Nrtia.bahrain

Nrtia.bahrain

Share

Non Resident Tamil Indians Association Bahrain

Photos from Nrtia.bahrain's post 30/05/2026

“முத்தமிழ் அறிஞர்” கலைஞரின் 103 வது பிறந்த நாள் விழாவும் “கொள்கை குன்று” S J சாதிக் பாட்சாவின் 99 வது ஆண்டு பிறந்த நாள் விழாவும் பகரைன் NRTIA சார்பில் 29-5-2026 வெள்ளிக்கிழமை மாலை சிறப்புடன் கொண்டாடப்பட்டது. விழாவில் பல சிறப்புரைகளும் சிறுவர் சிறுமியரின் வாழ்த்துரைகளும் இடம் பெற்றன. கலைஞர் தமிழ் சமுதாயத்தின் நலனுக்காக கொண்டு வந்த பல திட்டங்கள் குறிப்பாக பெண்கள் சொத்துரிமை, வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சட்டம் (2011) ஆகியவை பற்றி விரிவாக பேசப்பட்டன. சிறுவர் சிறுமியர் கலைஞரின் தமிழ் பற்று, அவரின் பொன்மொழிகள், அவரைப்பற்றிய கவிதைகளை எளிய தமிழில் இனிமையாக உரையாற்றினர்.

கழகத்தின் மேனாள் பொருளாளரும் (17 ஆண்டுகள்) அண்ணா மற்றும் கலைஞருடன் மூன்று முறை அமைச்சராக இருந்தவருமான கழகத்தின் “கொள்கை குன்று “ என்று அறியப்படும் சாதிக் பாட்சா அவர்கள் கழகத்துக்கு ஆற்றிய பணிகள் பற்றி கழக முன்னோடிகள் எடுத்துரைத்தனர்.
விழாவில் மாற்று கட்சியினர் கழகத்தில் இணைந்த நிகழ்வும் இடம் பெற்றது.
அறுசுவை உணவுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi எம்.எம்.அப்துல்லா M M Abdulla TRB Rajaa Anbil Mahesh Poyyamozhi DMKNRIWing Dr. Kalanidhi Veeraswamy Parithi ElamSurithi S M Nasar

24/05/2026

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi எம்.எம்.அப்துல்லா M M Abdulla Anbil Mahesh Poyyamozhi TRB Rajaa DMKNRIWing

Photos from Nrtia.bahrain's post 22/04/2026

வணக்கம்.

தற்போதய சூழ்நிலையினால் பலர் ஊர் போக இயலாவிட்டாலும் நமது நிர்வாகிளான
துணை அமைப்பாளர் திரு எருச்சி ரவிச்சந்திரன், துணை அமைப்பாளர் S.N திருமேனி,
துணை செயலர் திரு பிரபாகரன் தனபால் ஆகியோர் அவரவர் தொகுதியில் மிக தீவிரமான தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi S M Nasar எம்.எம்.அப்துல்லா M M Abdulla Parithi ElamSurithi Anbil Mahesh Poyyamozhi TRB Rajaa

Photos from Nrtia.bahrain's post 12/03/2026

NRTIA- Non Resident Tamil Indian Association, Bahrain, arranged a blood donation camp at King Hamad Hospital on 11-3-2026 to show their support to State of Bahrain, which protects Citizen and Residents alike. The events itself a testimony of how we are living peacefully in Bahrain, thanks to His Majesty King Hamad and His Royal Highness Crown Prince and Prime Minister Sh Salman.

NRTIA- வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் சங்கம், பகரைன், 11-3-2026 அன்று King Hamad மருத்தவமனையில் ரத்த கொடை (blood donation) முகாமை ஏற்படுத்தி ஏராளமான உறுப்பினர்கள் ரத்தம் கொடுத்தனர். பகரைன் நாட்டிற்க்கு நன்றியை காட்டும் நிகழ்வாக இது அமைந்தது. எந்த சூழ்நிலையிலும் பகரைனின் அமைதியான வாழ்க்கைக்கு இந்த நிகழ்வு சிறந்த எடுத்துகாட்டாக அமைந்தது. நாட்டு குடிமகன்களையும், தங்கியிருக்கும் வெளிநாட்டினரையும் ஒரு சேர பாதுகாக்கும் His Majesty King Hamad அவர்களுக்கும், HRH Crown Prince and Prime Minister Sh Salman அவர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi S M Nasar எம்.எம்.அப்துல்லா M M Abdulla Parithi ElamSurithi Anbil Mahesh Poyyamozhi TRB Rajaa

Photos from Nrtia.bahrain's post 11/02/2026

அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏

தமிழக அரசியலில் #சமூகநீதி, #கல்வி_முன்னேற்றம் மற்றும் #இளைஞர்_நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து முன்னெடுத்து வரும் # #தமிழக_முதல்வர் #திராவிட_நாயகன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையின் பயனாக உருவான “ #நான்_முதல்வன் ( )” திட்டத்தின் மூலம் பஹ்ரைன் வருகை புரிந்த 20 மாணவ, மாணவியர்களை 10.02.2026 அன்று பஹ்ரைன் சார்பில் கலந்துரையாடல் மற்றும் இரவு விருந்துடன் அன்புடன் வரவேற்றோம்.

