தமிழக மக்கள் கழகம் - Thamizhaga Makkal Kazhagam

தமிழக மக்கள் கழகம் - Thamizhaga Makkal Kazhagam

Share

மக்களின் எழுச்சியே !!
நாட்டின் வ?

ஐனநாயக நாட்டில் மக்களே முதன்மையானவர்கள், அவர்களுக்காகத்தான் அரசும், சட்டமும்.
அவர்களால் தான் அரசும், சட்டமும். கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் மற்றும் தற்போது தமிழத்தில் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அரசியல் அவலங்களை கண்டு தன் உரிமைகளை மீட்க்க வீருகொண்டு எழுந்து வீதிக்கு போராட வந்த இளைஞர்களின் எழுச்சி சிந்தனையில் விளைந்தது தான் இந்த தமிழக மக்கள் கழகம் எனும் மக்களுக்கான கட்சி, இந்த கட்சி தமிழக கலாச்சாரம

Photos from தமிழக மக்கள் கழகம் - Thamizhaga Makkal Kazhagam's post 25/01/2023

அன்புச்சகோதர சகோதரிகள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...

அறிவர் அம்பேத்கர் புகழ் ஓங்குக.....

குடியரசு தினம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் கீழே உள்ள முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள், இந்தியராக உள்ள அனைவரும் இதை தெரிந்து கொள்வது அவசியம்......

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1498 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

Photos from தமிழக மக்கள் கழகம் - Thamizhaga Makkal Kazhagam's post 11/10/2022
Photos from தமிழக மக்கள் கழகம் - Thamizhaga Makkal Kazhagam's post 11/10/2022

நடுத்தர மக்களின் குரல்வளையை மேலும் நசுக்கும் விதமாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக (திமுக) அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளையதலைமுறை அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று சிறப்பாக நடந்தேறியது

பங்கேற்ற அனைத்து சமுக நல ஆர்வலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

14/04/2021

அன்பிற்கினிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இந்த நன்னாளில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு தமிழக மக்கள் கழகம் புகழ் வணக்கத்தை செலுத்துகின்றது.....

ராம்ஜி சக்பால் - பீம்பாய் இணையருக்கு 14வது குழந்தையாக பிறந்தார் அம்பேத்கர்.மத்திய பிரதேசத்தில் உள்ள 'மோ' என்ற இடத்தில் 1891,ஏப்ரல் 14 இல் பிறந்தார்.இவருடைய தந்தை ராம்ஜியும்,பாட்டனாரும் ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள்.இவர்களுடைய குடும்பத்திற்கு ராணுவ பின்னணி உண்டு.இவர்கள் வசிக்கும் 'மோ' என்ற இடமே ராணுவ தலைமையிடமாகும்.

பள்ளிப்படிப்பு
தனது ஐந்தாம் வயதில் உள்ளூரில் உள்ள மராத்தி பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.பின்னர் சதாராவில் உயர்நிலை பள்ளியில் படித்தார்.இவரது பள்ளி ஏட்டில் அவர் பெயர் 'பீமா ராம்ஜி அம்பாவடேகர்' ஆகும்.அக்காலத்தில் தீண்டாமை எங்கும் நிறைந்திருந்தது.மற்ற மாணவர்களிடம் இருந்து தனியே உட்காரவைக்கப்பட்டர்.அங்கிருந்த சம்ஸ்கிருத ஆசிரியர் தெய்வீக மொழியை கற்பதற்கு தீண்டத்தகாதவர்கள் அருகதையற்றவர்கள் என்று கூறி சமஸ்கிருதத்தை கற்று கொடுக்க மறுத்துவிட்டார்.

1904இல் அம்பேத்கர் குடும்பம் பம்பாயில் குடியேறினர்.பரேலில் உள்ள பள்ளியிலும்,அதன் பிறகு எல்பின்ஸ்டன் பள்ளியிலும் படித்து,1907 இல் பள்ளிப்படிப்பை முடித்தார்.தனது ஐந்தாம் படிவத்திலேயே திருமணம் செய்து கொண்டார்.அப்பொழுது மணப்பெண் ராமாபாய்க்கு 9 வயது.

பெயர் சர்ச்சை
'பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்' என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். இது ஒரு சாரரின் கருத்து.

