மஜக கோணுழாம்பள்ளம் கிளை

மஜக கோணுழாம்பள்ளம் கிளை

Partager

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோணுழாம்பள்ளம் கிளையின் முகநூல் பக்கம்

30/07/2024

ுவைத்_மண்டல_நியமன_அறிவிப்பு...

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) குவைத் மண்டல நிர்வாகிகளாக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மண்டல செயலாளராக,
பொதக்குடி. SI.சதக்கத்துல்லா
அலைபேசி; +965 99739626

மண்டல அவைத் தலைவராக,
கோணுழாம்பள்ளம் J.அன்சாரி
அலைபேசி; +965 554 50095

மண்டல பொருளாளராக,
வேலம்புதுக்குடி S.சர்புதீன்
அலைபேசி; +965 6070 2321

நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
M. முகம்மது நாசர்
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
30.07.2024

15/06/2024

குர்பானி தொடர்பான நல்லெண்ண நினைவூட்டல்...

06/05/2024

இன்று +2 தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை மஜக சார்பில் வாழ்த்துகிறோம்.

வளமான எதிர்காலத்திற்கு தயாராகுங்கள்
▪️
வாய்ப்பை இழந்தவர்கள்
கவலைப்பட வேண்டாம்.

தோல்வியும் கற்றலின் ஒரு பகுதிதான்.

இடறி விழுவது வீழ்ச்சியல்ல அது புதிய முயற்சிக்கான வழிகாட்டல்.

அடுத்த சுற்றுக்கு புறப்படுங்கள்.

Photos from மஜக கோணுழாம்பள்ளம் கிளை's post 01/05/2024

#மே_தின_கொண்டாட்டம்…

ைமையகம்_அருகில்...

#தர்பூசனி_மோர்_பிரியாணி_வழங்கி_மஜக_வினர்_உற்சாகம்!

மே.01.,

இன்று உழைப்பாளர் தினமான மே 1 தினத்தை முன்னிட்டு மஜக சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ( MJTS) சார்பில் மஜக தலைமையக வாசலில் கொடியேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து MJTS சார்பில் மோர், தர்பூசனி ஆகியவற்றின் வினியோகத்தை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து காய்கறி பிரியாணி வினியோகத்தை மஜக பொதுச் செயலாளர் மெளலா நாசர் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து MJTS மாநில துணைச் செயலாளர் மாத்தூர் இப்ராகிம் தலைமையில் MJTS நிர்வாகிகள் பேருந்து, ஆட்டோ, பைக் ஆகியவற்றில் பயணித்தவர்களுக்கு வாகனங்களை நிறுத்தி தர்பூசணி, மோர் ஆகியவற்றை வினியோகித்தனர்.

கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு MJTS செய்த இச்சேவை பெரிதும் மகிழ்ச்சியளித்தது.

சுமார் ஒரு மணி நேரமாக வினியோக பணிகள் நடைபெற்றது.

இதில் MJTS மாவட்ட செயலாளர்கள், ரமேஷ் குமார், பிராங்கிளின், அல்லாபகஷ், வெங்கடேசன், சுலைமான், சங்கர், MJTS மாவட்ட பொருளாளர்கள் இளங்கோவன், இதாயத்துல்லா, MJTS துணைச் செயலாளர்கள் முகமது அலி ஜின்னா, ராஜேஷ், சுல்தான் மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தகவல்;
்_தொழில்நுட்ப_அணி

#தலைமையகம்
01.05.2024

Photos from மஜக கோணுழாம்பள்ளம் கிளை's post 19/04/2024

#ஆட்சி_மாற்றத்திற்கான_அலை_வீசுகிறது...

#வாக்களித்த_பின்பு_மஜக_தலைவர்_மு_தமிமுன்_அன்சாரி_பேட்டி!

ஏப்ரல்.19.,

இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தோப்புத்துறையில் அவர் படித்த பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...

2600 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் ஜனநாயக தேர்தல் முறையை உலகிற்கு அறிமுகம் செய்தது.

9 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி இந்தியாவுக்கு ஜனநாயக தேர்தல் முறையை அறிமுகம் செய்தது.

பல கட்டங்களை தாண்டி இன்று ஜனநாயக தேர்தல் முறை வளர்ச்சியடைந்துள்ளது.

இப்போது பெண்கள் வரிசையில் நின்று வாக்களிக்கிறார்கள்.

சாமனியர்களும், பாமரர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள்.

கிராமங்களில் ஆர்வமுடன் வாக்களிப்பதை அறிய முடிகிறது.

இதே போல் படித்த மேல்தட்டு வர்க்கமும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இது நம் ஜனநாயக கடமை.

இந்த தேர்தலில் நாடு முழுக்க ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசுகிறது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும்.

இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்.

தகவல்:
்_தொழில்நுட்ப_அணி

#நாகை_மாவட்டம்
19.04.2024

11/04/2024

மஜகவின் இனிய
#ரமலான்_நல்வாழ்த்துக்கள்...

10/04/2024
07/04/2024

| “இந்தியாவுக்கு ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கியுள்ளது!”

திருநெல்வேலியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து பிரசாரம் செய்தபோது மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேச்சு

| | |

06/04/2024

#பாலஸ்தீன_ஆதரவு_நாள்...

ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_பதாகை_ஏந்தினார்!

ஏப்ரல்.05.,

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை 'அல்குத்ஸ் தினம்' என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது.

மனிதநேய ஜனநாயக கட்சி இதனை 'பாலஸ்தீன ஆதரவு நாள்' என கடை பிடிக்கிறது.

இதனையொட்டி 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் ' என்ற பதாகையை ஏந்தி மஜக-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார்.

இன்று அந்த பதாகையை ஏந்தி அவர் வலைதள பரப்புரையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மஜக-வின் முன்னணி தலைவர்கள், அனைத்து மட்ட நிர்வாகிகள், கிளை அமைப்புகள் இன்று இரவு 10 மணிவரை இப்பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

'இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்:
சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் '

தகவல் :
்_தொழில்நுட்ப_அணி

#தலைமையகம்
05.04.2024

Vous voulez que votre entreprise soit Service Du Gouvernement la plus cotée à Democratic Republic of the ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Adresse


Democratic Republic Of The