23/10/2026
18 ஆண்டுகால பள்ளிவாசல் சேவைக்கு கௌரவம்: 70 வயதில் உம்ரா கனவை நனவாக்கிய தலைவர் ரிஷாட் பதியுதீன்….!
மழை, வெயில் பாராது, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிவாசலில் முஅத்தினாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் சம்மாந்துறையைச் சேர்ந்த 70 வயதுடைய எம். எம். ரஹீம் அவர்களுக்கு, புனித உம்ரா பயணத்தை மேற்கொள்வதற்கான அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்கள், தனது சொந்த நிதியில் இவ்வருடம் 40 பேருக்கு புனித உம்ரா பயண வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், பள்ளிவாசல் சேவையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டும் இதுவரை புனித ஹஜ் அல்லது உம்ரா பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில், எம். எம். ரஹீம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கான உம்ரா பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வு, இன்று (22) இஷா தொழுகையைத் தொடர்ந்து சம்மாந்துறை மிஸ்பாஹ் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதேவேளை, மாவடிப்பள்ளியைச் சேர்ந்த கண்பார்வையற்ற அல்-ஹாபிழ் அப்துல்லா அவர்களுக்கும், பொத்துவிலைச் சேர்ந்த நதீர் மௌலவி அவர்களுக்கும் புனித உம்ரா பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பை ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இது வெறும் பயண வாய்ப்பு மட்டுமல்ல; பல ஆண்டுகளாக உள்ளத்தில் சுமந்த ஆன்மிகக் கனவுக்கு உயிரூட்டும் உன்னதமான மனிதநேயப் பணி!
பள்ளிவாசல்களுக்காகவும் சமூகத்திற்காகவும் தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர்களின் சேவையை மதித்து, அவர்களின் புனிதக் கனவுகளை நனவாக்கும் இத்தகைய முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை.
சேவையை மதிப்போம்; தியாகத்தைப் போற்றுவோம்; ஆன்மிகக் கனவுகளை நனவாக்குவோம்!
உம்ரா பயண வாய்ப்பைப் பெற்ற அனைவரினதும் பயணங்களை இலகுவாக்கி, அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குவானாக!
இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். நயீம், சம்மாந்துறை இமாம்–முஅத்தின்கள் சம்மேளனத்தின் தலைவர் எம். எம். ஏ. ஜாபீர் மௌலவி , மிஸ்பாஹ் பள்ளிவாசலின் பேஸ் இமாம், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் மஹல்லாவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
deeen