ஒரு மனிதனுக்கு மோசமான துரோகம் எதுவென்றால்....
பிறரிடம் நம்மைப் பற்றி மோசமாக தவறாக சித்தரித்து விட்டு நல்லவனை போல் நம்மிடம் இருப்பது தான்....!!!!!
Riyas Hasan Ahamed
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Riyas Hasan Ahamed, Akkaraipattu.
#தொழில்நுட்பக்_கல்லூரி
#அக்கரைப்பற்று
க. பொ. த. சா/ த பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான #ஆங்கில பாட நெறி ஆரம்பம்
தனியார் நிறுவனங்களின் #போலிகள் பின்னால் சென்று காலத்தை வீணாக்க வேண்டாம்.
அரச நிறுவனத்தில் இணைந்து பெறுமதியான சான்றிதழை பெறுவோம்.
தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் பிரிவு
067 22 79 865, 067 22 79 602
MK Ahmed Ziyad
04/06/2022
ஏழையின் வறுமைக் கோடுகள் கையில் மட்டுமல்ல...
சுருங்கிய அவர்களது வயிற்றிலும் தெரிகிறது.
இவர்களிடம் வாகனம் அல்ல பிரச்சனை,
அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வது என்பதே.😢
எந்த சூழ்நிலையிலும் தளராத உள்ளம் கொண்டவனுக்கு இந்த உலகில் முடியாது என்று எந்த விடயமும் இல்லை✍️
இளைஞர்கள் முன்னேற்றம் என்பது அடிப்படையில் இரண்டு முக்கிய இலக்குகளைக் கொண்டது. அவை,
👉அக முன்னேற்றம்
👉புற முன்னேற்றம்
ுன்னேற்றம்
இது இளைஞர்களின் தனித் திறமை சார்ந்தது. ஒரு செயலை மேற்கொள்வதற்கான தனி நபர் திறன்களை வளர்த்தல் மற்றும் முறையாகச் செயல்படுத்துதல்.
#புற_முன்னேற்றம்
இது பொது நிலையில் சமூக மேம்பாடு கருதி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுதல் சார்ந்தது. குடும்பம், சமூகம், நாடு, மக்கள், வளர்ச்சி, மாற்றம் போன்றவற்றில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றல்.
மேலும் பிறரைப் புரிந்து கொள்ளுதல், சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணுதல், உறுதியான முடிவெடுத்தல், பாதிப்புகளை உள்வாங்குதல் போன்ற திறன்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இன்றைய இளைஞர்கள் இந்தியாவை வல்லரசாக கட்டியெழுப்பும் திறமை படைத்தவர்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனை நிறைவேற்றுவது என்பது அவர்களின் எண்ணங்கள், பண்புகள், ஈடுபாடுகள், செயலாற்றும் முறைகள், மன உறுதி ஆகியவற்றைப் பொருத்ததாகும்.
* அச்சம் தவிர்*
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
நெப்போலியன் பிரெஞ்சு மாகாணத்தின் பிரபலமான பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார்.
போதுமான அளவு கல்வியறிவு எட்டவில்லை என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்தவனாக இருந்து வந்தார்.
அப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் அருகில் இருக்கும் மாணவனின் பொருள் ஒன்று காணாமல் போய்விட்டது.
அதை நெப்போலியனை தவிர வேறு யாரும் எடுத்திருக்க முடியாது என்று யூகித்த அந்த மாணவன், உடனடியாக ஆசிரியரிடம் நெப்போலியன் திருடியதாக கூறினான்.
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அந்த ஆசிரியர், நெப்போலியனை தனி அறைக்கு அழைத்துச் சென்று, பிரம்பால் எவ்வளவு அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு அவரை அடித்து விட்டார்.
நெப்போலியன், ஆசிரியர் அடித்த அடிகளை தாங்கிக் கொண்டு அமைதியாக வெளியே வந்தார்.
அடுத்த நாளில் அந்த மாணவனின் பொருள் அவனுக்கு கிடைத்துவிட, நெப்போலியன் திருடவில்லை என்பதை அந்த ஆசிரியரிடம் வந்து அந்த மாணவன் கூறினார்.
உடனே அந்த ஆசிரியர் நெப்போலியனை அழைத்து, “நீ திருடவில்லை என்பதை நான் அடிக்கும் போது என்னிடம் கூறியிருக்கலாம் அல்லவா..?
