Ambur Express

Directions Website Contact the organization

Ambur Express The One-Stop Platform to Get All the Updates of Ambur and Tirupathur District

ஆம்பூர் அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்...
06/10/2026

ஆம்பூர் அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் பொதுவழி பயன்பாடு தொடர்பாக மார்க்கபந்து மற்றும் மணிமேகலை ஆகியோரது குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதுதொடர்பாக இருதரப்பினரும் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு சென்ற போது மணிமேகலை இல்லாததால் அவரது மகனான பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, மாணவனை வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாக்ரே, முதற்கட்டமாக சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாக்ரே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இடத்தகராறு தொடர்பான புகாரில், தாய்க்கு பதிலாக அவரது 12-ம் வகுப்பு படிக்கும் மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TirupathurDistrictNews TamilNadu TamilNaduNews TamilNews

வாணியம்பாடியில் சிறுவனை மயக்கி நகை, பணம் கொள்ளை என புகார்; நகையை அடகு வைத்து தாய் நாடகம்?திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்ப...
05/10/2026

வாணியம்பாடியில் சிறுவனை மயக்கி நகை, பணம் கொள்ளை என புகார்; நகையை அடகு வைத்து தாய் நாடகம்?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் 4-வது முனி தெருவைச் சேர்ந்த ஷகீல் அஹ்மத் என்பவர் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாஹீன் பர்வீன், மகள் சுஃப்யா மரியம் மற்றும் 10 வயது மகன் முஹம்மத் சுஃபியான் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஷகீல் அஹ்மத் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரது மனைவி ஷாஹீன் பர்வீன் மற்றும் மகள் அருகிலுள்ள கடைக்கு மாவு அரைக்க சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சிறுவன் முஹம்மத் சுஃபியான் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கிய நிலையில் இருப்பதாகவும், பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து சிறுவனுக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளையடித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் தாய் ஷாஹீன் பர்வீன், இரண்டு நாட்களுக்கு முன்பே நகைகளை அடகு வைத்துவிட்டு, தனது கணவரிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனுக்கு மயக்க மருந்து தெளித்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், தற்போது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

TamilNadu TamilNaduNews TamilNews

ஆம்பூரில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து!திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சந்தைப்பேட்...
04/10/2026

ஆம்பூரில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் தெருவில் அஸ்கர் கான் என்பவர் இர்பாஸ் டிரேடர்ஸ் என்ற பெயரில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு குடோன் நடத்தி வருகிறார். இந் நிலையில், இன்று குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் குடோன் உரிமையாளர் அஸ்கர் கான் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில், குடோனில் பழைய பொருட்களை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் நிறைந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TirupathurDistrictNews TamilNadu TamilNaduNews TamilNews

வாணியம்பாடியில் போலி எம்பிபிஎஸ் டாக்டர் கைது; 4 பேர் மீது வழக்கு பதிவு!திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பைபா...
02/10/2026

வாணியம்பாடியில் போலி எம்பிபிஎஸ் டாக்டர் கைது; 4 பேர் மீது வழக்கு பதிவு!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள(கவின் மருத்துவமனை) தனியார் மருத்துவமனையில், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து மருத்துவராக பணியாற்றிய புதுச்சேரியைச் சேர்ந்த 30 வயது பிரவீன்குமார் என்பவரை நகர போலீசார் கைது செய்தனர். பிரவீன்குமார் சிறுநீரக நிபுணர் எனக்கூறி மருத்துவமனையில் பணியாற்றி வந்ததாகவும், அவரது சிகிச்சை முறையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அவர் டிப்ளமோ டயாலிசிஸ் மட்டும் படித்துவிட்டு, எம்பிபிஎஸ் மற்றும் சிறுநீரக நிபுணர் தொடர்பான போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரவீன்குமார் போலி மருத்துவர் என்று தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் போலீசில் அளித்துள்ள புகாரில், போலி சான்றிதழ் விவகாரம் தெரியவந்த பின்னர் மருத்துவமனையிலேயே தன்னை இரண்டு நாட்கள் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாகவும், இதில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தாயார் கவிதாவை தொடர்பு கொண்டு, இரண்டு மாதங்கள் பணியாற்றியதற்கான சம்பளத்துடன் மேலும் ரூ.10 லட்சம் வழங்கினால் மட்டுமே தங்களது மகனை அனுப்புவோம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறியதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது தாயார் அளித்த தகவலின் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து தன்னை மீட்டதாகவும், தன்னை தாக்கியதாக கூறப்படும் மருத்துவமனை நிர்வாகி கமல் ராவ், சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தபரேஸ் மற்றும் ரஜினி, சூர்யா ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலி மருத்துவர் பிரவீன்குமார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நகர போலீசார் மருத்துவ நிர்வாகத்தினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TirupathurDistrictNews TamilNadu TamilNaduNews TamilNews

🎥 VIDEO HEADLINEGST Billing in Ambur, Vaniyambadi & Pernambut — What’s Really Going On? ⚠️😱A 10-part awareness series ex...
02/10/2026

🎥 VIDEO HEADLINE

GST Billing in Ambur, Vaniyambadi & Pernambut — What’s Really Going On? ⚠️😱

A 10-part awareness series exploring the concerns, risks and reported cases surrounding “GST billing” and alleged misuse of GST registrations.

This is awareness, not accusation — our aim is to help people understand the risks and protect themselves. 🛡️

👉 SWIPE LEFT ➡️ to understand the full picture, from how the issue is discussed to reported cases, warning signs and ways to protect yourself.

Stay informed. Stay Safe!

⚠️ DISCLAIMER: This series is based on publicly reported information and general awareness. We do not target, accuse or defame any individual, business, community or profession. This is NOT a how-to guide and does not promote illegal activity.

Address

Ambur
635802

Alerts

Be the first to know and let us send you an email when Ambur Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ambur Express:

Shortcuts

Share

Category