KCSA

KCSA

Share

-Kattankudy Community in Saudi Arabia-
-சவூதி அரேபியா வாழ் காத்தான்குடி சமூகம்-

16/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (1st of May,2026) அன்று காத்தான்குடி மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த, சவூதி அரேபியாவில் வாழுகின்ற எமது உறவுகளின் ஒன்று கூடல் நிகழ்வு றியாத் நகரில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

எனவே இவ்வொன்று கூடல் நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சவூதி வாழ் கத்தான்குடி சகோதரர்கள் தமது வரவை உறுதிப்படுத்த கீழ்க்காணும் படிவத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24th April, 2026 திகதிக்கு முன்னதாக பூர்த்தி செய்யவும்.

📅 Date: 1st of May, 2026

🕕 Time: 09:00 AM

📍 Location: 👇🏻
https://maps.app.goo.gl/yBWrSJwv2vb5nuTy8?g_st=iwb

Registration Link: 👇🏻
https://forms.gle/JAQgDgR6R6gdnUmp8

31/03/2026

Congratualtions Farthan 👏

23/12/2025

“எமது சகோதரிகளுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பான ஒரு அடைக்கலம் - நமது சிறு ஆதரவு, அவர்களின் பெரிய நம்பிக்கை.”

நமது காத்தான்குடி Women Safe Home அமைப்பு, தங்களுக்கான புதிய கட்டிடத்தை அமைப்பதற்காக ஒரு நிலத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அவர்கள் KCSA அமைப்பின் ஆதரவை கோரியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, Women Safe Home அமைப்பின் விவரங்களை இங்கு பகிர்ந்து, நமது சமூகத்தினர் அவர்களுக்கு இயன்ற ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மறுமையில் அதிக நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய இந்த சதகத்துல் ஜாரியா முயற்சியில் பங்கு கொள்ள விரும்புபவர்கள், Women Safe Home அமைப்பை நேரடியாக தொடர்பு கொண்டு உதவலாம்.

ஜஸாக்கல்லாஹ்.

13/12/2025

KCSA இன் மற்றுமொரு மனித நேயப் பணி

இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் சஊதி அரேபியாவின் இலங்கைத் தூதரகத்தின் வேலைத்திட்டத்தில் சஊதி வாழ் காத்தான்குடி சமூகமும் இணைந்து தனது பங்களிப்பை இலங்கைத் தூதுவர் His Excellency OL Ameer Ajwad அவர்களிடம் இன்று (13.12.2025) கையளித்தது.

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது தூய பணிகளை அங்கீகரிப்பானாக! ஆமீன்.

https://www.facebook.com/share/p/1DGnddtp5w/?mibextid=wwXIfr

Kattankudy Community in Saudi Arabia Makes Financial Contribution to Ditwah Relief Efforts in Sri Lanka

The Kattankudy Community in Saudi Arabia (KCSA) made a financial contribution towards the post-Ditwah relief operations currently underway in Sri Lanka. Responding to an initiative by the Embassy of Sri Lanka in Riyadh to support the Ditwah victims, representatives of the KCSA handed over a token financial contribution amounting to around LKR one million to the Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad, on 13 December 2025 at the Embassy premises in Riyadh.

While expressing his sincere appreciation for KCSA’s exemplary gesture in mobilizing members of their community in Saudi Arabia to rise to the occasion, Ambassador Ameer Ajwad conveyed his gratitude to each and every member of the KCSA who contributed to this worthy cause, reflecting their commitment to the nation-building process in the aftermath of the devastating natural disaster.

First Secretary of the Embassy, Vindana Munasinghe, was also present at the handing-over ceremony.

Embassy of Sri Lanka
Riyadh
13.12.2025

සෞදි අරාබියේ වෙසෙන කාත්තන්කුඩි ප්‍රජාව ශ්‍රී ලංකාවේ දිට්වා සහන කටයුතු සඳහා මූල්‍යමය දායකත්වයක් ලබා දෙයි

ශ්‍රී ලංකාවේ දැනට ක්‍රියාත්මක වන දිට්වා ආපදා සහන සැලසීම වෙනුවෙන් සෞදි අරාබියේ කාත්තන්කුඩි ප්‍රජාව (KCSA) මූල්‍යමය දායකත්වයක් ලබා දුන්නේය. දිට්වා හේතුවෙන් විපතටපත් ජනතාවට සහය වීම සඳහා රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් කරන ලද මුලපිරීමකට ප්‍රතිචාර වශයෙන්, KCSA නියෝජිතයින් 2025 දෙසැම්බර් 13 වන දින රියාද් හි තානාපති කාර්යාල පරිශ්‍රයේදී සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් වෙත රුපියල් මිලියනයක පමණ සංකේතාත්මක මූල්‍යමය දායකත්වයක් භාර දුන්නේය.

