NPP YOUTH PTK

Website

NPP YOUTH PTK வேகமாக செல்ல விரும்பினால் தனியாகச் செல்லுங்கள். ஆனால் வெகு தூரம் செல்ல விரும்பினால் ஒன்றாகச் செல்லுங்கள்.

#பிரஜாசக்தி
Lanka

நாட்டைக் கட்டியெழுப்பும் சோசலிச சங்க இளைஞர் மாநாடு - மன்னார் மாந்தை மேற்கு SYU SUMMIT❤️🚩
04/10/2026

நாட்டைக் கட்டியெழுப்பும் சோசலிச சங்க இளைஞர் மாநாடு - மன்னார் மாந்தை மேற்கு SYU SUMMIT❤️🚩

வாழ்த்துச் செய்திசிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பெறுமதியான பொக்கிஷம். அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாத்து, ...
01/10/2026

வாழ்த்துச் செய்தி

சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பெறுமதியான பொக்கிஷம். அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாத்து, முறையான வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும். சிறுவர்களின் கற்பனைத் திறன், எதிர்பார்ப்புகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை நாளைய நாட்டின் போக்கை தீர்மானிக்கின்றது. சிறுவர்களுக்காக நாம் கட்டியெழுப்பும் நாடானது, நாளைய தினம் அவர்களிடம் கையளிக்க இருக்கும் நாடு மட்டுமன்றி, இன்று அவர்களின் கனவுகளுக்கு இடமளிக்கும், அவர்களின் குரலை செவிமடுக்கும் மற்றும் அவர்களின் திறமைகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் நாடாகும்.
சிறுவர்களின் நலன்களை உறுதி செய்வதற்காக, அவர்களுக்குக் கல்விக்கான சம வாய்ப்பு, வழிகாட்டல், சமூகப் பாதுகாப்பு, விளையாட்டு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த விடயங்களில் வாய்ப்புகளை வழங்குதல், முறையான போஷாக்கு, சுகாதார சேவை வசதிகள், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் சிறுவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

சாதி, மதம், பொருளாதார நிலை, புவியியல் பின்னணி அல்லது வேறு எந்தவொரு காரணமும் எந்தவொரு சிறுவரின் கல்விக்கும் அல்லது சீரான வளர்ச்சிக்கும் தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு பிள்ளையும் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனது கனவுகளை அடைந்து, தான் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கு சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அதற்காக, இந்நாட்டின் கல்வியை ஒரு புதிய மாற்றத்திற்கு உட்படுத்தி, பெற்றோருக்குச் சுமையாகவும் பிள்ளைகளுக்குத் துன்பமாகவும் இல்லாத, நவீன உலகிற்குப் பொருத்தமான திறன் அடிப்படையிலான கல்வி முறைக்கான மறுசீரமைப்புச் செயற்பாட்டை நாம் ஏற்கனவே தொடங்கியுள்ளோம்.

நாம் கட்டியெழுப்பும் புதிய இலங்கையில் எந்தவொரு பிள்ளையையும் கைவிடாமல், அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பான சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உறுதி செய்வதே எமது நோக்கமாகும். கல்விக்கான புலமைப்பரிசில்களை விரிவுபடுத்துவது முதல், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வளரும் மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது வரை செயற்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களினதும் அடிப்படை நோக்கம், நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பெருமைமிக்க மற்றும் பாதுகாப்பான நாளைய தினத்தை உருவாக்குவதாகும் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

தான் முகங்கொடுத்த வாழ்க்கையை விடச் சிறந்ததொரு வாழ்க்கை நிலையைத் தமது பிள்ளைகளுக்கு உரித்தாக்கிக் கொடுப்பது அனைத்துப் பெற்றோரினதும் எதிர்பார்ப்பாகும். நிலையற்ற பொருளாதாரத்தின் பாதிப்புக்களற்ற , பாதுகாப்பான மற்றும் அழகான சிறுவர் பருவத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக, நாம் தற்போது நாட்டின் பொருளாதாரத்தைச் சரியான மற்றும் நிலையான திசையை நோக்கி கொண்டு செல்கிறோம். அதேபோல், போதைப்பொருட்களில் இருந்து இளம் சந்ததியைப் பாதுகாப்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