பஹ்ரைன் பொறுப்பாளர் திரு.முஹம்மது ஹுசைன் மாலிம் அவர்களின் ஆலோசனையின் பேரில்,
செயல் தலைவர் திரு.கபீர் அகமது தலைமையில்,
பொது செயலாளர் திரு.இஸ்மாயில் அவர்களின் வழிநடத்தலில் நிகழ்ச்சி சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

கலந்துரையாடலில் மாணவர்கள் தங்களது மனமார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அதில் கலந்துக்கொண்ட அதிக மாணவர் கூறியதாவது:
ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் கல்வி கற்று, குடும்பத்தில் முதல் பட்டதாரியாக உயர்ந்தவர் தான் என்றும், இதுவே தனது முதல் விமானப் பயணம் என்றும் தெரிவித்தார். “நான் முதல்வன்” திட்டம் காரணமாகவே இந்த வாய்ப்பு கிடைத்தது, இதற்காக தாம் மட்டுமல்ல, தமது குடும்பமே தமிழக முதல்வருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இம்மாணவர்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறமை எந்தவிதத்திலும் குறையாதது என்பதை நிரூபித்துள்ளனர். மேலும், பஹ்ரைனில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற மாணவர் ஒருவர் BD50 பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை தொழிலாளர் நல செயலர் திரு.முகம்மது சலீம் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார். துணை அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவினர்.
துணைப் பொருளாளர் திரு.டேவிட் அவர்கள் அமைப்பின் லோகோவுடன் அழகிய பைகளை தயாரித்து, NRTIA சார்பில் எற்பாடு செய்த ஸ்வீட் வைத்து வழங்கினார்.
ஆலோசனை குழு உறுப்பினர் திரு.சிதம்பரம் அவர்கள் நிகழ்ச்சியை புகைப்படம் மற்றும் காணொளி மூலம் ஆவணப்படுத்தினார்.

திராவிட இயக்கத்தின் கல்வி அரசியல் கொள்கைகளுக்கு உலகத் தமிழர்களிடையே மேலும் வலுசேர்க்கும் இந்த நிகழ்வு, NRTIA பஹ்ரைன் அமைப்பின் சமூகப் பொறுப்பையும் அரசியல் உறுதியையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

“நான் முதல்வன்” திட்டத்தின் பஹ்ரைன் தொடர்பாளர் Ahlia University மற்றும் அதன் மேலாளர் திரு. கௌரி சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இவன்
NRTIA BAHRAIN
தொடர்புக்கு: 3421 0076

#நான்முதல்வன்

M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi S M Nasar எம்.எம்.அப்துல்லா M M Abdulla Karthikeya Sivasenapathy Parithi ElamSurithi Anbil Mahesh Poyyamozhi TRB Rajaa

23/12/2025

அனைவருக்கும் வணக்கம்,

ஆழ்ந்த இரங்கல்🙏🙏🙏

முதலில், மறைந்த திரு. பாலா அவர்களின் குடும்பத்தினருக்கு
NRTIA – பஹ்ரைன் சார்பில் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

NRTIA பஹ்ரைன் துணைப் பொறுப்பாளர்களில் ஒருவரான
திரு.சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்கு
22.12.2025 அன்று நள்ளிரவு 1.15 மணியளவில் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அழைத்தவர் தமது பெயர் திரு.பைசல் என்றும், அவரின் நண்பரான
திரு.பாலா அவர்கள் மனாமாவில் உள்ள மருத்துவமனையில் காலமானதாகவும் தெரிவித்தார்.

(மறைந்த திரு. பாலா அவர்களின் சொந்த ஊர்: திருச்செந்தூர் அருகில்)

இதனைத் தொடர்ந்து, சுமார் 2.00 மணியளவில்
திரு.சுல்தான் இப்ராஹிம் அவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று,
அங்கு இருந்த மறைந்தவருடன் பணிபுரியும் சக ஊழியர்களிடமிருந்து
தேவையான தகவல்களை பெற்றுக் கொண்டார்.

உடனடியாக இந்திய தூதரகத்தின் அவசர பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், Body Clearance Agent-ஐ தொடர்பு கொண்டு,
மறைந்தவரின் மனைவியிடமிருந்து பெறப்பட்ட Authorized Letter-ஐ
அந்த ஏஜெண்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதிகாலை, NRTIA பஹ்ரைன் தலைவர்
திரு.முகமது ஹுசைன் மாலிம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களின் ஆலோசனைக்குப் பின்னர்,
மறைந்தவரின் நண்பர் திரு.பைசல் அவர்களுடன்
சல்மானிய பிணவறைக்கு சென்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மறைந்தவர் பணிபுரிந்த நிறுவனத்தின் பெரும் ஒத்துழைப்புடன்,