සෞදි අරාබියේ තම ප්‍රජාවේ සාමාජිකයින් මෙම අවස්ථාවට එක්වීම සඳහා බලමුලු ගැන්වීමේදී KCSA විසින් සිදු කරන ලද ආදර්ශමත් ක්‍රියාව සඳහා අවංක කෘතඥතාව පළ කරමින්, විනාශකාරී ස්වාභාවික ව්‍යසනයෙන් පසු ජාතිය ගොඩනැගීමේ ක්‍රියාවලියට ඔවුන්ගේ කැපවීම පිළිබිඹු කරමින් මෙම වටිනා කාර්යයට දායක වූ KCSA හි සෑම සාමාජිකයෙකුටම තානාපති අමීර් අජ්වාඩ් සිය කෘතඥතාව පළ කළේය.

තානාපති කාර්යාලයේ පළමු ලේකම් වින්දන මුණසිංහ මහතා ද මෙම උත්සවයට සහභාගී විය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.12.13

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தித்வா அனர்த்த நிவாரண பணிகளுக்காக சவுதி அரேபியா வாழ் காத்தான்குடி அமைப்பினரின் நிதிப் பங்களிப்பு

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தித்வா அனர்த்தத்தின் பின்னரான நிவாரண செயற்பாட்டு பணிகளுக்காக சவுதி அரேபியாவில் வாழும் காத்தான்குடி அமைப்பினர் (KCSA) நிதிப் பங்களிப்பினை வழங்கினர். தித்வா அனர்த்த த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் முன்னெடுத்து வரும் நிவாரண உதவிகளை திரட்டும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் காத்தான்குடி அமைப்பின் பிரதிநிதிகள், சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் கௌரவ அமீர் அஜ்வத் அவர்களிடம் ஒரு மில்லியன் ரூபாய்களை நன்கொடையாக கையளித்தனர். இந்நிகழ்வு கடந்த 2025 டிசெம்பர் 13 ஆம் திகதி ரியாத் இலங்கை தூதரக வளாகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவசர சூழ்நிலைகளின் போது முன்வந்து உதவும் வகையில் தமது அமைப்பு சார்ந்த அங்கத்தவர்களை ஒன்றிணைத்து பங்களித்த கேசீஎஸ்ஏ (KCSA) அமைப்பின் முன்மாதிரியான செயலை பாராட்டி நன்றிகளை தெரிவித்த கௌரவ தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், இயற்கை அனர்த்த பாதிப்புகளின் பின்னரான தேசத்தை கட்டியைழுப்பும் செயன்முறைக்கான தமது ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் மேற்குறித்த மகத்தான பணிக்காக பங்களித்த காத்தான்குடி அமைப்பின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் தனது மனப்பூர்வமான நன்றிகளை கௌரவ தூதுவர் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில், தூதரக முதல் செயலாளர் விதான முனசிங்ஹ அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இலங்கை தூதரகம்
ரியாத்
13.12.2025


قدمت جالية كاتانكودي (القحطان) في المملكة العربية السعودية مساهمة مالية لمبادرة الإغاثة من كارثة "إعصار ديتواه" في سريلانكا.

قدمت جالية كاتانكودي في المملكة العربية السعودية (KCSA) مساهمة مالية لدعم مشروعات الإغاثة الجارية في سريلانكا عقب كارثة "إعصار ديتواه". واستجابة لمبادرة سفارة سريلانكا في الرياض لدعم ضحايا "ديتواه"، تم تسليم مساهمة مالية من قبل ممثلو الجالية بقيمة المبلغ قدره مليون روبية سريلانكية تقريبا إلى سعادة سفير سريلانكا لدى المملكة العربية السعودية، أمير أجود، بتاريخ 13 ديسمبر 2025 في مقر السفارة بالرياض.

وأعرب السفير أمير أجود عن تقديره الوافر لهذه المبادرة الرائعة من جالية كاتانكودي في المملكة العربية السعودية، والتي حشدت أفرادها للمساهمة في هذه الجهود، كما عبر عن امتنانه لكل فرد من أفراد الجالية الذين ساهموا في هذا المبادرة النبيلة، مما ييظهر التزامهم ببناء الوطن في أعقاب هذه الكارثة الطبيعية المدمرة.