ஆனால் இந்த கருத்து முற்றிலும் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. ஏனெனில் இந்தியாவில் எந்தவொரு பிராமணருக்கும் இத்தகைய குடும்ப பெயர் இல்லை. மேலும் இது தங்களின் சமூகத்திற்கு பெருமையை சேர்த்து கொள்ள அவர்கள் செய்து கொண்ட ஒரு போலி இடைச்செருகல் என்பதே பலரின் குற்றசாட்டு. இவர் அம்பவாடே என்னும் கிராமத்தில் பிறந்ததால் இவரை அம்பவாடேகர் என்று முதலில் அழைத்தனர். பின்னர் அதுவே அம்பேத்கர் என்றானது என்பது ஒரு சாரரின் கருத்து.

கல்லூரி காலம்
மன்னர் மஹாராஜா சாயாஜிரால் கெய்க்வாடால் அளிக்கப்பெற்ற மாத உதவி தொகையான ரூபாய் 25னை கொண்டு,தன் கல்லூரி படிப்பை எல்பின்ஸ்டனில் தொடர்ந்தார்.அக்காலத்தில் இழிவுபடுத்துதல் எங்கும் காணப்பட்டது.உணவகங்களில் தேனீர்,நீர் மறுக்கப்பட்டன. கல்லூரி படிக்கும் காலத்திலேயே அம்பேத்கரின் தந்தை இறந்தார்.இது அவரது மனதை வெகுவாக பாதித்தது.பட்டய படிப்புக்கு பிறகு,பரோடாவில் அரசுபணியை ஏற்றார்.உயர்பணிகளில் உயர் வகுப்பினருடன் தானும் அதில் இணையாக இருப்பதை உணர்ந்து கொண்டார்.

ஆய்வு கட்டுரை
நாளொன்றுக்கு 18 மணி நேரம் வரை படித்தார் அம்பேத்கர்.அவர் எழுதிய 'இந்தியாவில் ஜாதிகளின் தொடக்கம்' என்ற ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார்.அதற்கு முன்னதாக 'பண்டைய இந்திய வணிகம்' என்ற கட்டுரைக்காக எம்.ஏ பட்டம் பெற்றார்.'இந்தியாவுக்கான தேசிய லாப பங்கு','ஒரு வரலாற்று பகுப்பாராய்வு' போன்ற கட்டுரைகளை முனைவர் பட்டத்திற்காக வெளியிட்டார்.

மேற்படிப்பு
'லண்டன் பொருளாதார அரசியலறிவு பள்ளிக்கு ஒரு பட்டதாரி மாணவனாக சென்றார்.பரோடா மன்னர் உதவித்தொகை நிறுத்திவிட்டதால்,அவருடைய எம்.எஸ். சி ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.அதன் பிறகு பரோடா மன்னரிடம் படைத்துறை தலைவாரக பணியாற்றினார்

தீண்டத்தகாதவன் என்ற தீண்டாமை
பின்னர் பம்பாய் வந்து,மாணவர்களுக்கு கல்வியளிக்க தொடங்கியதோடு,பங்கு பத்திரங்களில் அறிவுரை வழங்க ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார்.ஆனால் 'ஒரு தீண்டதகாதவனிடம் அறிவுரைக்கு செல்வதா ? ' என்ற எண்ணத்தில் வாடிக்கையாளர்கள் வரவில்லை.இதனால் அம்பேத்கர் தனது ஆசிரியர் பணியில் கவனம் செலுத்த தொடங்கினார்.இவரது உரையை கேட்பதற்கென்றே மாணவர்கள் திரண்டனர்.அப்போதும் சமுதாயத்தில் சிறுமைப்படும் நிலையில் மாற்றம் ஏதும் இல்லை.ஏனென்றால் ஆசிரியர்களுக்கான அறையில் இருந்த பானையில் இருந்து நீர் பருக அவரை அனுமதிக்கவில்லை.1920 மார்ச்சில் பொருளாதார சட்டகல்வியை தொடர இப்பதவியை துறந்தார்.கோலாப்பூர் மன்னர் அம்பேத்கருக்கு மாபெரும் பொருள் உதவியை செய்தார்.தன் உணவையையும் துறந்து முன்பை விட கடுமையாக உழைத்தார்.அவரது மனைவி 'பிறரிடமிருந்து உதவி பெறுவதை மதிப்பு குறைவாக கருதி,நிதி நிலைமையை சீர் செய்வதற்கு தன் நகைகளை விற்றார்' அவர்.

