14/10/2026
ஒன்றாக இணைந்த இலங்கை! அனோஜனின் உயிர் காப்பாற்றப்பட்ட இந்த வேளையில்... 🇱🇰
மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த எங்களின் ஒரு இலங்கையனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, சாதி, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்றாக நிமிர்ந்து நின்றோம்.
சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது என்ற செய்தி, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவருக்காக அழுது, பிரார்த்தித்து, குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் விவரிக்க முடியாத அளப்பரிய மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்துள்ளது!
ஒரு மகனை இழந்துவிடுவோமோ என்ற மரண பயத்தில் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவித்த அந்த பெற்றோருக்கு, இந்த முடிவு வாழ்க்கையின் புதிய நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளது. இன்று அந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நாம் அனைவரும் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறோம்.
இலங்கை நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என அனைத்து சமூக மக்களும், வெவ்வேறு மத நம்பிக்கைகள் மற்றும் அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களும், துயரத்தில் தவித்த ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க தோளோடு தோள் நின்றார்கள். மனிதநேயம் நம்மை ஒன்றிணைத்தது; ஒரு சக இலங்கையனின் உயிரைக் காக்க வேண்டும் என்ற எங்களின் ஆதங்கக் குரல், எமது தாயக எல்லையையும் தாண்டி உலகம் முழுவதும் எதிரொலித்தது!
இத்தகைய இக்கட்டான சூழலில், தொடர்ச்சியான தூதரக, சட்ட மற்றும் மனிதாபிமான முயற்சிகளை மேற்கொண்ட எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், வெளிவிவகார அமைச்சு, சவூதி அரேபியாவிலுள்ள எமது தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இந்த வழக்கில் இரவு பகலாக உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுவினரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி மற்றும் ஹாஃபீல் பாரிஸ் ஆகியோருடன் இணைந்து செயற்பட்ட தூதுவர் அமீர் அஜ்வாத், ஜெனரல் நீதியரசர் முகமது லஃபார் மற்றும் உதவி செய்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக.
சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பிற்கும், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதநேய மிக்க தீர்ப்பிற்கும் எங்களது மரியாதைக்குரிய நன்றிகள்.
எங்களது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என அனோஜனின் நிலையைக் கூர்ந்து கவனித்து, அனைத்து வழிகளிலும் உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எல்லைகளைத் தாண்டிய சர்வதேசக் குரல்:
இந்த ஆதரவு இலங்கையோடு மட்டும் நின்றுவிடவில்லை! அனோஜனுக்காகத் தங்கள் குரல்களை உயர்த்திய இந்திய மக்களுக்கும், உலக நாடுகளின் சர்வதேச சமூகத்திற்கும், தொடர்ந்து குரல் கொடுத்த அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பிற்கும் எங்களது இதயப்பூர்வமான நன்றிகள்!
சிறப்பாக,நண்பர் ரஜீவ்காந் பல தடைகள், பல சவால்கள், பல இன்னல்கள், பல சூழ்ச்சிகளை தாண்டியும், தொடர்ந்தும் தாக்கப்படுத்ததற்கும், இந்த விடயத்தை தேசிய அளவில், உலக அளவில் கொண்டு சென்றதற்கும் எனது நன்றிகள் அனைவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எந்தப் பத்திரிகைச் செய்திகளிலும் பெயர்கள் வராத, பின்னணியில் நின்று உழைத்த ஒவ்வொரு நல்நெஞ்சங்களுக்கும் எமது நன்றிகள்.
சதிகளும் அரசியலும் தகர்க்கப்பட்ட வெற்றி:
அதேவேளையில், இந்த சோகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சிலர் அரசியல் ஆதாயம் தேடவும், விளம்பர உத்திகளைப் (Publicity Stunts) பயன்படுத்தவும் முயன்றார்கள். இன்னும் சிலர் இந்தத் துயரத்தைச் சாட்டாக வைத்து இனமோதலையும், சமூகப் பிரிவினையையும் தூண்டிவிடத் துடித்தார்கள். ஆனால், மக்கள் காட்டிய உண்மையான மனிதநேயத்திற்கு முன்னால் அந்தச் சதிகளும், அரசியல் சாயங்களும் முற்றாகத் தகர்த்தெறியப்பட்டு, தவிடுபொடியாக்கப்பட்டன!
யார் என்ன செய்ய நினைத்தாலும், எங்களின் இலங்கைச் சகோதரனின் உயிர் காப்பாற்றப்பட்டு, அவர் மீண்டும் உயிருடன் வாழ்வார் என்பதே இன்று எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! அதை நினைத்து நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
எமது தலைவர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியது போல, இது எமது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சு! இலங்கையர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசியதற்கான ஒரு சக்திவாய்ந்த உதாரணம்.
அனோஜன் இன்னும் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டு நாடு திரும்பவில்லை. எனவே, அவர் பாதுகாப்பாகத் தனது குடும்பத்திடம் வந்து சேரும் வரை எங்களது ஆதரவும் முயற்சிகளும் தொடரும்.
அனோஜனுக்காக நாம் ஒன்றாக இணைந்து நின்றோம். எமது இந்த ஒற்றுமையையும் மனிதநேயத்தையும், ஒவ்வொரு இலங்கையருக்குமான ஒரு சிறந்த நாடாக எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்பவும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்!
Mano Ganesan Anura Kumara Dissanayake Vijitha Herath Arun Hemachandra Ministry of Foreign Affairs - Sri Lanka Embassy of Sri Lanka in Saudi Arabia Rajkumar Rajeevkanth