15/01/2023
அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது சம்மாந்துறை ஒன்றினைந்த பட்டதாரிகள் சமூக சேவை அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலானது 15.01.2023ஆம் திகதி சம்மாந்துறை உடங்காவில் அமைந்துள்ள LTA Garden இல் தலைவர் MFM. றசீன் அவர்களின் தலைமையில் சக அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் விமர்சையாக இடம்பெற்றது. இவ்வருடாந்த ஒன்றுகூடலில் எமது அங்கத்தவர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். அதுமாத்திரமன்றி நாம் எமது அமைப்பின் திட்டங்கள், நடைமுறைகள் பற்றி ஆராய்ந்ததுடன் எதிர்வரும் காலங்களில் எம்மால் ஆற்றப்படவேண்டிய பல சமூக சேவைத் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினோம்.
