அன்னை தமிழ் மன்றம் - பஹ்ரைன்

அன்னை தமிழ் மன்றம் - பஹ்ரைன்

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அன்னை தமிழ் மன்றம் - பஹ்ரைன், Social service, Manama.

Annai Tamil Mandram Bahrain (ATM)- அன்னை தமிழ் மன்றம்
என்றும் தமிழ் உறவுகளின் சங்கமம் More details : +97338856788

Photos from அன்னை தமிழ் மன்றம் - பஹ்ரைன்'s post 31/05/2026

சிட்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அன்னை தமிழ் மன்றம்,கிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து 30/05/2026 அன்று, இலவச மருத்துவ முகாமினை சிட்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடத்தியது.

இம்முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு,மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர்.

அனுபவமிக்க கிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ,
இம்முகாம் சிறப்பாய் அமைய தங்களின் ஒத்துழைப்பை பெரிதும் வழங்கினர்.

சிட்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.முஸ்தபா அவர்களை அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் திரு.M.பழனிச்சாமி அவர்கள் பாராட்டி கௌரவித்தார்.

இம்முகாம் வெற்றியடைய பெரிதும் உழைத்த கிம்ஸ் மருத்துவ குழுவிற்கும்,சிட்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கும், அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள்,மங்கையர் குழுவினர், அனைவருக்கும் அன்னை தமிழ் மன்றத்தின் மனமார்ந்த நன்றிகள்.

30/05/2026

சிட்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அன்னை தமிழ் மன்றம், கிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து, தற்போது நடைபெற்று வரும் இலவச மருத்துவ முகாம்💉🩺💊

Photos from அன்னை தமிழ் மன்றம் - பஹ்ரைன்'s post 28/05/2026

அனைவருக்கும் வணக்கம்,
கடந்த மே 24, 2026 அன்று, திரு. ஜெகதீஸ் மோகன் ராஜி அவர்கள் ரிஃபாவில் உள்ள அவரின் தங்குமிடத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தையடுத்து, அன்னை தமிழ் மன்றம் அவரது உடலை தாயகம் அனுப்பி வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.

மேலும் தமிழகத்திலுள்ள அவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட நமது அன்னை தமிழ் மன்றம், தேவையான ஆவணங்களைப் பெற்று, இந்தியத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

விடுமுறை நாட்களான போதிலும், நமது இந்தியத் தூதரக அதிகாரிகள், பஹ்ரைன் அரசாங்கம் மற்றும் தமிழக அரசின் தீவிர முயற்சியால் இன்று(28/05/2026) அவரது பூதவுடல் சல்மானியா மருத்துவமனையிலிருந்து அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நமது தமிழக அரசு, சென்னை விமான நிலையத்திலிருந்து பெரம்பலூருக்கு இலவச ஊர்தி வழங்கி உதவி செய்துள்ளது.

மறைந்த திரு.ஜெகதீஸ் அவரின் குடும்பத்தினர், இந்தியத் தூதரகத்திற்கும்,
பஹ்ரைன் அரசாங்கத்திற்கும்,தமிழக அரசிற்கும், அன்னை தமிழ் மன்றத்திற்கும் தங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

நன்றி.

Photos from அன்னை தமிழ் மன்றம் - பஹ்ரைன்'s post 28/05/2026

சிட்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அன்னை தமிழ் மன்றம் நடத்தும்
இலவச மருத்துவ முகாம்🩺💊💉

நாள் : 30/05/2026,சனிக்கிழமை.

நேரம் : மாலை 4 மணி முதல்.

இடம் : சிட்ரா ஸ்போர்டஸ் கிளப்.

அனைவரும் வருக!💐
அனுமதி இலவசம்!🎀

26/05/2026

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த மே 24,2026, அன்று, திரு.ஜெகதீஸ் மோகன் ராஜி என்பவர், ரிஃபாவில் உள்ள அவரின் தங்குமிடத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தியறிந்து, நமது அன்னை தமிழ் மன்ற நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, காவல்துறைக்கு தேவையான உதவிகள் செய்தனர்.
இவரது பூதவுடல் சல்மானியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் உள்ள இவரது மனைவி மற்றும் சகோதரர்களைத் தொடர்பு கொண்ட நமது அன்னை தமிழ் மன்ற நிர்வாகிகள் தேவையான ஆவணங்கனளப்பெற்று இந்தியத்தூதரகத்திற்கு வழங்கி, அவரது உடலை தாயகம் அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
விரைவில் இவரது உடல் தாயகம் அனுப்பி வைக்கப்படும். இது உங்கள் தகவலுக்காக. நன்றி!

26/05/2026

அனைவருக்கும் அன்னை தமிழ் மன்றத்தின் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்💐

Photos from அன்னை தமிழ் மன்றம் - பஹ்ரைன்'s post 23/05/2026

இந்தியன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்த மாணவ மாணவியருக்குப் பரிசளிப்பு விழா 21/05/2026 அன்று கேரள கதோலிக் அசோசியேஷினில் நடைபெற்றது.இதில் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக சிறுமியர்களின் வண்ணமயமான நடனம் அரங்கேறியது.

இந்நிகழ்வில் பங்குகொள்ள வாய்ப்பளித்த மதிப்பிற்குரிய Dr.சுரேஷ் சுப்ரமணியம்(Chairman UPP) அவர்களுக்கு மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்ச்சியில் அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் திரு.M.பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.மேலும் மன்றத்தின் மங்கையர் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு,சிறுமியர் நடனத்தை ஊக்குவித்தனர்.

இந்நடனத்தை ஒருங்கிணைத்த கலைத்துறையைச் சார்ந்த திருமதி.விஜயலக்ஷ்மி, திருமதி.சாந்தி அவர்களுக்கும், நடன அமைப்பாளர் திருமதி. துர்காதேவி அவர்களுக்கும் அன்னை தமிழ் மன்றம் மனமார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.💐

🇧🇭

22/05/2026

அன்னை தமிழ் மன்றம் நடத்திய Doodle Contest -இன் மூன்றாம் இடம் பிடித்த வெற்றியாளரின் மகிழ்ச்சி தருணம்💐🥳🎁🎈🎉

Kewalram & Sons

Want your business to be the top-listed Government Service in Manama?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Manama