16/03/2026
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிப்பினையொட்டி அனைத்துதுறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.ப.ஆகாஷ்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.கே.எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இன்று (16.03.2026) நடைபெற்றது.
16/03/2026
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இன்று (16.03.2026) தேர்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
16/03/2026
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிப்பினையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி அரசியல் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.ப.ஆகாஷ்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.கே.எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இன்று (16.03.2026) நடைபெற்றது.
15/03/2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -2026
தேதி அறிவிப்பு!
வாக்குப்பதிவு நாள் - 23 ஏப்ரல்,2026
13/03/2026
நாகப்பட்டினம் மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விலை நிர்ணயக் கூட்டம் மற்றும் தேர்தல் குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (12.03.2026) நடைபெற்றது.
11/03/2026
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்!
10/03/2026
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்கள் குழுவிற்கான இரண்டாம் கட்ட பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.வ.பவணந்தி அவர்கள் தலைமையில் இன்று (10.03.2026) நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோ.அரங்கநாதன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (நாகப்பட்டினம்) திரு.ரா.சங்கரநாராயணன், (கீழ்வேளுர்) திருமதி. த.இராஜேஸ்வரி, (வேதாரண்யம்) திரு.க.கண்ணன், ஆகியோர் உள்ளனர்.
10/03/2026
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு நோக்கமுடைய உலகத் தர திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் TAHDCO மூலம் வழங்கப்படுகிறது.
Global Food & Beverage Service, Eco-Tourism, Advanced AI, Apparel Designing & Management மற்றும் Glam & Cosmetology Salon Management போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பித்து இந்த பயிற்சியின் மூலம் தங்கள் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
08/03/2026
மார்ச் 08 - இனிய மகளிர் தின வாழ்த்துகள்!