*மேமன் பாயும் குதுபு நாயகமும்*
ஒருநாள் குதுபு நாயகம் அவர்கள் தம் ஆறாவது தலைமுறையில் தோன்றிய செய்யித் யூசுப்தீன் என்பவரின் கனவில் தோன்றி சிந்து நாடு சென்று இஸ்லாத்தை பரப்புமாறு ஆணையிட்டதற்கேற்ப அவர்கள் *பகுதாதிலிருந்து* கி.பி 1422 ஆம் ஆண்டில் சிந்து (இந்தியா) நாடு வந்து சேர்ந்தனர்.அந்த நாட்டின் அரசரான ஜாம்ராய்தன் செய்யது யூசுப்தீனின் ஆன்மீகச்சுடரால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு மார்க்கப் கான் என்று பெயரிடப்பட்டது.
அவர்களின் கைபிடித்து முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஷத்திரியர்களின் ஒரு பிரிவினரான லொஹனாக்கள் என்று கூறப்படுகிறது.
ஏறத்தாழ பத்தாண்டு காலத்தில் 700 லொஹனா குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவின. அக் குடும்பத்தினரை மற்ற இந்துக்களிலிருந்து பிரித்து காண்பதற்காக மூஃமின் (இறைநம்பிக்கையாளர்கள்) என்று ஸெய்யிது யூசுப்தீன் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மேமன் என திரியலாயிற்று.
மேமன் என்பதற்கு பாக்கியம் பெற்றவர்கள் என்ற கருத்து உள்ளதென்றும் குர்ஆனில் 90:18 இல் குறிப்பிடப்படும் மைமனா என்ற பதத்திலிருந்து வந்ததென்றும் சொல்லப்படுகிறது.
இவர்களுக்கு அங்கிருந்த மக்கள் சொல்லொணா துன்பம் விளைவித்ததனால் இவர்கள் சிந்திலிருந்து வெளியேறி கட்ச்,கத்தியவார்,குஜராத் ஆகிய பகுதிகளில் குடியேறினர் அங்கு வாழ்ந்து வந்த மக்கள் இவர்களை மரியாதையுடன் மேமன் சேத் என்று அழைக்கலாயினர். சிந்துப் பகுதியில் தங்கி விட்டவர்கள் சிந்தி மேமன் என்றும் கட்ச் பகுதியில் குடியேறியவர்கள் கட்சி மேமன் என்றும் கத்தியவார் பகுதிகளில் குடியேறியவர்கள் ஹலாய் மேமன் என்றும் அழைக்கப்பெறுகின்றனர்.
சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் பக்தி உள்ளவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றால் தங்களின் குருநாதரின் குருநாதரான குதுபு நாயகம் அன்னவர்களின் அடக்கவிடத்தை கண்டுவர பகுதாதுக்கும் சென்று வருகின்றனர். வணிகத் துறையில் சிறந்து விளங்கும் இவர்கள் அறம் செய்வதிலும் சிறந்து விளங்குகின்றனர் தங்கள் வணிகத் துறையில் சிறந்து விளங்குவதற்கு காரணம் குதுபு நாயகம் அன்னவர்களின் துஆ வே என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
ஆதம் என்பவரை ஹஜ்ரத் ஸையிது யூசுப்தீன் தங்களின் கலீஃபாவாக நியமித்ததற்கு இணங்க அவரின் வழித்தோன்றல்களே இதுகாறும் இவர்களின் தலைவர்களாக இருந்து வருகின்றனர். இந்தியாவில் இவர்கள் கட்ச்,கத்தியவார், குஜராத், பம்பாய் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் பாகிஸ்தானிலும் இவர்கள் பெருவாரியாக குடியேறியுள்ளனர்.
உலகின் எல்லா நாடுகளிலும் சென்று இவர்கள் வாணிபம் செய்து வருகின்றனர் இவர்களின் தாய்மொழி கச்சியாகும் அதைத்தவிர குஜராத் மொழியிலும் இவர்களுக்கு பேசத் தெரியும் இளமையிலேயே இவர்கள் உருது அரபி பார்ஸி ஆகிய மொழிகளையும் கட்டாயமாக கற்றுக் கொள்கின்றார்கள்
தகவல்- இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (அப்துற் றஹீம்)
Ihsan Mohamed
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ihsan Mohamed, Colombo.
08/06/2020
#لولاك- #لولاك- #لما- #خلقت- #الافلاك
اوكما قال عليه الصلاه والسلام
02/06/2020
https://m.facebook.com/story.php?story_fbid=3267867176591122&id=2543813312329849
Don't Worry. We'll Fix it...
16/12/2019
'' முயற்சியும், பயிற்சியும்..''
..........................................
பயிற்சியும்,முயற்சியும்தான் பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற மனங்களாக உருவாக்குகின்றன.
அடிப்படையில் அனைத்து மனிதர்களின் மனங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
முயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் ஒருவர் தனது மனத்தையே மூலதனமாக்கலாம். வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம் .
மனதை வளப்படுத்துவதற்கும் மூலதனம் ஆக்குவதற்க்கும் பலவற்றை கற்றுக் கொள்வதோடு முறையான பயிற்சியும் இருக்க வேண்டும்.
புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் படேர்வஸ்கி. அவர் புகழின் உச்சியில் இருந்த போதிலும் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வயலின் இசைத்து பயிற்சி செய்வார்.
ஒரு முறை அவரது ஈசல் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் வாசிக்கும் வயன் கலைஞருமான ஒருவர் ''உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'' என்று கேட்டார்.
