விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Share

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம்

VCK , Viduthalai Chiruthaigal Katchi Official Page

26/10/2025

CCTV காட்சி -1

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வாகனத்தை வழிமறித்து வன்முறையில் ஈடுபட முயன்ற ரவுடி ராஜிவ்காந்தியை இயக்கிய பாசிச பாஜகவின் சதித்திட்டம் அம்பலம்..

09/10/2025

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் மீது திட்டமிட்டே வன்முறையை நிகழ்த்த வேண்டுமென வந்த ொறுக்கி_ராஜீவ்காந்தி யாரையோ கூப்பிட்டு வீடியோ எடுக்கச் சொல்லும் காட்சி..

18/07/2025
06/07/2025

பெரிதும் வருந்துகிறேன்!
LGBTQ+ தோழர்களுக்கு ஒரு விளக்கம்!
-------------------------------------

கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை - வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த "மாணவர் பாராளுமன்றம்" என்னும் நிகழ்வின்போது மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடையளித்தேன். அதில் ஒரு மாணவர் எழுப்பிய வினாவுக்கு நான் அளித்த விடை, பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப்படுகிறேன். உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய அக்கருத்து அவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 இல் சட்டப் பேரவையில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சியில் திருநங்கையருக்கென அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே உண்டு. எப்போதும் LGBTQ + தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும்.

எனவே, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்.
நிறுவனர்- தலைவர், விசிக.

05/07/2025

திருச்சி விமான நிலையத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில்....

05/07/2025

பெருங்கவிக்கோ அவர்களுக்கு வீரவணக்கம்!
-------------------------------------------
பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் (91) அவர்களின் மறைவு பெரும்அதிர்ச்சியளிக்கிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிப்பட்டாளத்தின் தளபதிகளுள் ஒருவர்.
நின்ற இடத்தில் நினைத்த நொடியில் மரபு கவிதை படைப்பதில் பேராற்றல் மிக்கவர்.
' பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தை' நிறுவி அதன்மூலம் உலகத்தமிழர்களை ஒருங்கிணைக்கும் அளப்பரிய பணிகளை அரை நூற்றாண்டுக்கும்மேலாக மேற்கொண்டவர். 'தமிழ்ப்பணி' என்னும்இதழின் வழி அவர் ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகள் போற்றுதலுக்குரியது.

சட்டக்கல்லூரியில் நான் பயின்ற காலத்திலிருந்து அவரை அறிவேன். அவருடன் தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன். காணும்போதெல்லாம் என்னைக் கட்டித்தழுவி களிப்புற வாழ்த்தியவர். "தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உமது பணிகள் தொடரட்டும்" என்று அவ்வப்போது என்னை வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியவர்.
எளியோரையும் இளையோரையும் மதிப்புடன் வணங்கிப் பேரன்பு செலுத்தும் பெருந்தன்மை கொண்டவர். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகப் பாடியவர். அதற்கென எண்ணற்றப் போராட்டங்களில் நம்மோடு சேர்ந்து களமாடியவர். தமிழ் செம்மொழியாகவேண்டுமென தலைநகர் தில்லியில் தமிழ் உணர்வாளர்களுடன் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டவர். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

அவரது மறைவு தமிழுக்கும் தமிழர்களுக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விசிக

28/06/2025

அணு ஆயுதங்களால் தகர்க்க முடியாத ஒன்று இந்தியாவில் சாதிய கட்டமைப்பு..
- #தொல்காப்பியன்_திருமாவளவன்..

27/06/2025

இன்றைக்கும் நாம் கொடி ஏற்றுவதற்கு போராட வேண்டி இருக்கிறது..

19/06/2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chennai