24.12.2025 அன்று,
Gulf Air விமானம் மூலம்
(பஹ்ரைன் – திருவனந்தபுரம்)
மதியம் 2.00 மணிக்கு,
அன்னாரின் உடலும், அவரின் குடும்பத்தினரும்
நேரடியாக தாயகம் செல்லும் வகையில்
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்த துயரமான நிகழ்வில் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய,

#தமிழ்நாடு_அரசின் பஹ்ரைன்,
Legal Cell Co-Ordinator – திரு. சுல்தான் இப்ராஹிம்,
மறைந்த திரு.பாலா அவர்கள் பணிபுரிந்த நிறுவனம்,
நண்பர்கள் மற்றும் அனைத்து நல உள்ளங்களுக்கும்

NRTIA – பஹ்ரைன் சார்பில்
எங்களின் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.

இவண்,
்ரைன்
தொடர்புக்கு - 34210076



M. K. Stalin Udhayanidhi Stalin S M Nasar எம்.எம்.அப்துல்லா M M Abdulla Dr. Kalanidhi Veeraswamy Karthikeya Sivasenapathy DMK ITWing DMKNRIWing TRB Rajaa Kanimozhi Karunanidhi

11/12/2025

வணக்கம்.

மேற்கண்ட அறிவிப்பின் விளைவாக திரு பச்சமுத்து கனியன் அவர்களின் உறவினர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்களின் ஒப்புதலை வழங்கியதை தொடர்ந்து, இன்று (11-12-2025) காலை 10.30 மணிக்கு இந்திய தூதரக ஏற்பாட்டில் ( by arrangement of Indian Embassy, Bahrain ) அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. அயலக தமிழ் இந்தியர் நல சங்க ( NRTIA- Bahrain பொறுப்பாளர் திரு மாலிம், துணை பொறுப்பாளர்கள் திரு. கபீர், திரு. சுல்த்தான், சமூக சேவகர் திரு ருத்ரமூர்த்தி ஆகியோர் இறந்தவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். காணோலி காட்சி மூலம் உறவினர்கள் இறந்தவரின் முகத்தையும், எரியூட்டபடுவதையும் கண்டு கதறி அழுதது நெஞ்சை உருக்கியது.

Photos from Nrtia.bahrain's post 07/12/2025

அனைவருக்கும் வணக்கம்,

தமிழகத்தின் துணை முதல்வர், இளம் தலைவர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,

NRTIA பஹ்ரைன் சார்பில் 05/12/2025 அன்று Askar பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் தங்கும் விடுதியில் “உதயநிதி ஸ்டாலின் வாழ்க” என்ற முழக்கத்துடன் கேக் வெட்டி,
150-க்கும் மேற்பட்ட தொழிலாளர் தோழர்களுக்கு உணவு, ஜூஸ் மற்றும் ஸ்வீட் வழங்கி பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த சிறப்பு நிகழ்வு,
பொறுப்பாளர் திரு. முஹம்மது ஹுசைன் மாலிம் அவர்களின் ஆலோசனையின் பேரில்,
செயல் தலைவர் திரு. கபீர் அகமது மற்றும்
பொது செயலாளர் திரு. மேலபூந்தை இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும், இந்த விழாவிற்கு உறுதுணையாக இருந்த துணை பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள்
அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

NRTIA பஹ்ரைன்
34210076

27/11/2025

வணக்கம்.
துணை முதலமைச்சர், திமுகவின் இளைஞர் அணி செயலர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளில் அவரை வாழ்த்தி அவருடைய உழைப்பும், கொள்கை பிடிப்பும், இனிமையாக எளிமையாக பழகும் தன்மையும், தலைமை பண்பும் மேன்மேலும் மிளிர பகரைன் NRTIA சார்பில் வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்.
அமைப்பாளர்,
துணை அமைப்பாளர்கள்,
செயற்க்குழு,
ஆலோசனைக்குழு,
அனைத்து உறுப்பினர்கள்.

Bahrain NRTIA
அயலக தமிழ் இந்தியர் சங்கம்.

M. K. Stalin Udhayanidhi Stalin S M Nasar எம்.எம்.அப்துல்லா M M Abdulla Dr. Kalanidhi Veeraswamy Karthikeya Sivasenapathy DMK - Dravida Munnetra Kazhagam Parithi ElamSurithi DMKNRIWing DMK ITWing TRB Rajaa

08/11/2025

NRTIA பஹ்ரைன் முப்பெரும் விழா செய்தி @ முரசொலி

NRTIA பஹ்ரைன் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிற முரசொலிக்கு மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய செய்தி நாளைய வரலாறு — முரசொலி படியுங்கள்!

M. K. Stalin Udhayanidhi Stalin S M Nasar எம்.எம்.அப்துல்லா M M Abdulla Dr. Kalanidhi Veeraswamy Karthikeya Sivasenapathy DMK - Dravida Munnetra Kazhagam Parithi ElamSurithi DMK ITWing

Want your business to be the top-listed Government Service in Manama?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Manama
318