حضر هذا الحدث السيد. ويندانا موناسينها، السكرتير الأول في السفارة.

سفارة سريلانكا
الرياض
13.12.2025



Public Diplomacy MFA Sri Lanka Ministry of Foreign Affairs - Sri Lanka

01/12/2025

இலங்கை வெள்ள அனர்த்த முதற்கட்ட நிதி உதவி -2025

KCSA நிறுவனத்தின் அனர்த்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்டமாக, இலங்கையில் நிவாரணப் பணிகளில் முனைப்புடன் செயற்பட்டு வரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு
LKR 300,000 வழங்கி வைக்கப்பட்டது.

இதற்காக பங்களிப்புச் செய்த அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

08/11/2025

சவூதிஅரேபியா வாழ் காத்தான்குடி சமூகத்தின் (KCSA) மற்றுமொரு சமூக நேயப்பணி.

சவூதிஅரேபியா வாழ் காத்தான்குடி சமூகம் (KCSA), தேவையுடைய மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்குவதற்காக YESDO நிறுவனத்திற்கு ஒரு தொகை பணத்தினை அண்மையில் (02 November 2025) அன்பளிப்பாக வழங்கிவைத்தது.

எமது தூய பணிகளை வல்ல இறைவன் அங்கீகரிப்பானாக!

Photos from KCSA's post 27/10/2025

காத்தான்குடியின் தேசிய பாடசாலைகளான மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மீரா பாலிகா மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபரும், சமூக சேவையாளருமான MCMA சத்தார் B.Com அவர்கள் கடந்த சனிக்கிழமை (25.10.2025) ரியாத் நகருக்கு வருகை தந்திருந்தார்கள்.

அவரை மரியாதை நிமித்தமாக KCSA அமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர் .

அவரது கல்வி மற்றும் சமூகப் பணி குறித்து அனைவரும் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர்.

26/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும்.

KCSA அமைப்பினுடைய 2025/2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையின் முதலாவது கூட்டம் 23 அக்டோபர் 2025 அன்று ரஜா பாக்கில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் உற்சாகமாக கலந்து கொண்டு, எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.

இன்ஷா அல்லாஹ், உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் பல சிறப்பான திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க KCSA அமைப்பு எதிர்பார்க்கின்றது.

மேலும், சவுதி அரேபியாவில் வசிக்கும் காத்தான்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த எமது சகோதரர்கள் ஒன்றிணைக்க கீழே உள்ள Google Form-ஐ பூர்த்தி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 👇

🔗 Google Form Link:

https://forms.gle/4MKqDsgqPtUDMvX36

ஜஸாகுமுல்லாஹு கைரன்
வஸ்ஸலாம்

Photos from KCSA's post 12/10/2025

KCSA இன் 6வது ஒன்று கூடல் கடந்த வெள்ளிக் கிழமை 10-10-2025 அன்று றியாத் நகரில் இடம்பெற்றது.

100 உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்களின் பங்குபற்றுதல்களுடன் இடம்பெற்ற இவ் ஒன்று கூடல் நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் His Excellency O.L. Ameer Ajwad அவர்களும், Minister / Head of Chancery Embassy of Sri Lanka, Mr. Mohamed Anas, அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இவ் ஒன்று கூடலின் விசேட நிகழ்வாக அடுத்த ஆண்டிற்கான (2025 / 2026) புதிய நிர்வாகத் தேர்வு இடம்பெற்றது.

புதிய நிர்வாகத் தேர்வினைத் தொடர்ந்து இடம்பெற்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் பின்னர் இராப்போசன நிகழ்வுடன் இவ் ஒன்று கூடல் நிறைவு பெற்றது.

04/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி வெள்ளிக்கிழமை (10.10.2025) அன்று காத்தான்குடி மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சவூதி அரேபியாவில் வாழும் எமது உறவுகளின் ஒன்று கூடல் நிகழ்வொன்று றியாத் நகரில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் ஒன்றுகூடலின் விஷேட விருந்தினராக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் His Excellency OL Ameer Ajwad அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

எனவே இவ்வொன்று கூடல் நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சவூதி வாழ் காத்தான்குடி சகோதரர்கள் தமது வரவை உறுதிப்படுத்த கீழ்க்காணும் படிவத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 07.07.2025 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யவும்.

https://forms.gle/AtEkQvd4DoQZcE416

Want your business to be the top-listed Government Service in Riyadh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Riyadh