08/10/2022
கச்சேரினா இதுதான்
🔴Live🔴 #SUBIN #ஆலங்குளம் #நத்தம்_மாரியம்மன் கோவில் திருவிழா தேவக்கோட்டை அபிராமி இன்னிசை கச்சேரி
🔴Live🔴 🔴Live🔴 #ஆலங்குளம் #நத்தம்_மாரியம்மன் கோவில்திருவிழா தேவக்கோட்டை அபிராமி இன்னிசை கச்சேரி Copyright Disclaimer under Section ...
13/12/2021
தமிழகத்திற்கு காமராஜர் போல் கடங்கநேரிக்கு பொன்னுத்துரை.
சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் இவர் தனது சொந்த ஊர் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் பல.
தற்செயலாக கடந்த செவ்வாய் கிழமை அன்று தெருவில் செல்லும் போது பொன்னுசாமி என்பவரால் (07-டிசம்பர்-2021), என் காதிற்கு கிடைத்த தகவல் தான் இதை எழுதுவதற்கு தூண்டியது.
தகவலின் ஊரையாடல் கீழே;
பொன்னுத்துரை அவர்களின் அண்ணன் அண்ணாமலை அவர்கள் ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக தெருவில் வந்த பொன்னுசாமி அவர்களின் உரையாடல்.
பொன்னுசாமி: என்ன அண்ணன் நல்லா இருக்கீயளா
அண்ணாமலை: நல்லா இருக்கோம்!
பொன்னுசாமி: நீங்க பொன்னுத்துரைக்கு மூத்த அண்ணன் தான?
அண்ணாமலை: ஆம். ஊர்ல எல்லாருக்கும் பொன்னுத்துரைய தான் நல்ல தெரியும்ன
பொன்னுசாமி: ஆமா. எங்களுக்கெல்லாம் கண்ணை தொறந்து வச்சவரே அவரு தான! எப்படியோ இருந்த எங்களுக்கு எழுத படிக்க சொல்லி தந்து கையெழுத்து போட சொல்லி தந்தது அவரு தான். சாயங்காலம் வயலுக்கு போயிட்டு 7 மணிக்கு வீட்டுக்கு வருவோம். அப்புறம் 8 மணில இருந்து 1௦ மணி வரைக்கும் பொன்னுத்துரை அண்ணன் தான் எழுத படிக்க சொல்லி தருவார். அவரு இல்லைனா நாங்க எதுவுமே தெரியாம தான் இருந்திருப்போம்.
அண்ணாமலை: ஆமா. இன்னுமும் அந்த கரும்பலகை எங்க வீட்ல இருக்கு.
சரி நேரம் ஆயிட்டு ஊருக்கு கிளம்பிடுறோம்
பொன்னுசாமி: சரிங்கண்னே!
*எழுத்தறிவித்தவன் இறைவன்*
(தொடரும்......)
19/03/2021
கடங்கநேரி ஊரில் கட்டாயமாக மாற்றப்பட வேண்டியவை எவை?