சிறுவர்களுக்காக பாதுகாப்பான மற்றும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பும் உயரிய நோக்கத்துடன் செயற்பட்டுவரும் இத்தகைய வேளையில், “ திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” என்ற கருப்பொருளின் கீழ் தேசிய சிறுவர்கள் தின வாரத்தைப் பிரகடனப்படுத்தி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் சிறுவர்களின் உரிமைகள், நல்வாழ்வு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுதந்திரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளுடன் இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையை நான் பாராட்டுகிறேன். நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் எனது மகிழ்ச்சிகரமான சிறுவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

29/09/2026

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காகவும் 112 புதிய மெட்ரோ பஸ்கள் இன்று முதல் சேவையில்

மெட்ரோ பஸ் சேவையை ஸ்தாபிப்பதற்காக அரசாங்கம் 7.5 பில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடையாளமாகும்.

- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், மேல் மாகாணத்தில் உள்ள 7 வீதிகளின் ஊடாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 112 மெட்ரோ பஸ்களை சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (29) முற்பகல் தலங்கம மெட்ரோ பஸ் டிப்போ வளாகத்தில் இடம்பெற்றது.

நவீன மெட்ரோ பஸ் சேவையை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கையின் பொதுப் போக்குவரத்து துறைக்கு நவீன பஸ் சேவையை அறிமுகப்படுத்துவதற்காக வசதியான தாழ்தள 100 பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கமைய, நாட்டை வந்தடைந்த 104 பஸ்களும், ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 08 பஸ்களும் இன்று முதல் இவ்வாறு சேவையில் இணைக்கப்பட்டன.

இந்தப் புதிய பஸ்கள் கொழும்பை மையமாகக் கொண்ட 7 வீதிகளின் ஊடாக இயக்கப்படுவதுடன், பயணிகள் குறிப்பிட்ட வீதிகள் மற்றும் நேர அட்டவணைகளின்படி தங்களது செல்லிடங்களை சென்றடையும் வகையில் சேவைகள் செயற்படுத்தப்படும்.

கொழும்புக்குள் பிரவேசிக்கும் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் குறிப்பாக ஒருவர் மட்டும் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் இந்தப் புதிய பஸ் சேவையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கமாகும்.

குறித்த பரிந்துரையை யதார்த்தமாக்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனம் (LANKA METRO TRANSIT PVT), தற்போது திட்டமிடல், கொள்முதல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பரிசோதனை செயற்பாட்டு கட்டங்கள் ஊடாக முன்னேற்றங்களை எட்டியுள்ளது. அதற்கமைய, ஆரம்பகட்ட மெட்ரோ பஸ் வீதி வலையமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதோடு , அது 7 பிரதான வீதிகளை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட உள்ளதோடு முழு வீதி அணுகளின் நீளம் சுமார் 188.7 கி.மீ. ஆகும்.

மேலும், மெட்ரோ பஸ் பயணங்களுக்குத் தேவையான முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் கட்டமைப்புத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதன் கொள்முதல் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டமைப்பின் ஊடாக நவீன பஸ் முகாமைத்துவம் , பயணிகளின் தகவல், கட்டண அறவீடு மற்றும் செயற்பாட்டுக் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு ஒத்துழைப்புப் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு இணையாக, மெட்ரோ பஸ் டிப்போக்களுக்கான திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றின் ஊடாக பஸ் நிலைய வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் இத்திட்டம் இலங்கையின் பல முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இங்கு உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க:
இன்று முதல் நகர்ப்புற போக்குவரத்திற்காக 112 பஸ்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் இணைக்கப்படுகின்றன. இந்த அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில், இந்நாடு பயணிக்கும் திசையைக் காட்டும் ஒரு குறியீடாக இந்த நிகழ்வை அடையாளப்படுத்த விரும்புகிறேன்.