தேவையில்லாமல் அடிவாங்கி இருக்க மாட்டாய்..” என்று சற்று வருத்தத்தோடு கூறினார்.
அதற்கு நெப்போலியன், “நீங்கள் அடிப்பதற்கு முன்னரே என்னிடம் அதை பற்றி கேட்டிருந்தால், நான் எடுக்கவில்லை என்று கூறியிருப்பேன். ஆனால் நீங்கள் அடிக்கும் பொழுது கேட்டதால் நான் ஒன்றும் சொல்லவில்லை.
ஒருவேளை நீங்கள் அடிக்கும் பொழுது நான் திருடவில்லை என்று கூறியிருந்தால் நான் பயந்துபோய் பொய் சொல்கிறேன் என்று நினைத்திருப்பீர்கள்.
நான் பயந்து விட்டேன் என்று கூட யாரும் நினைக்கக் கூடாது. அதுதான் எனக்கு வலிக்குமே தவிர, நீங்கள் அடிப்பது ஒன்றும் எனக்கு வலிக்காது” என்று பட்டென்று கூறினார் நெப்போலியன்.
இந்த அஞ்சாத குணம் தான் அவரை ஐரோப்பாவையே ஆள வைத்தது.
அச்சம் தவிர்
மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து அவர்களின் பிரச்சினைக்களுக்கு தீர்வு கானுபவனே உண்மையான தலமைத்துவம் ✍️
இன்று சாதாரண தர பரிட்சை முடிந்ததை தொடர்ந்து பல தகுதியற்ற தனியார் கல்லூரி நிறுவனங்கள் தற்போதைய இளைஞர்களை மூளைசலவை செய்து அவர்கள் பணம் உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் களம் இறங்கி உள்ளார்கள்... அவர்களின் நிறுவனத்தை விளம்பரம் செய்வதற்கு.... இவர்களை உடனே நிறுத்த வேண்டும் ✍️இளைஞர்களை நீங்கள் கல்வி கற்க வேண்டும் தான் ஆனால் தகுதியான கல்லூரிடம் செல்லுங்கள் ✍️
31/05/2022
நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிக்கு சென்று கொண்டு இருக்கிறது ஆகையால் பல கொள்ளையர்கள் பிள்ளைகளை திருடி கொண்டு சென்று உடலுறப்புகளை விற்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.. ஆகையால் உங்கள் பிள்ளைகளை பாதுக்காத்து கொள்ளுங்கள் ✍️
30/05/2022
அக்கறைபற்றில் சவாரி செல்லும் அணைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் இவ்வாறான மீட்டர் கட்டாயமாக பொருத்தல் பட வேண்டும்...... தற்போது ஆட்டோ சாரதிகளும் மக்களிடம் பகல் கொள்ளை அடிப்பதற்கு ஆரம்பித்து விட்டார்கள்...... இதனை மீறினால் சட்டத்தின் முன் நிறுத்தல் பட வேண்டும்..
குறிப்பு : சில முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் உள்ளது
30/05/2022
சிறுமியை கொலை செய்த நபர் போதைக்கு அடிமையானவர் மற்றும் சிறுமியின் தந்தையுடன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார். மேலும், சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 28 வயதுடைய இளைஞன் சிறுமியை துன்புறுத்துவதற்காக சதுப்பு நிலத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும், அவர் சிறுமியை அடிக்கத் தொடங்கியதால் சேற்றில் முகத்தைப் பிடித்துக் கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட பகுப்பாய்வு சந்தேகிக்கப்படுகிறது. சிறுமியைக் கொன்ற நபர், சிறுமியைக் கண்டுபிடிக்க கிராம மக்களுடன் தேடுதல் நடவடிக்கையையும் முன்னெடுத்தார்
30/05/2022
16 வயது சிறுமி மாயம்!
அம்பாறையில் காணாமல் போன 16 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவதினமான நேற்று (29) மதியம் 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி மாயமாகி உள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
மேலும் இச்சம்பவத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் சிறுமி நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது வதுர்தீன் பாத்திமா சஜானா என்பவராவார்.
குறித்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலையில் சம்பவ தினமான நேற்று (29) பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடிரென அவர் அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாக பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர்
பாறுக் ஷிஹான்
Click here to claim your Sponsored Listing.
