் துறைமுகம் தொடர்பாக சுயாதீன தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச தரப்படுத்தல்களுக்கேற்ப பராமரிப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.

பிராந்திய மக்களின் பங்களிப்புடன் கூடிய வெளிப்படையான நிர்வாக முகாமைத்துவம் மற்றும் அறிவியல் கண்காணிப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒலுவில் துறைமுகம் கைவிடப்பட வேண்டியதல்ல; அது பாதுகாக்கப்பட்டு, விஞ்ஞான ரீதியாக முகாமைத்துவம் செய்யப்பட்டு, தேசிய மற்றும் பிராந்திய நலனுக்காக திறம்பட செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Want your business to be the top-listed Government Service in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Maligawatte
Colombo