இந்நாட்டின் இலவச சுகாதார சேவை மற்றும் கல்விச் சேவை ஆகியவற்றிற்கு சமமான மட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவையையும் உயர்த்த வேண்டும் என்று கடந்த நாட்களில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார். அவரின் அந்த ஊக்குவிப்பு இன்று இந்த நடவடிக்கைக்கான பாரிய சக்தியாக அமைந்துள்ளது.

மெட்ரோ சேவையை நிறுவுவதற்காக அரசாங்கம் சுமார் 7.5 பில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஒரு புறம் இது நாட்டின் பொருளாதார பலத்தின் அடையாளம் என்றும் கூற வேண்டும். இந்த அரசாங்கத்தின் 2 ஆண்டுப் பயணத்தின் லிட்மஸ் பரிசோதனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த வேலைதிட்டத்திற்காக நாம் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தையே எடுத்துக்கொண்டோம். 356 நாட்கள் போன்ற காலப்பகுதிக்குள் அனைத்து சுற்றறிக்கைகளையும் பின்பற்றி நாம் ஒரு பெரிய சவாலை வென்றுள்ளோம்.

சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 50 பஸ்களைக் தருவித்து யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி நகரங்களில் சேவையில் ஈடுபடுத்தவும் எதிர்பார்க்கிறோம். நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தை அடைவதற்காக மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும்போது, நகர்ப்புற போக்குவரத்து அனுமதிப் பத்திர முறையைப் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு இதில் தனியார் துறையையும் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறோம். அத்துடன் Park & Ride முறையை மேம்படுத்துவதற்காக, தொடர்புடைய பஸ் தரிப்பிடங்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவதற்குப் பொருத்தமான இடங்களை அமைத்துத் தருமாறு நகராதிபதிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

மேலும், இந்த பஸ் திட்டத்தைத் தொடங்குவதற்காக 8 பஸ்களை வழங்கி ஜப்பான் அரசாங்கம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. அதேபோல் ஜனாதிபதி சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக, மெட்ரோ நிறுவனத்திற்கு 100 பஸ்களை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் உட்பட, இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் தெரிவித்தார்.

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, , கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ஆசிறி கருணாவர்தன, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன உட்பட அரச அதிகாரிகளும், லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.யு.பி. திலகரத்ன, பிரதம நிறைவேற்று அதிகாரி பி.எம். பியதிலக்க மற்றும் அதன் ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-09-29

29/09/2026
இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலமானது, நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ...
24/09/2026

இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலமானது, நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்துவதுடன், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

​நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நீண்டகாலமாகக் தேங்கிக்கிடப்பதன் காரணமாக, அனுபவமிக்க நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீட்டிப்பதன் மூலமும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் வழக்கு விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடியும் என்பது அரசாங்கத்தின் பிரதான வாதமாகும்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை முறைப்படி நடைமுறைப்படுத்துவதற்கும், சட்ட கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்கும் இச்சீர்திருத்தம் அவசியமானது எனக் குறிப்பிடப்படுகின்றது.

​இருப்பினும், ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது மட்டுமே வழக்குத் தேக்கநிலைக்கு முழுமையான தீர்வாக அமையாது என்றும், நிறைவேற்று அதிகாரத்தின் நலன்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவே இவ்வாறான அவசரத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சிகளும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் (BASL) குற்றஞ்சாட்டுகின்றன. இது நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனச் சில சர்வதேச சட்ட அமைப்புகளும் கவலை வெளியிட்டுள்ளன.

​இதனிடையே, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்பு செல்லுபடித் தன்மை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உச்சநீதிமன்றம், இதற்கு மக்கள் தீர்ப்பு அல்லது சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) அவசியமில்லை என்றும், நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் (மூன்றில் இரண்டு) நிறைவேற்றப்பட முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

​

ரூபா 70 மில்லியன் தொகையை மூன்று சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு இலஞ்சமாக வழங்கியதாகக் கூறப்பட...
24/09/2026

ரூபா 70 மில்லியன் தொகையை மூன்று சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு இலஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்

Address

PTK
Puthukkudiyiruppu
41000

Alerts

Be the first to know and let us send you an email when NPP YOUTH PTK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share