பட்டங்கள்
'பிரிட்டிஷ் இந்தியாவில் நிதி நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளித்தல்' (எம்.எஸ். சி),'ரூபாயின் சிக்கல்-அதன் தொடக்கமும்,தீர்வுகளும்' (டி.எஸ். சி) போன்ற ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு பட்டங்களை பெற்றார்.1947இல் மேற்கண்ட கட்டுரையை 'இந்திய நாணயம்-வங்கி வரலாறு' என்ற தலைப்பில் மறுபதிப்பினை மேற்கொண்டார் அம்பேத்கர்.

ரிசர்வ் வங்கி உருவாக்கம்
அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.

1.கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
2.பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
3.ருபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்
கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது

வழக்கறிஞர்
1923 இல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் சேர்க்கப்பட்டார்.வாதிடும் தொழிலை ஏற்றாலும்,தீண்டாமை என்ற களங்கம் அவரை பின் தொடர்ந்துவந்தது.இதனால்,முக்கியத்துவம் இல்லாத பிற வேலைகளையே செய்து வந்தார்.கணக்கியல் நிலையத்தில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி தன் வருமானத்தை பெருக்கி கொண்டார்.1924 ஜூலை 9இல் தாமோதர் கூடத்தில் ஒடுக்கப்பட்ட இன மக்களின் நிலையின் மீதான கவனத்தை ஈர்க்க ஒரு பொதுக்கூட்டம் கூட்டினார்.இதனை அனைவரும் வரவேற்றனர்.

கல்வியறிவே முக்கியம்
1927இல் 'பகிஸ்கரிக் பாரத்' என்ற இதழை தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்,குறைகளுக்காக குரல் கொடுக்கவும் இதனை உருவாக்கினார் அம்பேத்கர்.ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலையை உயர்த்த கல்வியே சிறந்த கருவியென கருதினார்.குறிப்பாக மேல்நிலை கல்வியை பெறுவதன் வாயிலாக மட்டுமே,சமூக பொருளாதார சமத்துவம் கைகூடும் என்று அம்பேத்கர் கருதினார்.

வட்ட மேசை மாநாடு
1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

தனி தொகுதியால் காந்தி-அம்பேத்கர் இடையே பிரச்னை
தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.

புகழ்பெற்ற தீர்மானம்
1935 அக்டோபர் 13இல் நடத்தப்பட்ட 'ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மாநில மாநாட்டில்' கலந்து கொண்டார்.அதில் 'நான் இந்துவாக பிறந்தேன்,ஆனால் இந்துவாகவே இறக்கமாட்டேன்' என்ற புகழ்பெற்ற தீர்மானத்தை கொண்டுவந்தார் அம்பேத்கர்.

நவீன புத்தர்
நீண்ட காலமாக புத்த மதத்தை தழுவ வேண்டும் என்ற அம்பேத்கரின் உந்துதல் உறுதிபட தொடங்கியது எனலாம்.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.பல புத்த பிக்குகளின் கூட்டங்களில் தன்னை தொடர்புபடுத்தி கொண்டார் அம்பேத்கர்.1949 இல் காத்மாண்டுவில் நடந்த உலக புத்த மாநாட்டில் கலந்து கொண்டு 'புத்த மதம்,மார்க்சிசம் ஆகிய இரண்டின் நிறைகளையும்,குறைகளையும் ஒப்பிட்டு முதலில் கூறிய மதத்தின் மேன்மையை அறிவித்து இரண்டையும் ஒப்புமைப்படுத்தி காட்டினார்.

