ATR YOUTH CLUB puluthivayal

Website

ATR YOUTH CLUB puluthivayal OFFICIAL PAGE

புழுதிவயல் பாடசாலை மைதானத்திற்கான அதிகார பூர்வமான உறுதியை பெற்றதுடன்,  மத்திய அரசாங்கம் மற்றும் பிரதேச சபை மூலம் பல லட்ச...
16/06/2026

புழுதிவயல் பாடசாலை மைதானத்திற்கான அதிகார பூர்வமான உறுதியை பெற்றதுடன், மத்திய அரசாங்கம் மற்றும் பிரதேச சபை மூலம் பல லட்சங்கள் பெறுமதியான ஒதுக்கீடுகளை கொண்டு வந்து மைதானத்தை புனரமைத்தமையுடன், ATR கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஆரம்பத்திலிருந்து எம்மோடு கைக்கோர்த்தது,

மைதான புனரமைப்பையும் தலைமைத்தாங்கி செய்து தந்தமைக்காக ஜெசீம் ரஹ்மான் அவர்களுக்கு எமது கழகம் சார்பாக இன்று (16) நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

31/05/2026 அன்று ஏற்பட்ட சில இடையூறுகள் காரணமாக இது மேடையில் வழங்கி வைக்க முடியாமல் போனதையும் குறிப்பிட்டுக்கொள்கின்றோம்.

ATR கழகம்.

#கிராமியஅபிவிருத்தி

புளுதிவயல் ATR கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மைதான புணரமைப்புப் பணிகளுக்காகவும், நடைபெற்ற விளையாட்டு,மோட்டார் பந்தைய ந...
16/06/2026

புளுதிவயல் ATR கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மைதான புணரமைப்புப் பணிகளுக்காகவும், நடைபெற்ற விளையாட்டு,மோட்டார் பந்தைய நிகழ்வுகளுக்காகவும் தங்களின் மேலான ஒத்துழைப்பையும், நிதி மற்றும் உழைப்பு ரீதியான பங்களிப்பையும் வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது உறவுகளான உங்களின் இந்த அர்ப்பணிப்பும், ஆதரவும் எமது ஊர் இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் பெரும் உந்துசக்தியாக அமைந்தது.

உங்களைப் போன்றவர்களின் உதவியால் எமது மைதானம் ஒரு சிறந்த விளையாட்டுத் தளமாக உருவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் இந்தத் தாராளமான உதவிகள் என்றும் எமது கழகத்தின் ஊடாக ஊரில் நாம் எதிர்காலங்களில் மேற்கொள்ளவிறுக்கும் நல்ல திட்டங்களுக்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் தொடர்ந்தும் கிடைக்கப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, உங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் பொருளாதார செழிப்பையும் இறைவன் தாங்களுக்கு வழங்க வேண்டுமென பிரார்த்தனை செய்கின்றோம்.

நன்றி
ATR கழகம்

புழுதிவயலில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற 'Hajju Festival Event 2026', நமது இளைஞர்களின் பல ஆண்டுகாலக் கனவு மற்றும் அயராத உழை...
08/06/2026

புழுதிவயலில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற 'Hajju Festival Event 2026', நமது இளைஞர்களின் பல ஆண்டுகாலக் கனவு மற்றும் அயராத உழைப்பின் வெளிப்பாடு. பல சவால்களைத் தாண்டி, இந்த நிகழ்வை இவ்வளவு பிரம்மாண்டமாகவும் வெற்றிகரமாகவும் மாற்றியதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு எங்களை ஊக்கப்படுத்திய ஊர் பெரியவர்கள், சகோதரர்கள் மற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாக, இந்த நிகழ்வைச் சிறப்பாக திட்டமிட்டு, களத்தில் இறங்கிச் சிறப்பாகச் செயல்படுத்திய ATR Youth Club மற்றும் Puluthivayal Racing Club உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். உங்கள் கூட்டு முயற்சியே இந்த வெற்றியின் அடித்தளம்.
இந்தப் பரிசளிப்பு நிகழ்வில் வெற்றி பெற்ற அனைத்துப் போட்டியாளர்களுக்கும் எமது வாழ்த்துகள்.
வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல, பங்கேற்ற ஒவ்வொரு வரும் இன்று வெற்றியாளர்தான்.
இந்த அழகிய தருணங்களைப் புகைப்படங்களாகப் பதிவு செய்து தந்த FinePix Studio நிறுவனத்திற்கும் எமது நன்றிகள்.
இப்படியே என்றும் ஒற்றுமையுடன் நம் ஊரின் முன்னேற்றத்திற்காகப் பயணிப்போம்.
அனைவருக்கும் நன்றி! 🙏✨"

Organized By ATR YOUTH CLUB puluthivayal and ATR RACING CLUB puluthivayal
Photos By FinePix Studio


ATR YOUTH CLUB puluthivayal FinePix Studio

07/06/2026
07/06/2026

Address

601/A
Puttalam
61280

Alerts

Be the first to know and let us send you an email when ATR YOUTH CLUB puluthivayal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category