அதற்கு படேர்வஸ்கி.,
'' எனது வெற்றியின் ரகசியம் தினந்தோறும் பயிற்சி செய்வதுதான். நான் ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றல் அதனால் ஏற்படும் மாற்றங்களை என்னால் அறிய முடியும்.
நான் இரண்டு நாட்கள் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை எனது விமர்சகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.
நான் மூன்று நாட்களுக்கு மேல் பயிற்சி செய்ய வில்லை என்றால் அதை இந்த உலகமே அறிந்து கொள்ளும் என்று கூறினார்.
எந்த துறையிலும் ஒருவர் வெற்றி ஆளராக திகழ வேண்டுமானால், அவர் தனது பணியில் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போதுதான் அவரால் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
உழவுக் கருவியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.. இல்லை என்றால் இது துருப் பிடித்து விடும்.
அது போலத்தான் தொடர்ந்து இடுபடும் கலையிலோ, விளையாட்டிலோ பயிற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்கள் ஈடுபடும் செயலில் திறமை மங்கி விடும்.
உங்களுக்கு 2012 ல் நடந்த ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் பற்றி தெரியுமா?
அவர் 9.63 வினாடிகளில் 100 மீட்டரை கடந்தார். அவர் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் தொடர்ந்து பயிற்சி செய்ததால்தான் சில நொடிகளில் அந்த சாதனையை செய்ய முடிந்தது.
ஆம்.,நண்பர்களே..,
எதிலும் முயற்சியும், முறையான பயிற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால்,ஒருவரது மன ஆற்றல் அதிகரித்து, அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது நிச்சயம்!💐🙏🏻🌹
10/03/2019
I love rumi🌷
11/02/2019
السلام عليكم ورحمة الله وبركاته
#இன்னுயிர்_ஈந்த____இறைநேச_செல்வர்கள்
உஹத் யுத்தம்
முடிந்து, எதிரிகளெல்லாம்
மகிழ்ச்சியோடு சென்று
கொண்டிருக்கிற தருணம்
அது!
போரில் உயிர்
நீத்தவர்களை கணக்கெடுக்கும்
பணியில் நபித்
தோழர்களோடு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களும்
ஈடுபட்டிருந்தார்கள்.
தூரத்தில் ஓர்
வெண்ணிற மேனி கொண்ட ஓர்
உடல் செங்குருதியால்
நனைக்கப்பட்டு, அசைவற்று
கிடந்ததைக் கண்ணுற்ற
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அந்த
உடலை நோக்கி ஓடிப்
போகிறார்கள்.
பூமியில்
புதைந்திருந்த முகத்தை
திருப்பிப் பார்க்கின்றார்கள்.
அது முஸ்அப் இப்னு உமைர்
ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் புனித உடல்.
எதிரிகளால் அதிக
துன்புறுத்தலுக்கு
உள்ளாக்கப் பட்டிருந்ததை
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்
விளங்கிக் கொண்டார்கள்.
தோழர்களை
அழைக்கின்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள். அப்படியே அவரை
மடியில் கிடத்தி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அழுதவர்களாக “ அல்குர்ஆனின்....
... முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.
என்ற
(33:23) –ஆம் வசனத்தை
ஓதியவர்களாக “முஸ்அபே!
மக்காவில் வாழ்ந்த
உம்முடைய ஆரம்ப கால
வாழ்வை நான் நன்கறிவேன்!
உம்மை விட அழகிய ஓர்
வாழ்வை யாரும் வாழ்ந்ததாக
நான் அறிந்திருக்க வில்லை! விலையுயர்ந்த பட்டாடை அணிந்த செல்வ சீமான்
ஆனால், இன்றோ! தலையை
மூடினால் கால்
தெரிகிறது; காலை
மூடினால் தலை
தெரிகிறது! முழுமையான
ஒரு கஃபன் துணி கூட
இல்லை!
அல்லாஹ்வின் தூதர்,
நாளை மறுமையில் நீர்
உயிர்த் தியாகி தான் என
உமக்காக சாட்சி கூறுவார்!”
என்று கூறினார்கள்.
பின்பு தோழர்களை
நோக்கி “மக்களே!
அல்லாஹ்விற்காக வாழ்ந்து
உயிர் நீத்த இவர்களை அடிக்கடி
சந்தியுங்கள்! இவர்களிடம்
வாருங்கள்! இவர்களுக்கு
ஸலாம் சொல்லுங்கள்! என்
உயிர் எவன் வசம் உள்ளதோ அவன்
மீது சத்தியமாக! நீங்கள்
சொல்லும் ஸலாத்திற்கு
அவர்கள் பதில் தருகின்றார்கள்!”
என்று கூறினார்கள்.
கியம நாள் வரையில் அஹ்லுஸ் சுன்னாத் வல் ஜமாஅத்தினர் மட்டுமே கடைபிடித்து வரும் இன்ஷாஅல்லாஹ்
(நூல்:
ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல்
{ஸல்லலாலாஹு அலைஹி வஸல்லம்! பக்கம்:31.)
07/02/2019
Jumma mubarak
جمعة مبارك
கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் புனிதமிகு ரவ்லா ஷரீஃபில் "சாம்பிராணி " போடுவதை காணலாம்...
சீனாவில் குவாங்ஸு நகரில் அமைந்துள்ள ஸஹாபி ஹழ்ரத் ஸஆத் பின் அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் புனித ஸியாரம்
Click here to claim your Sponsored Listing.

07/02/2019