அதன் பிறகு, 1950இல் நடந்த உலக புத்த மாநாட்டிற்கு சென்றார்.1951இல் 'புத்த உபாசன பந்தா' என்ற நூலை வெளியிட்டார்.1954இல் நடந்த உலக புத்த மாநாட்டிற்கு இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டார்.1955இல் 'பாரதீய புத்த பேரவையை அமைத்தார்.1956 அக்டோபர் 14இல் நாகபுரியில் இந்து மதத்தை துறந்து,புத்த மதத்தில் முறைபடியாக சேர்ந்தார்.1956 இல் நடந்த உலக புத்த மாநாட்டில் 'நவீன புத்தர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது, அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

இறுதி நாட்கள்
அம்பேத்கரின் இறுதி நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.பிறர் உதவியின்றி சிறு அசைவை கூட தானாக செய்ய முடியாத நிலையை அடைந்தார் அம்பேத்கர்.பிராணவாயு அவர் அருகில் எப்போதும் இருக்கும்.இதனால் அவருடைய ஆதரவாளர்கள் அச்சமடைவார்கள் என்ற காரணத்தால் வெளியில் யாருக்கும் இதனை பற்றி சொல்லப்படவில்லை.இத்தகைய உடல்நல கேட்டிற்கிடையே அவர் 'புத்தரும் அவர் தர்மமும்' என்ற நூலை எழுதினார். அவரது மறைவிற்கு பிறகு வெளியிடப்பட்டது.

இறப்பு
1956 டிசம்பர் 6ஆம் தேதி மரணமடைந்தார் அம்பேத்கர்.மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது. மாபெரும் வரலாரானது முடிவுற்றது.அம்பேத்கர் போன்ற வரலாற்று மாமேதைகள் இறப்பிற்கு பிறகும் வாழ்கிறார்கள்.

காந்தியை பற்றி அம்பேத்கர்
“காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது” என்று கூறினார்.

கனவு
இந்திய குடியரசை உறுதிப்படுத்தும் திட்டங்கள் மற்றும் ,செயல்முறைகளை கொண்டு வரவும்,இந்திய குடியரசு அமைப்பை பலப்படுத்தவும் 'குடியரசு கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டார் அம்பேத்கர்.அரசியல் பணியில் ஈடுபட எண்ணுவோர்க்கு ஒரு பயிற்சி பள்ளியை துவக்கும் ஒரு புதுமையான திட்டமும் கூட அவரிடம் இருந்தது.உடல் நிலை கேடடைந்து வந்ததால் அவரால் செயல் பட முடியவில்லை.

இந்தியாவின் தலை சிறந்த எழுத்தாளர்களில் காந்திஜி,நேருஜி, சீனிவாச சாஷ்திரி ஆகிய வரிசையில் அம்பேத்கரும் இணையவேண்டியவர்.ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது,இந்திய சமுதாயத்தின் சமூகவியலில் ஏன்? எப்படி? எதனால்? என இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு கலங்கரை விளக்கமாக இன்று மட்டும் இல்லாமல்,என்றும் நிற்பவர் "அம்பேத்கர்" வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்" என்று அம்பேத்கர் கூறியது வெறும் வாய்வழியாக மட்டும் சொல்லவில்லை,அதனை தன் வாழ்வில் சாதித்தும் காட்டியுள்ளார்.

11/08/2020

சுற்றுச்சூழல் தாக்க விதிகள் திருத்த அறிவிக்கை வரைவு 2020 -பற்றிய கருத்தைப் பதிவு செய்ய இன்று #இறுதி_நாள்_11_08_2020.
ஆகவே உடனடியாக உங்கள் பெயரை கீழ்க்கண்ட கடிதத்தில் சேர்த்து உடனடியாக மின்னஞ்சல் முகவரி:

[email protected]

என்ற முகவரிக்கு இன்று உடனடியாக அனுப்புங்கள்.
இது நமது கடமை.

_பேராசிரியர் த. செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு.

From
*************
*************

To
Honorable Minister for Environment, Forest and Climate Change,
Union Government of India,
New Delhi.
email: eia2020-moefcc .in

Respected Sir,

Sub: requesting the withdrawal of the Draft EIA Notification -2020 at the initial stage -regarding

We send this letter to you and unequivocally request that the Draft EIA- 2020 Notification be withdrawn on account of how destructive it can prove to be for the ecology and the people of every part of the country, India.

The proposed notification relaxes various guidelines, restrictions and safeguards which so far protected nature and livelihood of the people. This Draft is against the scope and spirit of section -3 of the Environmental Protection Act -1986. It is favourable to industrial and corporate interest and opens the door for corporates' ravages of natural resources. This is very well made clear by the allowance of post- facto clearances and the non-requirement of EIA for B2 projects, which include harmful projects like tanneries, chemical manufacturing units, petrochemical Industries, expansion of highways and river valley projects. When there is nothing for the protection of environment, it has everything to let loose the corporates and nature destructors to prey upon the the age-old wealth of nature, which would speed up climate change and bring total destruction.

