21/06/2020
SFI SALEM
Be a complete student
21/06/2020
14/06/2020
Remembering the great revolutionary Comrade CHE GUEVARA on his birth anniversary !
09/06/2020
போராட்டங்களே அனைத்தையும் சாத்தியமாக்கும்!!
நாளைய போராட்டம் ரத்து.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா பேரிடர் காலத்தில் நடத்தாதே என நீதிமன்றத்திலும்,களத்திலும் இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடியதுடன், தமிழகம் முழுவதும் நாளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்தது.இந்நிலையில் அரசு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் நாளை நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்படுகிறது.
தமிழக அரசே, பள்ளிக் கல்வித்துறையே!
மாணவர்களின் உயிரோடு விளையாடாதே.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் அரசை நோக்கி எழுப்பிய கேள்விகளை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறோம்.
1.மாணவர்களின் தலைக்குமேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
2.லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்?
3.பொதுமுடக்க காலத்திலே தேர்வு நடத்த அவசியம் என்ன?
4.ஜுலையில் பள்ளிகள் திறக்க முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீரளாமா?
5. டாஸ்மாக் திறப்பது போல அல்ல பள்ளிகள் திறப்பது.
தமிழக அரசே உடனே முடிவெடு கொரோனா பேரிடர் காலத்தில் தேர்வு நடத்த மாட்டோம் என்று.
05/06/2020
கல்லூரிகளில் சுழற்சிமுறை இரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும் தனியார் கல்விக்கூடங்களில் அணியாய கட்டணங்களை குரோனா காலத்தில் வசூலிப்பதை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் சேலம் மாவட்ட குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மனு அளிக்கும் போராட்டம்..
1.தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விநிலையங்கள் துவங்கி மூன்று மாதம் கடந்த பின்பே மாணவர்களிடம் கல்விக்கட்டணங்களை நிர்வாகங்கள் பெறவேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும்.
2. தமிழக அரசேஅரசுக்கல்லூரிகளில் சுழற்சி(சிப்ட்) முறையை ரத்து செய்யாதே.
3. அனைத்து மாணவர்களுக்கும் இணையச்சேவை கிடைக்கப்பெற்ற பின்பே அரசு ஆன்லைனில் வகுப்புகளை நடத்த வேண்டும் என மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5-6-2020 அன்று இந்திய மாணவர் சங்கம் தலைமையில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் போராட்டம்.