We seek the withdrawal of the Draft Environment Impact Assessment Notification -2020 at the initial stage itself. The EIA Notification -2020 supersedes and replaces the EIA Notification -2006 and looses all the environmental norms to make it easy for the corporates to get destructive Industries started. We oppose the Draft Environment Impact Assessment Notification -2020 and request you to give it up, in toto.

The new amendment poses a serious threat to the environment and Society by giving free rein to several destructive industries.
The Draft Notification intends to bring in amendments such as post -facto grant of approval and exemption of several large Industries from Public Hearings and eases procedure for clearances. This amendment legitimises environmental destruction.

This is against the basic democratic principles. This attempts to hide the potential impact and remedial measures, if any, from the people of the region going to be affected.

It denies the opportunity to know the environment impact, impact management plan and record the objections of the people of the region.

The Public Consultation process is diluted. The Draft proposes to expand the list of Projects that do not require Public Consultation for EC. This undermines the rights of the people to know what is going to happen to them in the future.

With all our safeguards, we cannot avoid environmental degradation and accidents in which a number of people often get killed. The Union Environment Ministry should realise the fact that it tweaked the EIA norm in January 2020 which exempted Oil Companies for setting exploratory drilling wells from seeking an environmental clearance. The result is the Oil India Limited well blow out and the death of 12 persons and evacuation of 1500 families, on 8 June in Assam

The Government should realise the fact that by easing the environmental norms, it is putting the people in constant danger and forfeiting the Right to Live from the people. We clearly state that we don't want your development projects at the cost of our lives, livelihood and safe environment, in the pretext of fast -tracking the development projects.

So, we request you to kindly withdraw the Draft EIA Notification - 2020, right now.
Thanking you,
yours sincerely,
*******

Photos from தமிழக மக்கள் கழகம் - Thamizhaga Makkal Kazhagam's post 25/07/2020

EIA2020 EIA2020 னு பேசிக்கிட்டு இருக்காங்களே அப்படினா என்னனு கேட்பவர்களுக்கு இப்பதிவு........

சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment) என்றால் என்ன அதிலுள்ள பிரச்சினைகள் என்னென்ன? இந்தக் கட்டுரையில் தெளிவாகப் பார்க்கலாம்.

2020ஆம் ஆண்டு தொடங்கியது முதலே உலகத்துக்கு கொரோனாவைத் தவிர வேறெந்த பிரச்சினையும் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், இந்தியாவுக்குள் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கிய மார்ச் மாதத்தில், நாம் கவனிக்காமல் விட்ட ஆபத்துகளில் ஒன்றாக சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 இருக்கிறது.

கொரோனா ஊரடங்கால் உலகத்தின் சூழலியல் வெகுவாக சீரடைந்து வந்த நிலையில், இந்தியாவின் சூழலியலைக் கண்டுகொள்ளாமல், முதலீட்டை முன்னிலைப்படுத்தும் விதமான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு வெளியாகியுள்ளது என்ற விவகாரம் பரவலாகி வருகிறது.

சூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?

சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித்திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்று அழைக்கப்படுகிறது.
1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நடைமுறையில் இருக்கின்றது. தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இதன் மீதான மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

இதில் என்ன பிரச்சினை?

சூழலியல் தாக்க மதிப்பீட்டின் நோக்கம் சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பதுதான். அதற்கு மக்கள் கருத்து, நிபுணர் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது இந்தச் சட்டம். ஆனால், தற்போது வந்திருக்கும் வரைவு சூழலியல் பாதுகாப்பு என்பதைக் கைவிட்டு முதலீட்டை முதன்மைப்படுத்துகிறது என்பதுதான், இந்த வரைவின் மீது சூழலியாளர்களின் முதல் பார்வை.

இந்த வரைவின் செயல் வடிவம் பல்வேறு தொழிற்சாலைகளை, அவை தொடங்கப்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கையாகச் செய்யும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதே போல அனுமதி பெறுவதையும் தொழிற்சாலைகளுக்கு எளிமையாக்கி இருக்கிறது.

2006ஆம் ஆண்டுக்குப் பிறகான சூழலியல் தாக்க மதிப்பீட்டின்படி, இரண்டு அனுமதிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இது அனுமதி வழங்கும் அதிகாரத்தை மாநில மற்றும் மத்தியக் குழுக்கள் என இரண்டு அமைப்புகளிடம் ஒப்படைத்தது.

ஆனால், தற்போதைய வரைவின்படி இனி, இரண்டு விதமான சுற்றுச்சூழல் அனுமதிகள் வழங்கப்படும். ஒன்று, வல்லுநர் குழு அமைக்கபட்டு குறிப்பிட்ட திட்டம் குறித்த ஆய்வுகளை நடத்திய பின்னர் சூழலியல் அனுமதி வழங்குவது. இரண்டாவது, எந்தவித வல்லுநர் குழு ஆய்வுமின்றி அனுமதி கொடுத்துவிடுவது.

இது எந்தவிதத்திலும் மக்கள்நலனுக்கு ஆதாரவனதாகவோ, சூழலியல் பாதுகாப்புக்கு உகந்ததாகவோ இருக்காது என்பது சூழலியல் ஆர்வலர்களின் முதன்மையான குற்றச்சாட்டு.

அதேபோல, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, தன்னுடைய செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்த விதிமுறையை, ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதுமென்று இந்தப் புதிய சட்டவரைவு மாற்றியுள்ளது.

இந்த நீண்ட அவகாசம், திட்டத்திலுள்ள சூழலியல் மற்றும் சமூக விளைவுகளை மறைக்கப் போதுமானது என்றும் அஞ்சுகின்றனர்.

இவ்வரைவு மாற்றத்தினால் சதுப்பு நிலங்களுக்கு ஆபத்து, சதுப்பு நிலக் காடுகளில் மணல் போட்டு சமன்படுத்துவதற்கு அனுமதியோ சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்ய வேண்டியதில்லை என்று கூறும் பிரிவுகளும் இந்த வரைவில் இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில், சூழலியல் நோக்கில் பார்த்தால், ஒரு சூழலின் நீர்வளத்துக்கு பெரும் ஆதாரமாக விளங்குபவை சதுப்புநிலப்பகுதிகள் தான்.

வறண்ட புல்வெளிக் காடுகள், இந்தப் புதிய சட்ட வரைவினால் தரிசு நிலங்களாகக் கணக்குக் காட்டப்பட்டு கார்ப்பரேட் தொழில் துறைகளுக்குத் திறந்துவிடப்படும்.

இதுபோன்ற சூழல் விரோத அம்சங்கள் இருப்பதால் சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 சூழலியலாளர்களால் எதிர்க்கப்படுகிறது. இந்த வரைவின் மீதான மக்கள் கருத்துக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

தயவுசெய்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு நமது சூழலியலை சிதைக்கவல்ல சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு மாற்றத்தை எதிர்த்து குரல் கொடுப்போம்
நாம் வாழும் நமது சூழலை மேலும் சிதையாமல் பாதுகாப்போம்.

வெ. கார்த்திக்
தமிழக மக்கள் கழகம்

15/07/2020

இன்று அய்யா கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம்

அவரை வணங்கி அவர் புகழை போற்றி அவர் வழி நடக்க தமிழக மக்கள் கழகம் உறுதியேற்கிறது.

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 15, 1903

இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா

பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.

பிறப்பு:
கு. காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:
டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.

மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:
‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

தமிழக முதல்வராக காமராஜர்:
1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதல்வராக காமராஜர் ஆற்றியப் பணிகள்:
காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

தொழில்துறையின் வளர்ச்சிக்காக காமராஜர் மேற்கொண்ட திட்டங்கள்:
காமராஜர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில் துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கினார். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். காமராஜர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர்:
மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான் (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.

இறப்பு:
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?
இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், ‘பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும்’, ‘படிக்காத மேதையாகவும்’, ‘கல்வியின் நாயகனாகவும்’, ‘மனிதநேயத்தின் மறுஉருவமாகவும்’ திகழ்ந்தார். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக வாழ்ந்துக் காட்டியவர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.

“உன்னைப்போல அரசியல்வாதி உலகில் இல்லை, நிச்சயமாக உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை!!!”

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


42/41 Railway Border 2nd Street, Saidapet
Chennai
600015